- Friday
- November 21st, 2025
நாவாந்துறை பொம்மைவெளி காக்கை வெளிப்பிரதேசத்தில் சரியான வடிகாலமைப்பு வசதிகள் இன்றி குடியிருப்புக்கள் வெள்ளத்தினால் பாதிக்கபட்டுள்ளன. நகரில் இருந்து ஒரு கிலோமீற்றருக்குள் மக்கள் தண்ணீரால் அவதிப்படும் காட்சி வருத்தமளிப்பதாக சமூக வலைத்தளத்தில் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வருகி்றது . யாழ்ப்பாணத்தில் தொடரும் கடும் மழையின் காரணமாக இப்பிரதேசத்தில் வாழும் சிறுவர்கள் குழந்தைகள் சுகாதாரபிரச்சனைகளை எதிர்கொண்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது. இது...
வடமாகாண மரநடுகை மாதத்தைக் கொண்டாடும் விதமாக, வடக்கின் ஐந்து மாவட்டங்களிலும் பொதுமக்கள் அதிக ஆர்வத்துடன் மரக்கன்றுகளை நாட்டி வரும் நிலையில், இத்திட்டத்தில் இணைந்து கொள்வதில் புலம்பெயர் தமிழர்களும் அக்கறை கொள்ள ஆரம்பித்துள்ளனர். தெல்லிப்பளையில் இருந்து புலம்பெயர்ந்து இலண்டனில் வாழ்ந்துவரும் வைத்திய நிபுணரான சீ.நவரத்தினம் என்பவர் தெல்லிப்பளை வித்தகபுரம் கிராமத்துக்கு ஆயிரம் மரக்கன்றுகளை அன்பளிப்புச் செய்துள்ளார். வித்தகபுரத்தில்...
மூன்றாவது இளைஞர் நாடாளுமன்றத் தேர்தல் இன்று நாடு முழுவதும் சுமூகமாக இடம்பெற்று வருகின்றது. 225 நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக 160 தொகுதிகளில் 334 பிரதேச செயலகங்களில் வாக்கெடுப்பு இடம்பெற்று வருகின்றது. இதில் சுமார் 5 இலட்சம் இளைஞர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்தனர்.காலையில் ஆரம்பமாகி வாக்கெடுப்பு இன்று மாலை 3 மணி வரை இடம்பெறும் ....
பிரபல ரகர் வீரர் வசீம் தாஜூடீனின் உடல் பாகங்களைக் காணவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. தாஜூடீனின் சடலத்தின் சில பாகங்களைக் காணவில்லை என கொழும்பு ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது. வசீம் தாஜூடீனின் சடலம் அண்மையில் மீள தோண்டி எடுக்கப்பட்டு சோதனைக்கு உட்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. முதலாவது பிரேதப் பரிசோதனையின் போது இந்த உடல் பாகங்கள் காணாமல் போயிருக்கலாம் என...
2015-ம் ஆண்டு வாக்காளர் இடாப்பிற்கான பெயர்களை உள்வாங்கும் இறுதிக்கட்ட நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளதாக மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம்.மொஹமட் தெரிவித்துள்ளார். 2015ஆம் ஆண்டு வாக்காளர் இடாப்பிற்கு பெயர் உள்வாங்கப்படாத, வாக்களிக்க தகுதியானவர்கள் இருப்பார்களாயின் அவர்கள் தமது உரிமை கோரிக்கை கடிதத்தை தேர்தல்கள் செயலகத்திற்கு எதிர்வரும் 12ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டார்....
நயினாதீவு என்ற தமிழப் பெயரைச் சத்தம் சந்தடியின்றி நாகதீபம் என்று மாற்றி வட்டாரப் பிரிப்பின் போது எல்லை நிர்ணயம் மேற்கொள்ளப்பட்டு வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. இந்தப் பெயரை மீண்டும் நயினாதீவு என மாற்றம் செய்து வர்த்தமானியில் உடனடியாகப் பிரகடனம் செய்ய வேண்டும். இவ்வாறு வடக்கு மாகாண சபை தீர்மானம் ஒன்றை நேற்று முன்தினம் நிறைவேற்றியிருக்கின்றது. வட மாகாணசபையின்...
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொதுமன்னிப்பில் தங்களை விடுதலை செய்யவேண்டும் எனக் கோரி, நாடு முழுவதிலும் உள்ள 14 சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ள 217 தமிழ் அரசியல் கைதிகள் நாளை ஞாயிற்றுக்கிழமை முதல் மீண்டும் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர். "எமது விடுதலை தொடர்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கிய வாக்குறுதியை எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்...
இரண்டு சக்கரங்களில் ஆட்டோரிக்ஷாவை அதிக தூரம் ஓட்டி சென்று உலக சாதனை படைத்த சென்னையை சேர்ந்த ஜெகதீசனின் பெயர் 2016ம் ஆண்டு கின்னஸ் புத்தக பிரதியில் இடம்பெற இருக்கிறது. மும்பையில், நடந்த இதற்கான நிகழ்ச்சியில் கின்னஸ் சாதனைக்காக நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச அளவை காட்டிலும், இரு மடங்கு கூடுதல் தூரத்தை அவர் கடந்து அனைவரையும் வியக்க வைத்திருக்கிறார்....
யாழ்.மாவட்டத்தில் நடைபெறும் சமூக விரோதச் சம்பவங்கள் மற்றும் போதைப் பொருள் பாவனை, கடத்தல் போன்ற சம்பவங்கள் தொடர்பாக அறிவிப்பதற்கான தொடர்பிலக்கத்தினை யாழ்.அரச அதிபர் என்.வேதநாயகன் நேற்று அறிவித்துள்ளார். 0212225000 என்ற எண்ணிற்கு அழைத்து அரச அதிகாரிகளின் பொறுப்பற்ற தன்மை உள்ளிட்ட சகலவிதமான முறைப்பாடுகளையும் அறிவிக்கலாம் என்றும் அரச அதிபர் தெரிவித்துள்ளார். மாவட்ட செயலகத்திற்கு வழங்கப்படும் அனைத்து...
இலங்கை பொலிஸ் மோட்டார் வாகனச் சட்டத்தின் பிரகாரம் மோட்டார் சைக்கிள் பெற்றோல் தாங்கியில் சிறுவர்களை வைத்து கொண்டு செல்வது முற்றாக தடை செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலையத்தின் மோட்டார் போக்குவரத்துப் பிரிவின் பொறுப்பதிகாரி ஆர்.துஷார திலங்க ஜெயலால் தெரிவித்தார். சிறுவர்களை விபத்துக்களில் இருந்து பாதுகாக்கும் நோக்கில் குறித்த சட்டம் இலங்கை பொலிஸ் மோட்டார் வாகனச் சட்டத்தின்...
தமிழ் அரசியல் கைதிகளின் குடும்பங்களுக்கான வாழ்வாதார திட்டத்தின்கீழ் யாழ்.மாவட்ட பயனாளிகளுக்கு உள்ளீடுகள் வழங்கும் நிகழ்வு நேற்று வெள்ளிக்கிழமை பா.டெனிஸ்வரன் அமைச்சரின் யாழ் அலுவலகத்தில் இடம்பெற்றது. இந்த திட்டமானது வட மாகாண கிராம அபிவிருத்தி அமைச்சால் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதில் விசேட வாழ்வாதார திட்டத்தின் கீழ் இதுவரை வடக்கின் ஏனைய நான்கு மாவட்டங்களிலும் சிறையில் உள்ள அரசியல் கைதிகளின்...
கடந்தகால அரசாங்கத்தின் பாவத்தைச் சுமக்க வேண்டிய நிலை புதிய அரசாங்கத்துக்கு ஏற்பட்டிருப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க நேற்று (06.11.2015)நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். கடந்த அரசாங்கம் உரிய கேள்விப் பத்திரங்கள் இன்றி ஆரம்பித்த அபிவிருத்தித் திட்டங்களை அவ்வாறே தொடர்ந்தும் முன்னெடுக்க வேண்டிய நிலைக்கு அரசாங்கம் தள்ளப்பட்டிருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தில் ஐ.ம.சு.மு எம்.பியான டலஸ்...
வவுனியா வடக்கு, நெடுங்கேணி மகாவித்தியாலயத்தில் குடிபோதையில் ஆசிரியர்கள் அட்டகாசத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து ஆறு ஆசிரியர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். நெடுங்கேணி மகாவித்தியாலய விடுதியில் தங்கியிருந்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஆசிரியர்கள் 6 பேர் குடிபோதையில் அப்பாடசாலையின் அதிபரின் அறையை உடைத்துள்ளதுடன் பாடசாலை வளாகத்தில் உள்ள வாழை மரங்களை வெட்டி வீழ்த்தியுள்ளனர். இந்நிலையில் காலையில்...
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் தொலைநோக்கு சிந்தனையிலான மழை நீர் சேகரிப்புத் திட்டத்துக்கான ஆரம்ப நிகழ்வு, வேலணை பிரதேச செயலகத்துக்குட்பட்ட வீடொன்றில் நடைபெற்றது. வடமாகாண ஆளுநர் எச்.எம்.ஜி.எஸ். பளிஹகார, மழை நீர் சேகரிப்புத்த தொட்டிக்கான அடிக்கல்லை நாட்டி இந்தத்திட்டத்தை ஆரம்பித்து வைத்தார். இந்தத் திட்டத்தில் வடக்கில் ஆயிரம் மழை நீர் சேகரிப்பு தொட்டிகள் அமைப்பதற்கு...
வடமாகாண உதவி கலால் அதிகாரியான கிரிஸ்ட் ஜோசப், கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தால் நேற்று வெள்ளிக்கிழமை பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். 10,000 பெறுமதியான ரொக்கப்பிணை மற்றும் ஒரு மில்லியன் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணத்தில் மதுபானசாலைக்கான அனுமதிப்பத்திரத்தை புதுப்பிப்பதற்காக 60 ஆயிரம் ரூபாயை இலஞ்சம் பெற்றதாக கூறப்படும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு, இன்று...
யாழ் மாவட்டத்தில் காணாமல் போனவர்கள் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ள, காணாமல் போனோர் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு யாழ் வரவுள்ளது. அதன்படி வரும் 11ம் திகதி முதல் இரண்டு வார காலம் அந்த மாவட்ட முறைப்பாட்டாளர்களிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என்று ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நல்லூர் மற்றும் யாழ் பிரதேச செயலகங்களில் விசாரணைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக காணாமல் போனோர்...
யாழ்ப்பாணத்தில் பிரபல ஹோட்டல் என்று கருதப்படுகின்ற US ஹோட்டலில் இலையான் பிறைட்றைஸ் தயாரித்த சம்பவம் நேற்று (05.11.2015) மதியம் 2.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடா்பாக மேலும் தெரியவருவதாவது, தென்னிலங்கையிலிருந்து யாழ்ப்பாணம் வந்த சகோதர மொழி பேசும் முகாமைத்துவ அதிகாரிகள் சிக்கன் பிறைட்றைஸ் சாப்பிடுவதற்காக இல 851, ஆஸ்பத்திரி வீதியில் அமைந்துள்ள US ஹோட்டலுக்கு சென்றிருந்தனர்....
சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் மேற்கொள்ளப்படும் இரத்த பரிசோதனை அறிக்கைக்கும் வெளியில் தனியார் இரத்த பரிசோதனை நிலையங்களில் மேற்கொள்ளப்படும் இரத்த பரிசோதனை அறிக்கைக்கும் இடையில் வித்தியாசம் காணப்படுவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். தென்மராட்சிப் பகுதியில் தற்போது அதிகமாக டெங்கு நோயின் தாக்கம் இருப்பதால், காய்ச்சலால் பீடிக்கப்படும் நோயாளிகளை எஃப்.பி.சி (முழு இரத்த கணிப்பீடு) பரிசோதனைக்கு உட்படுத்துமாறு வைத்தியவர்கள் பணிக்கின்றனர்....
வடமாகாண சுற்றாடல் அமைச்சின் ஏற்பாட்டில், நல்லூர் சங்கிலியன் பூங்காவில நேற்று வியாழக்கிழமை (05) ஆரம்பமான மலர்க்கண்காட்சியின் ஆரம்ப நிகழ்வில் கலந்துகொண்ட விருந்தினர்கள், தங்கள் சட்டைகளில் கார்த்திகைப் பூவை குத்தியிருந்தனர். கார்த்திகை மாதத்தில் மாத்திரம் பூக்கும் இந்தப் பூ, தமிழீழ விடுதலைப் புலிகளின் தேசிய மலராக இருந்தமை குறிப்பிடத்தக்கது.
Loading posts...
All posts loaded
No more posts



