Ad Widget

பாடசாலை மாணவர்களுக்கு சீருடை துணிகளுக்கு பதிலாக கூப்பன்?

பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்படக்கூடிய சீருடைக்குப் பதிலாக 2016ம் ஆண்டு முதல் கூப்பன் வழங்குவதற்கு கல்வியமைச்சு தீர்மானித்துள்ளது.

நேற்று பிற்பகல் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக கல்வி அமைச்சின் செயலாளர் டபிள்யுபி. எம். பந்துசேன தெரிவித்தார்.

எனினும் அவற்றை எவ்வாறு வழங்குவது என்பது தொடர்பான மேலதிக செயற்பாடுகள் பற்றி இறுதி முடிவு எட்டப்படவில்லை என்று அவர் தெரிவித்தார்.

கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசமின் ஆலோசனைக்கமைய இந்த புதிய திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதாக அவர் தெரிவித்தார்.

இதனூடாக தரமான துணி வகைகளை கொள்வனவு செய்து அதனை தைத்து கொள்ள முடியுமான வகையில் இந்த கூப்பன் வழங்கப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதுவரை வழங்கப்படுகின்ற சீருடை துணிகளின் தரத்தில் ஏற்பட்டுள்ள பிரச்சினை காரணமாகவே இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Related Posts