மழையினால் வெங்காயச் செய்கையில் ஈடுபட்ட விவசாயிகள் பாதிப்பு!

வெங்காயச் செய்கையில் ஈடுபட்ட யாழ்.மாவட்ட விவசாயிகள் தற்போது பெய்து வரும் மழை காரணமாக நஷ்டங்களை எதிர்நோக்கியுள்ளனர்.

பெருமளவான வெங்காயச் செய்கையானது அழிவடைந்துள்ளது.

இது தொடர்பில் வெங்காயச் செய்கையாளர் ஒருவர் கூறுகையில்,

‘நான் எனது தோட்டத்தில் 250 கன்றுகளை நாட்டியிருந்தேன். இன்னும் 20 நாட்களுக்கு பின்னர் மழை பெய்திருந்தால் முழுமையான அறுவடையைப் பெற்றிருப்போம்.

அதனால் எனக்கு 1½ இலட்சம் ரூபாய் வருமானம் கிடைத்திருக்கும். ஆனால், மழை முந்திவிட்டதால் எனது வருமானம் பாதிக்கப்பட்டுள்ளது’ என்றார்.

Related Posts