Ad Widget

உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் சிறையில் எந்த ஒரு அரசியல் கைதியும் இல்லை

சிறைச்­சா­லை­களில் உண்­ணா­வி­ரதம் இருக்கும் அர­சியல் கைதி­களில் உடல்நிலை அசா­தா­ரண நிலைக்கு ஆளான எவரும் சிறைச்­சா­லைக்குள் இல்லை. அனு­ரா­த­புரம் சிறைச்­சா­லையில் ஒரு கைதிக்கு சிறைச்­சாலை வைத்­தியசாலையில் சேலைன் செலுத்­தினோம் என்று சிறைச்­சா­லைகள் ஆணை­யாளர் நாயகம் ரோஹண புஷ்­ப­கு­மார தெரி­வித்தார்.

rohana - puspakumar

உண்ணாவிரதத்தில் ஈடுபடும் அரசியல் கைதிகளின் நிலைவரம் தொடர்பாக கேட்போதே ஆணையாளர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறு­கையில்,

சிறைச்­சா­லை­களில் உண்­ணா­வி­ரதம் இருக்கும் அர­சியல் கைதி­களில் உடல் நிலை அசா­தா­ரண நிலைக்கு ஆளான எவரும் சிறைச்­சா­லைக்குள் இல்லை. அனு­ரா­த­புரம் சிறைச்­சா­லையில் உண்­ணா­வி­ரதம் இருந்த ஒரு கைதிக்கு இன்று (நேற்று) சிறைச்­சாலை வைத்­தி­ய­சா­லையில் சேலைன் ஏற்­றினோம்.

அத்­துடன் கடந்த சில தினங்­க­ளுக்கு முன்பு உண்­ணா­வி­ரதம் இருந்த கைதி­களில் 8 பேரின் உடல் ஆரோக்­கிய நிலை பூர­ணத்­துவம் இல்­லாத நிலையில் அவர்­களை சிறைச்­சாலை வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­தித்து சேலைன் ஏற்­றினோம்.

சிறைச்­சா­லை­களில் உண்­ணா­வி­ரதம் இருக்கும் கைதி­களின் உடல் நிலையை சிறைச்­சா­லை­களில் இருக்கும் வைத்­தி­யர்கள் நாளாந்தம் பல தட­வைகள் பரி­சோ­தித்து பார்க்­கின்­றனர். தற்­செ­ய­லாக அவர்­களின் எவ­ருக்­கேனும் உடல் நிலை பாதிப்­ப­டைந்தால் அவர்­களை உட­ன­டி­யாக சிறைச்­சாலை வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­தித்து தேவை­யான சிகிச்­சை­களை பெற்­றுக்­கொ­டுப்போம்.

சிறைச்­சா­லை­களில் உண்­ணா­வி­ரதம் இருக்கும் அர­சியல் கைதி­களில் எவரேனும் இதுவரை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படவில்லை. அவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கும் அளவுக்கு அவர்களின் உடல்நிலை பாதிக்கப்பட் டவில்லை என்றார்.

Related Posts