Ad Widget

பிரபாகரன் பாதுகாத்த காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையை எமது ஆட்களே அழித்து விட்டார்கள்

பிரபாகரன் பாதுகாத்த காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையை, படையினரின் உதவியுடன் எமது ஆட்களே அழித்து விட்டதாக காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையின் வேலை முகாமையாளர் ரியாஸ் சாலி விசனம் வெளியிட்டுள்ளார்.

காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையின் இயந்திரங்கள் உள்ளிட்ட 1000 மில்லியன் ரூபா சொத்துக்களை அழிப்பதற்கு அனுமதித்ததற்கு இலங்கை இராணுவமே பொறுப்பேற்க வேண்டும்.

பிரபாகரன் காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையை, பாதுகாத்த அதேவேளை, எமது எமது ஆட்களே, ஜனாதிபதி மாளிகையை கட்டும் எண்ணத்துடன் அதனை அழித்து விட்டனர்.

காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையின் நிலை குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கடந்த ஏப்ரல் மாதமே தெரியப்படுத்தியிருந்தேன். இதுவரை அவரிடம் இருந்து பதில் வரவில்லை.

கடந்த ஏழு மாதங்களாக அவருக்கு பல உயர்மட்ட உள்நாட்டு, வெளிநாட்டுக் கடமைகள் இருந்திருக்கலாம்.

எவ்வாறாயினும், இந்த விவகாரம் தொடர்பாக இராணுவத்திடம் இருந்து அவர் அறிக்கை ஒன்றைக் கோரியுள்ளார் என்பது தெரியும்.

இதேவேளை ஈபிடிபியும் கூட, சீமெந்துக் கூட்டுத்தாபனத்தின் சொத்துக்களை சேதப்படுத்தியுள்ளது என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

Related Posts