Ad Widget

இயற்கை அனர்த்தம் காரணமாகப் பாதிக்கப்பட்வர்களுக்கான உரிய ஏற்பாடுகள் குறித்து டக்ளஸ் வலியூறுத்தல்!

அடை மழை மற்றும் வெள்ளம் காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கான நிவாரணங்கள் உரிய முறையில் உரிய அளவில் வழங்கப்படுவதன் அவசியம் தொடர்பில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி(ஈ.பி.டி.பி.)யின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் இடர் முகாமைத்துவ அமைச்சர் அனுர பிரியதர்சன யாப்பாவிடம் வலியூறுத்தியூள்ளார்.

அண்மைக்கால அடைமழை மற்றும் வெள்ளம் காரணமாக நாட்டில், வடக்கு, கிழக்கு மாகாணங்கள் உட்பட பல பகுதிகளிலும் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கான தற்காலிக நலன்புரி நிலையங்களை அமைத்தல், அவற்றுக்கான அடிப்படை வசதிகளை ஏற்படுத்துதல் மற்றும் உலருணவூ நிவாரணங்களை உரிய முறையில், உரிய அளவில் வழங்குதல் போன்ற நடவடிக்கைகள் தொடர்பில் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் வலியூறுத்தி உள்ளார்.

அத்துடன், வீடுகளை இழந்த மற்றும் வீடுகள் சேதமான மக்களுக்கு இயல்பு நிலை தோன்றியதும் வீடுகளை மீள அமைப்பதற்கும், திருத்தங்கள் மேற்கொள்வதற்கும் உரிய ஏற்பாடுகளை துரிதப் படுத்துவதன் அவசியம் குறித்தும் இதன்போது வலியூறுத்தியூள்ள டக்ளஸ் தேவானந்தா அவர்கள், தற்போது வெள்ள அபாயங்கள் நிலவூம் பகுதிகளை இனங்கண்டு, எதிர்காலத்தில் அவற்றைத் தவிர்க்கும் வகையிலான திட்டங்கள் தொடர்பிலும் கலந்துரையாடியூள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts