12 நாட்களுக்கு முன்னர் குழந்தை பிரசவித்த தாய் உயிரிழப்பு

இளவாலை சென்.ஜேம்ஸ் பகுதியில், 12 நாட்களுக்கு முன்னர், குழந்தையொன்றை பிரசவித்த தாய், நெஞ்சுவலி காரணமாக நேற்று புதன்கிழமை (11) உயிரிழந்துள்ளார்.

அதே பகுதியைச் சேர்ந்த ஜேசப் மரியகஸ்டா (வயது 35) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

அவரது சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், இது தொர்புடைய விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Related Posts