Ad Widget

பாடசாலை ஆசிரியைகள் தொப்புள் தெரிய சேலை அணியக்கூடாது! -மேல்மாகாண முதலமைச்சர்

பாடசாலை ஆசிரியைகள்  தொப்புள் தெரிய சேலை அணியக்கூடாது என்ற விதியை கொண்டுவரப்போவதாக    மேல்மாகாண முதலமைச்சர் இசுரு தேவப்பிரிய விடுத்திருந்த அறிக்கை தொடர்பில் இலங்கை ஆசிரியர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.
பாடசாலை மாணவிகள் அணியும் நடன ஆடையைக் கூட தொப்புள் தெரிவது போல அணிய அனுமதிக்கப்போவதில்லை என்று  முதலமைச்சர் விடுத்திருந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.
தாம் அணியும் ஆடைகள் தொடர்பில் ஆசிரியைகள் தீர்மானிப்பார்கள் என்றும் இதனை முதலமைச்சர் தீர்மானிக்கத் தேவையில்லை என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
முதலமைச்சரின் அறிக்கைக்கு நாங்கள் கண்டனம் தெரிவிக்கின்றோம். ஆசிரியைகள் தொப்புள் தெரியாமல் ஆடை ஆணிவது தொடர்பில் நாங்கள் எந்தத் தவறையும் காணவில்லை. அது அமைச்சரின் தரப்புக்கு தவறாக தோன்றுமாக இருந்தால் அங்கு தவறுள்ளது. இந்தத் தொப்புள் பிரச்சினை தானா மேல் மாகாணத்தில் இன்று முக்கிய பிரச்சினையாகவுள்ளது என அமைச்சரிடம் கேட்க விரும்புகின்றேன்’ என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, இந்த விடயம் தொடர்பில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப் போவதில்லை என்றும், இந்த விடயத்தில் எந்தவிதமான வலிமையான காரணமும் இல்லாததால் ஆசிரியைகளின் ஆடை தொடர்பில் எந்தவித விதிமுறைகள் மற்றும் தீர்மானமும் எடுக்க போவதில்லை என கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

Related Posts