- Friday
- November 21st, 2025
போருக்குப் பின்னர் வடக்கில் அதிகளவு மதுபானம் நுகரப்படுவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா கவலை தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் நேற்று உரையாற்றிய அவர், 2009ம் ஆண்டு போர் முடிவுக்குக் கொண்டு வரப்பட்ட பின்னர் மதுபான நுகர்வு அதிகரித்துள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தில் நூற்றுக்கு 34 வீதத்தில் மதுபான பயன்பாடு அதிகரித்துள்ளது. போர் காரணமாக அழுத்தங்களை...
தமிழ் அரசியல் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு அளிப்பது குறித்து விரைவில் தீர்க்கமான முடிவொன்று அறிவிக்கப்படுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் தெரிவித்துள்ளார். தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கும் இடையிலான சந்திப்பு நேற்று நடைபெற்றது. இதன்போதே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கண்டவாறு தெரிவித்துள்ளதாக தமிழ்த் தேசியக்...
தமிழ் ஊடகங்கள் மீதான வன்முறைகள் குறித்து உரிய விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்று நேற்று நடந்த வடக்கு மாகாணசபையின் மாதாந்த அமர்வில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. உறுப்பினர்களான விந்தன் கனகரத்தினம், அ.பரஞ்சோதி ஆகியோரால் இது தொடர்பான பிரேரணை கொண்டு வரப்பட்டு அனைவரது ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது. கடந்த அரசு பதவியிலிருந்தபோது நடைபெற்ற அரசியல்வாதிகள் ஊடகவியலாளர்கள் மற்றும் உயர் அதிகாரிகளின்...
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் பொதுச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான டக்ளஸ் தேவாநந்தாவுக்கு எதிராக பாரிய ஊழல் மோசடிகள் மற்றும் அதிகாரத் துஷ்பிரயோகங்கள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், உதயன், சுடரொளி பத்திரிகைகளின் உரிமையாளருமான ஈஸ்வரபாதம் சரவணபவனே இந்த முறைப்பாட்டை பதிவுசெய்துள்ளார். இலங்கை ஒலிபரப்புக்...
தமிழ் அரசியல் கைதிகளில் 32 பேர் எதிர்வரும் திங்கட்கிழமை நீதிமன்ற நடவடிக்கைகளின் மூலம் விடுதலை செய்யப்படலாம் என, எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். மேலும் 30 பேர் எதிர்வரும் 20ம் திகதிக்கு முன்னதாக விடுதலை செய்யப்படவுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் வடக்கு மாகாண சுகாதார, புனர்வாழ்வு அமைச்சர் பத்மநாதன் சத்தியலிங்கம் அவர்களினால் நேற்று மாகான சபையில் சமர்பிக்கப்பட்ட விசேட கவனயீர்ப்பு மசோதா கீழே தரப்பட்டுள்ளது. வைத்தியகலாநிதி.பத்மநாதன் சத்தியலிங்கம், சுகாதார அமைச்சர், வடக்கு மாகாணம். 05.11.2015 கௌரவ அவைத்தலைவர் அவர்களுக்கு, வடக்கு மாகாண சபை. தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பான...
வடமாகாண விவசாய அமைச்சால் ஏற்பாடு செய்யப்பட்ட மலர்க்கண்காட்சி கார்த்திகைப்பூ சூடி இன்று வியாழக்கிழமை (05.11.2015) நல்லூர் சங்கிலியன் éங்காவில் கோலாகலமாக ஆரம்பமாகியுள்ளது. வடமாகாண கல்வி அமைச்சர் த.குருகுலராஜா பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு இதனைத் தொடக்கி வைத்துள்ளார். வடமாகாணசபை கார்த்திகை மாதத்தை வடமாகாண மரநடுகை மாதமாகக் கடைப்பிடித்து வருகிறது. இதன் நடவடிக்கைகளில் ஒன்றாக நல்லூர் சங்கிலியன் பூங்காவில்...
தேசிய உயர் கல்வி கணக்கியல் டிப்ளோமாவை பட்டப்படிப்பிற்கு சமப்படுத்துவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது என உயர்கல்வி மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சு தெரிவித்துள்ளது. உயர்கல்வி மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சர் லஷ்மன் கிரியெல்ல சமர்ப்பித்த முன்மொழிவிற்கே அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. குறித்த டிப்ளோமாவை பட்டப்படிப்பிற்கு சமமற்றதாக்குவதற்கு அரசு மேற்கொண்ட நடவடிக்கைக்கு பின்னர் ஏற்பட்ட பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுக்கொடுக்கும் வகையில்...
கொடிகாமம் பகுதியில் கடந்த 1ம் திகதி காணாமல்போனதாக கூறப்பட்ட 15 வயது சிறுமி திருகோணமலை பகுதியிலிருந்து நேற்றய தினம் மீட்கப்பட்டு யாழ்.மாவட்டத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளதுடன், சிறுவர் இல்லத்தில் சேர்க்கப்பட்டுள்ளார். கடந்த 1ம் திகதி கோவிலுக்கு சென்றிருந்த நிலையில் குணரத்தினம் சஞ்சீவினி(15) என்ற பாடசாலை மாணவி காணாமல்போயுள்ளதாக பெற்றோர் கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு கொடுத்திருந்தனர். இந் நிலையில்...
நயினாதீவில் முன்னொரு காலத்தில் இருந்த ரஜமகா விகாரை வளாகத்தில் மீண்டும் விகாரை அமைக்கப்பட்டு, கலசங்கள் மற்றும் ஆசனங்கள் அங்கு வைக்கப்பட்டுள்ளன. நயினாதீவில், நாக விகாரை என்னும் விகாரையொன்று துறைமுகத்தை அண்டியதாக அமைந்துள்ளது. இந்நிலையில், இந்த விகாரைக்கு சான்றாக அமையும் பழைய விகாரையானது, நயினாதீவு 1ஆம் வட்டாரத்தில் அமையப்பெற்றிருந்தது. இந்நிலையில் பழைய இடத்திலும் ஒரு விகாரையை அமைக்கும்...
வட மாகாணத்தில் லங்கா பெற்றோல் சராசரி நாளாந்த பாவனையானது கடந்த 2011ஆம் ஆண்டு முதல் இதுவரையில் அதிகரித்த வண்ணமுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் வடபிராந்திய அலுவலக தகவல்கள் தெரிவிக்கின்றன. 92 ஒக்ரேய்ன் பெற்றோல் 2011ஆம் ஆண்டு நாளாந்தம் 70,122 லீற்றர் நுகரப்பட்டது. இது 2012ஆம் ஆண்டு 84,751 லீற்றராகவும் 2013ஆம் ஆண்டு 88,946 லீற்றராகவும், 2014ஆம்...
நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் கொலை சம்பந்தமாக கைது செய்யப்பட்ட கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் என்கிற பிள்ளையான் விடுதலை புலிகள் அமைப்பை மீண்டும் கட்டி எழுப்பும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளாரா என்பது குறித்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக போலீசார் நீதிமன்றத்தில் கூறியிருக்கிறார்கள். பிள்ளையானை பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொள்ள...
அரசாங்க தொழிலில் இணைத்துக்கொள்வதற்கான வயதெல்லையை 10 வருடத்தால் அதிகரிக்க அனுமதி பெறுவதற்கான முன்மொழிவு அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது என சுகாதார, போஷாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்தார். அண்மையில் 'கஜசவ் மித்துரோ" அமைப்பின் ஏற்பாட்டில் மதுகம சிபிகே மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்....
நாட்டின் வட,வடமத்திய, கிழக்கு மாகாணங்களில் இன்று (05) இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியம் அதிகமாகவே காணப்படுகிறது என அவதான நிலையம் தெரிவித்துள்ளது. அத்துடன் பெரும்பாலான பிரதேசங்களில் பிற்பகல் 2 மணிக்கு பின்னர் இடியுடன் மழை பெய்வதோடு கிழக்கு கடலோரங்களில் காற்றுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சந்தர்ப்பம் காணப்படுகிறது எனவும் மின்னல் அபாயங்களும் ஏற்படக்கூடுமெனவும் அதனால்...
இரைப்பை நோய் காரணமாக சிகிச்சை பெறுவதற்காக நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நோயாளியின் வலது கையின் இரண்டு விரல்கள் (பெருவிரல் மற்றும் ஆள்காட்டி விரல்) வெட்டி அகற்றப்பட்டு அவர், வீட்டுக்கு அனுப்பப்பட்டுள்ள சம்பவமொன்று தங்கொட்டுவ கோணவில பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவத்துக்கு தங்ககொட்டுவ, கோணவில மனந்துறை மாவத்தையை வசிப்பிடமாகக் கொண்ட இரு பிள்ளைகளின் தந்தையான 65...
வடக்கிலிருந்து முஸ்லிம் மக்கள் வெளியேற்றப்பட்ட சம்பவம் ஓர் இனச்சுத்திகரிப்பு எனக்கூறி சிலர் தமிழ் - முஸ்லிம் சமூகங்களுக்கிடையில் நிரந்தர பிளவை ஏற்படுத்த சதி செய்கின்றனர். ஆனால், முஸ்லிம் மக்களை முழுமையாக இந்த மண்ணில் இருந்து அகற்றும் எண்ணம் ஒருபோதும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு இருந்ததில்லையென தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்....
தமிழ் அரசியல் கைதிகள் விடயத்தில் அரசாங்கம் வழங்கிய வாக்குறுதி தற்பொழுது வரையில் ஏன் நிறைவேற்றப்படவில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் சபையில் கேள்வி எழுப்பினார். வடக்கில் பெறப்பட்ட நகைகளை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தனது பாரியார் அணிந்து கொள்வதற்கு வழங்கினாரா? எனவும் அவர் வினா தொடுத்தார். நாடாளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை...
இந்தியாவின் முன்னாள் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணனை சென்னையில் இலங்கை அகதிகள் தொடர்பான கருத்தரங்கின் முடிவில், பார்வையாளர்களில் ஒருவர் காலணியால் தாக்கியுள்ளார்.சென்னையிலிருந்து வெளியாகும் "தெ ஹிந்து" நாளிதழ் குழுமத்தின் ஆய்வு அமைப்பான, "அரசியல் மற்றும் பொதுக் கொள்கைக்கான ஹிந்து மையம்" என்ற அமைப்பினால் ,இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகளின் எதிர்காலம் குறித்து இன்று சென்னையில் மியுசிக்...
நல்லூரில் உள்ள 'கருவி' மாற்றுத் திறனாளிகளின் சமூக வள நிலையத்தில் அதன் அங்கத்தவர்களின் பிள்ளைகளுக்கான கல்வி ஊக்குவிப்பு கொடுப்பனவு வழங்கும் நிகழ்வு கடந்த சனிக்கிழமை (31.10.2015) இடம்பெற்றது. அவுஸ்திரேலிய தமிழ்ப் பொறியிலாளர் அமைப்பின் அனுசரணையுடன் 'கருவி' மாற்றுத் திறனாளிகளின் சமூக வள நிலையத் தலைவர் தர்மசேகரம் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக தமிழ்த் தேசியக்...
Loading posts...
All posts loaded
No more posts



