Ad Widget

அவன்கார்ட் நிறுவனத்துக்கு இலங்கை அரசு தடை விதித்தது!

இலங்கையில் அவன்கார்ட் நிறுவனத்தை உடனடியாக தடை செய்து அதனுடன் தொடர்புடைய அனைத்து வர்த்தக நடவடிக்கைகளையும் கடற்படையினரிடம் கையளிக்கும்படி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார் என அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாரட்ன பி.பி.சிக்குத் தெரிவித்துள்ளார்.

அவன்கார்ட் விவகாரம் தொடர்பில் முடிவு ஒன்றை எட்டுவதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடந்த விசேட கலந்துரையடலையடுத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக அவர் கூறினார்.

அவன்கார்ட் நிறுவனம் சட்டவிரோத செயலில் ஈடுபட்டது இந்த கூட்டத்தில் தெரியவந்துள்ளதாகவும், இதனால் ஜனாதிபதி இந்த தீர்மானத்தை எடுத்துள்ளார் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

அவன்கார்ட் ஆயுதக்கப்பல் விவகாரம் கடந்த சமீபகாலமாக பரவலாக பேசப்பட்டுவந்த நிலையில், இது தொடர்பில் அமைச்சர் திலக் மாரப்பன மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டதையடுத்து அவர் தனது அமைச்சு பதவியையும் ராஜினாமா செய்தார்.

இந்த பின்னணியில் அவன்காட் விவகாரம் தொடர்பில் ஒரு முடிவுக்குவரும் நோக்கில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்றய கூட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தார்.

இந்த கூட்டத்தில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் , பொலிஸ் மா அதிபர் , அமைச்சர்கள் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.

Related Posts