- Saturday
- May 16th, 2026
தெற்கு வங்கக்கடலில் புதிதாக உருவாகியுள்ள காற்றழுத்தம் காரணமாக, இலங்கையிலும் தென்னிந்தியாவிலும் வெள்ள ஆபத்து ஏற்படலாம் என்று காலநிலை தொடர்பான இணையத்தளம் முன்னெச்சரிக்கை விடுத்துள்ளது. வங்கக் கடலில் இலங்கைக்கு கிழக்கே உருவாகியிருக்கும் இந்த காற்றழுத்தம், தீவிரம் பெற்று, இலங்கை மற்றும் தென்னிந்தியாவை நோக்கி நகரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், இலங்கையிலும், தென்னிந்தியாவிலும், இந்த வார இறுதியில் அல்லது...
நீண்டகாலமாக இலங்கைச் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்கக் கோரி நாளை 13ஆம் திகதி வடக்கு, கிழக்கில் பூரண கடையடைப்புப் போராட்டம் நடைபெறவுள்ளது. இப் போராட்டத்திற்கு அரசியல் கட்சிகளும் பொது அமைப்புக்களும் அழைப்பு விடுத்துள்ளன. அனைத்துத் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தும் விதமாக நாளை வெள்ளிக்கிழமை வடக்கு கிழக்கு மாகாணங்களில் கடையடைப்பு...
யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்ட இரண்டு கைதிகள், புதன்கிழமை (11) இரவு தப்பி ஓடியுள்ளனர். தப்பி ஓடிய கைதிகளை நாவற்குழிப் பகுதியில் வைத்து சாவகச்சேரி பொலிஸார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இருவரும் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக இன்று வியாழக்கிழமை (12) அனுமதிக்கப்பட்ட நிலையில், அங்கிருந்தும் அவர்கள் தப்பித்து ஓடியுள்ளனர். இந்தக் தகவலை சாவகச்சேரி...
சாவகச்சேரி பிரதேசத்திலுள்ள வர்த்தக நிலையங்களுக்குச் சென்று, நாளை வெள்ளிக்கிழமை (13) ஹர்த்தால் அனுஷ்டிக்குமாறு துண்டுப்பிரசுரம் விநியோகம் செய்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியைச் சேர்ந்த இருவரை கைது செய்துள்ளதாக சாவகச்சேரி பொலிஸார் கூறினர். அரசியல் கைதிகளை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி...
யாழில் முதற்தடவையாக பாடசலைகளில் மாணவர் பாராளுமன்றத் தேர்தல் நடைமுறை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. முதற்தடவையாக இயங்கவுள்ள மாணவர் பாராளுமன்றத்திற்கான முதலாவது தேர்தல் நேற்று [11] யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரியில் இடம்பெற்றது. எதிர்காலத்தில் மாணவர்களிற்கிடையே வன்முறையற்ற, ஜனநாயக முறையில் பிரச்சனைகளை அணுகுவதை ஊக்குவிப்பதை நோக்காக கொண்டு இந்த செயற்திட்டம் வடமாகாணத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. யாழ் இந்து மகளிர் கல்லூரி மாணவர்...
பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்படக்கூடிய சீருடைக்குப் பதிலாக 2016ம் ஆண்டு முதல் கூப்பன் வழங்குவதற்கு கல்வியமைச்சு தீர்மானித்துள்ளது. நேற்று பிற்பகல் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக கல்வி அமைச்சின் செயலாளர் டபிள்யுபி. எம். பந்துசேன தெரிவித்தார். எனினும் அவற்றை எவ்வாறு வழங்குவது என்பது தொடர்பான மேலதிக செயற்பாடுகள் பற்றி இறுதி முடிவு எட்டப்படவில்லை என்று...
வெங்காயச் செய்கையில் ஈடுபட்ட யாழ்.மாவட்ட விவசாயிகள் தற்போது பெய்து வரும் மழை காரணமாக நஷ்டங்களை எதிர்நோக்கியுள்ளனர். பெருமளவான வெங்காயச் செய்கையானது அழிவடைந்துள்ளது. இது தொடர்பில் வெங்காயச் செய்கையாளர் ஒருவர் கூறுகையில், 'நான் எனது தோட்டத்தில் 250 கன்றுகளை நாட்டியிருந்தேன். இன்னும் 20 நாட்களுக்கு பின்னர் மழை பெய்திருந்தால் முழுமையான அறுவடையைப் பெற்றிருப்போம். அதனால் எனக்கு 1½...
நம்பிக்கை மோசடி செய்து நகைகளை விற்ற கூவில் கீரிமலை பகுதியினை சேர்ந்த 27 வயதுடைய பெண்ணை, நேற்று புதன்கிழமை (11) இரவு கைது செய்துள்ளதாக இளவாலை பொலிஸார் தெரிவித்தனர். திருமண வீடு, ஏனைய வைபவங்களுக்கு அணிந்து விட்டுத் தருவதாகக் கூறி, அயல் வீடுகள் இரண்டில் கடந்த 7ஆம் திகதி நகைகளை குறித்த பெண் வாங்கியுள்ளார். வாங்கிய...
யாழ்.மாவட்டத்திலுள்ளவர்களில் 16.4 வீதமானவர்களுக்கு நீரிழிவு நோயுள்ளதாக ஆய்வுகள் மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை சிறுநீரக வைத்திய நிபுணர் ரி.பேரானந்தராஜா தெரிவித்தார். நீரிழிவு தொடர்பில் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஒழுங்கு செய்யப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில், இலங்கையில் வடக்கு, கிழக்கு...
இளவாலை சென்.ஜேம்ஸ் பகுதியில், 12 நாட்களுக்கு முன்னர், குழந்தையொன்றை பிரசவித்த தாய், நெஞ்சுவலி காரணமாக நேற்று புதன்கிழமை (11) உயிரிழந்துள்ளார். அதே பகுதியைச் சேர்ந்த ஜேசப் மரியகஸ்டா (வயது 35) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். அவரது சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், இது தொர்புடைய விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
அரசியல் கைதிகள், தங்கள் விடுதலையை வலியுறுத்தி இங்கு உண்ணாவிரதம் இருக்க, அவர்களை 7ஆம் திகதிக்கு முன்னர் விடுவிப்பதாக நேரில் சென்று உறுதிமொழி கூறிய எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன், இந்தியா, டெல்லியில் இருப்பது சரியில்லையென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். நீர்வேலியில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் நேற்று புதன்கிழமை (11)...
கோப்பாய் கிறிஸ்தவக் கல்லூரிக்கு அண்மையில் வீதியில் நடந்து சென்றவரை வழிமறித்த இருவர், அவரிடம் தீப்பெட்டி கேட்டபின்னர், அவரை கத்தியால் கீறி, கன்னத்தில் கடித்த சம்பவம் தீபாவளி தினத்தன்று நடைபெற்றுள்ளது. இதில் படுகாயமடைந்த ஐயாத்துரை ராஜசேகரம் (43) என்பவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 17 வயது மதிக்கத்தக்க இரண்டு இளைஞர்கள் இருவரே இவ்வாறு செய்துள்ளனர். இந்த...
ஐக்கிய நாடுகளின் விசேட குழுவினர் இன்று வியாழக்கிழமை காலை யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்துள்ளனர். யாழ்ப்பாணம் கோவில் வீதி நல்லூரில் அமைந்துள்ள ஐ.நா அலுவலகத்தில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உரிமைகளுக்கான அமைப்பு மற்றும் உறவினர்களுடன் அவர்கள் கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளனர். யுத்த காலத்திலும், அதற்குப் பின்னரும் யாழில் காணாமல் போனவர்களினதும், கடத்தப்பட்டவர்களினதும் உறவினர்களை குறித்த குழுவினர் சந்தித்து முறைப்பாடுகளைப் பெற்று...
தமிழ் அரசியல் கைதிகள் சிலருக்கு நேற்று கடும் நிபந்தனைகளுடன் பிணை வழங்கியுள்ள நிலையிலும் பொது மன்னிப்பு கோரிய அரசியல் கைதிகளின் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டம் 5ஆவது நாளாக இன்றும் தொடர்கின்றது. இந்த நிலையில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுவரும் வெலிக்கடை சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் அரசியல் கைதிகளில் 7 பேர் மயக்கமுற்ற நிலையில் சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்....
பாடசாலை மாணவிகள் ஏழு பேர் நடத்துனரால் பேரூந்தில் இருந்து வெளியில் தள்ளப்பட்ட சம்பவம் தொடர்பில் காவல் துறையினர் விசாரணையை ஆரம்பித்துள்ளனர். யாழிலிருந்து -திருகோணமலை நோக்கிப் பயணிக்கும் போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்ஸிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த பஸ் வவுனியா பஸ் தரிப்பிடத்தில் தரித்து நின்றபோது பஸ்ஸின் உள்ளே ஏறிய மாணவிகள் 7 பேரே இச்சம்பவத்துக்கு முகங்கொடுத்துள்ளனர்....
தீபாவளி தினமான 10-11-2015 அன்று கிளிநொச்சியில் அமைந்துள்ள செஞ்சோலை சிறுவர் இல்லத்தின் சிறுவர்கள் புத்தாடை அணிந்து மிக மகிழ்வாக தீபத்திருநாளாம் தீபாவளியை கொண்டாடினர். மகிழ்வான தீபாவளியன்று அருள்மிகு முல்லைத்தீவு வற்றாப்பளை அம்பாள் ஆலயத்தில் வழிபாடுகளை முடித்த பின்னர் சகோதர இல்லமான முல்லைத்தீவு பாரதி சிறுவர் இல்லத்தை சென்றடைந்தனர். அங்கு தமது மதிய உணவின் பின்னர் அங்கு...
கடலில் விழலாமென எதிர்பார்க்கப்படும் மர்மப் பொருள் இடைவழியில் சிதறினால் அதன் பாகங்களை தொட வேண்டாம் !!
வெள்ளியன்று முற்பகலில் தென்பகுதி கடலில் விழலாமென எதிர்பார்க்கப்படும் மர்மப் பொருள் இடைவழியில் வெடித்து சிதறினால் நிலப் பகுதியில் விழும் அதன் பாகங்களை எவரும் தொட வேண்டாம் என்று கொழும்பு பல்கலைக்கழகத்தின் பெளதீகவியல் பீட பேராசிரியரும் வான சாஸ்திர விஞ்ஞானியுமான சந்தன ஜயரட்ன நேற்று தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில்:- இலங்கையின் தென்பகுதியிலுள்ள தேவேந்திரமுனையிலிருந்து...
தமிழ் அரசி யல் கைதிகளின் விடயத்திற்கு விரைவில் நிரந்தரத் தீர்வு கிடைக்குமென தெரிவித்துள்ள அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் நாட்டிலுள்ள சிறைச்சாலைகளில் பல்வேறு சீர்திருத்தங்களை மேற்கொள்ளவுள்ளதாகவும் தெரிவித்தார். சிறைச்சாலைகள் விவகார அமைச்சராக நேற்று பதவியேற்ற பின்னர் கருத்து வெளியிடுகையிலேயே அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். நாட்டிலுள்ள சிறைச்சாலைகளில் பல்வேறு குறைபாடுகள் காணப்படுவதாக கூறப்படுகின்றது. அவை தொடர்பில் விசேட கவனமெடுக்கப்படவுள்ளன....
யுத்தத்தால் இடம்பெயர்ந்த வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த மக்களை மீளக் குடியேற்றுவது தொடர்பில் எழுந்துள்ள செயன்முறை நெருக்கடிகளுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும். அவற்றுக்கான தீர்வுகளையும், யோசனைகளையும் முன்வைக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உரிய அதிகாரிகளுக்கு பணித்துள்ளார். வடக்கு கிழக்கு மாகாணங்களில் மீள்குடியேற்றம் மேற்கொள்வது தொடர்பில் ஜனாதிபதி செயலகத்தில் நேற்று அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே...
இலங்கையில் அவன்கார்ட் நிறுவனத்தை உடனடியாக தடை செய்து அதனுடன் தொடர்புடைய அனைத்து வர்த்தக நடவடிக்கைகளையும் கடற்படையினரிடம் கையளிக்கும்படி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார் என அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாரட்ன பி.பி.சிக்குத் தெரிவித்துள்ளார். அவன்கார்ட் விவகாரம் தொடர்பில் முடிவு ஒன்றை எட்டுவதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடந்த விசேட கலந்துரையடலையடுத்து இந்த தீர்மானம்...
Loading posts...
All posts loaded
No more posts
