Ad Widget

அமரர் நடராஜா ரவிராஜின் நினைவுப் பேருரை

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அமரர் நடராஜா ரவிராஜின் நினைவுப் பேருரை யாழ்.சாவகச்சேரி நகரசபை பொன்விழா மண்டபத்தில் நேற்று பிற்பகலில் இடம்பெற்றது.

இதன்போது அமரர் ரவிராஜின் உருவப் படத்திற்கு தமிழரசுக் கட்சியின் தலைவரும், யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன், வடமாகாண அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம், வடமாகாண சபை எதிர்கட்சித் தலைவர் எஸ்.தவராசா, வட மாகாண சபை உறுப்பினர்கள் பசுபதி அரியரட்ணம், கஜதீபன் ஆகியோரும், பொதுமக்களும் ரவிராஜின் உருவப்படத்திற்கு மலர்தூசி அஞ்சலி செலுத்தினர்.

நிகழ்வில் உரையாற்றிய தமிழரசுக் கட்சியின் தலைவரும், யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா,

அரசு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறியதன் காரணமாகவே அரசியல் கைதிகள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.

அவர்களது போராட்டம் நியாயமானது. அரசியல் கைதிகள அனைவரும் ஓரிரு வராத்தினுள் முற்றாக விடுதலை செய்யப்பட வேண்டும்.

அவர்களுக்கு ஆதரவாக எதிர்வரும் 13 ஆம் திகதி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, சிவில் சமூக அமைப்புகள் மற்றும் வர்த்தக சங்கங்கள் இணைந்து பொது வேலைநிறுத்தப் போராட்டத்தை வடக்கு கிழக்கில் முன்னெடுக்கவுள்ளோம் என்றார்.

Related Posts