- Friday
- November 21st, 2025
போரினால் பாதிக்கப்பட்ட கணவரை இழந்த பெண்களிற்காகவும்,அரசியல் கைதிகளிற்காகவும், இன்னமும் முகாம்களில் உள்ள இடம்பெயர்ந்த மக்களிற்காகவும் குரலெழுப்புவேன் என யாழ்.மறை மாவட்ட ஆயராக நியமிக்கப்பட்டுள்ள ஜஸ்டின் பேர்னாட் ஞானபிரகாசம் ஆண்டகை தெரிவித்துள்ளார். போர் முடிவடைந்து ஆறுவருடங்களாகின்றன பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி உதவிகளை வழங்க வேண்டியது அவசியம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். எனது மறைமாவட்டம் குறித்தும் அது எதிர்கொண்டுள்ள பிரச்சினைகள்...
வடமாகாணத்தில் போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஜப்பான் நாடு தொடர்ந்தும் உதவிகளைச் செய்யும் என இலங்கைக்கான ஜப்பான் நாட்டின் வதிவிடப் பிரதிநிதி கேனிசி சுகநும (kenichi Suganuma) தெரிவித்தார். யாழ்ப்பாணத்துக்கு புதன்கிழமை (04) விஜயம் மேற்கொண்ட ஜப்பான் நாட்டின் வதிவிடப் பிரதிநிதி, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை அவரது இல்லத்தில் சந்தித்துக் கலந்துரையாடினார். சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துக்...
வவுனியா, பத்தினியார் மகிழங்குளம் இந்து மயானத்தில் ஆயுதங்கள் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் வவுனியா பத்தினியார் மகிழங்குளம் இந்து மயானத்தில் அகழ்வுப்பணியை மானிப்பாய் பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர். யாழ்ப்பாணம், மானிப்பாய் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் வவுனியா நீதிவான் வி.இராமக்கமலனின் அனுமதியைப் பெற்று, வவுனியா பொலிஸாரின் உதவியுடன், குறித்த மயானத்தில் அகழ்வுப்பணிகள், இன்று புதன்கிழமை (04)...
தனது ஆறு வயது பிள்ளையை ரயிலில் தள்ளி கொல்ல முற்பட்ட பெண்ணொருவர் கண்டியில் கைதுசெய்யப்பட்டுள்ளார். இன்று காலை கண்டியில் இருந்து மாத்தளை நோக்கிய பயணித்த ரயிலிலேயே அவர் தனது பிள்ளையை தள்ளிவிட்டுள்ளார். எனினும் கண்டி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பெண் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் அந்தக் குழந்தையைக் காப்பாற்றியுள்ளார். அந்த சந்தர்ப்பத்தில் குறித்த பெண் தப்பிச்...
அரசியல் கைதிகளுக்கான சாட்சியம் சட்டமா அதிபர் திணைக்களத்தில் இல்லை. அதனாலேயே காலம் தாமதிக்கின்றார்கள் என வடமாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் குற்றஞ்சாட்டியுள்ளார். அத்துடன் அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து அரசியல் உள்ளீடு இருக்கும் போது, சட்டமா அதிபரை குற்றம் சாட்டுவது ஏற்றுக்கொள்ள முடியாததென்றும் நீதி அமைச்சரின் கருத்தை முற்றாக மறுப்பதாகவும் முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் தெரிவித்தார்....
வடமாகாண மரநடுகை மாதத்தை முன்னிட்டு மாபெரும் மலர்க் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வடமாகாண சுற்றாடல் அமைச்சின் ஏற்பாட்டில், வடமாகாண தாவர உற்பத்தியாளர்கள் சங்கம் பங்கேற்கும் இம்மலர்க் கண்காட்சி நல்லூர் சங்கிலியன் பூங்காவில் (கிட்டு பூங்கா) நாளை வியாழக்கிழமை (05.11.2015) பிற்பகல் 2 மணிக்கு ஆரம்பமாக உள்ளது. இதனை வடமாகாண கல்வி அமைச்சர் த.குருகுலராஜா சம்பிரதாயபூர்வமாகத் திறந்து...
தனது மகளின் மரணத்தை வைத்து அரசியல் செய்யவேண்டாம் என முன்னாள் தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பின் மகளிர் அரசியற்துறை மகளிர் அணி பொறுப்பாளர் தமிழினியின் தாயார் கோரிக்கை விடுத்துள்ளார். ஐபிசி தமிழ் செய்திகளுக்கு வழங்கிய விசேட செவ்வியின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். கடந்த காலங்களில் தமிழ் மக்களின் உரிமைக்காக தனது மகள் போராட்டத்தில் இணைந்ததாகவும், இறுதிவரை...
நீதிமன்றம் விதித்த தடை உத்தரவை மீறி அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கொழும்பில் நேற்று பாரிய ஆர்ப்பாட்டப் பேரணி ஒன்றை நடத்தியது. இலவசக் கல்வியை விற்பனை செய்ய வேண்டாம் என்றும், தேசிய உயர் கணக்கீட்டு டிப்ளோமா கற்கைநெறி மாணவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு கோரியும் நடத்தப்பட்ட இந்த ஆர்ப்பாட்டப் பேரணி கொழும்பு ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக வளாகத்தில்...
மாணவர்களை தூண்டிவிட்டு அவர்களை கொலை செய்ய திட்டமிடுகிறீர்களா கடந்த காலங்களில் உங்கள் ஆட்சியில் கண்ட "இரத்த வெள்ளம்" போதாதா? என்று நாடாளுமன்றத்தில் மஹிந்த ஆதரவு அணியினரை நோக்கி நேற்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கேள்வி எழுப்பினார். உயர் தேசிய கணக்கியல் டிப்ளோமா பாடநெறி மாணவர்கள் பொலிஸாரால் தாக்குதலுக்குள்ளானது தொடர்பில் நாடாளுமன்றத்தில் நேற்று கூச்சல் குழப்பம் ஏற்பட்டது....
புங்குடுதீவு மாணவி வித்தியா கூட்டு வன்புணர்வின் பின்னர் கொலை செய்யப்பட்டமை தொடர்பான வழக்கை விசாரிக்க ட்ரயல் அட்பார் (நீதிபதிகள் அடங்கிய விசாரணை மன்று) நீதிமன்றம் அமைக்கப்படும் என்று நீதி அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ தெரிவித்தார். யாழ்ப்பாணத்துக்கு நேற்று சென்றிருந்த அவர் யாழ்.மேல்நீதிமன்றில் நீதிபதிகள், நீதிவான்கள், சட்டத்தரணிகளுன் சந்திப்பு ஒன்றை நடத்தினார். அதன் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய...
பொதுமக்களின் வாழ்வியல் விடயங்களில் இராணுவத்தினரும், கடற்படையினரும் தலையிடுவதை நிறுத்த வேண்டும் என கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா, தெரிவித்துள்ளார். வலிகாமம் வடக்கில் உள்ள மயிலிட்டி துறைமுகத்தை இடமாற்றுவது தொடர்பில் இடம்பெயர்ந்து வாழும் மயிலிட்டி கடற்றொழிலாளர்களின் கையெழுத்துக்கள் பெற முயற்சிக்கப்படுகின்றமை தொடர்பாக கருத்து வெளியிட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். நாங்கள் புதிய அரசாங்கத்தில் இணைந்து...
'சுமார் 1 ½ இலட்சம் இராணுவத்தினர் முகாமிட்டுள்ள வடமாகாணத்தில் எவ்வாறு போதைப்பொருள் பாவனை என்ற புற்றுநோய் வேகமாக பரவியது என்பது சிந்திக்க வேண்டிய விடயமாகும்' என்று வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊழியர்கள் சங்கத்தால் பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கி நேற்று செவ்வாய்க்கிழமை (03) நடத்தப்பட்ட ஊழியர்கள் கௌரவிப்பு நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு...
அல்வாய் வடமேற்கு, பகுதியில் நிலை கொண்டுள்ள இராணுவத்தினரின் வளர்ப்பு பன்றி தாக்கியதில் குடும்பஸ்தர் ஒருவர் படுகாயங்களுக்கு உள்ளான நிலையில் திங்கட்கிழமை (02) பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பருத்தித்துறை பொலிஸார் தெரிவித்தனர். நடேசு சிவரத்தினம் (வயது 55) என்ற நபரே பன்றியின் தாக்குதலில் காயங்களுக்கு உள்ளாகியுள்ளார். அப் பகுதியினை சேர்ந்த குறித்த நபர், இராணுவ முகாமுக்கு...
பழைய பிரச்சினைகளை கிளறி மக்களைக் குழப்பி அரசியல் சுயலாபம் தேடும் முயற்சியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சில உறுப்பினர்கள் ஈடுபட்டுள்ளனர் என ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான கே.என்.டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். முஸ்லீம் மக்களை யாழிலிருந்து வெளியேற்றியமை இனச்சுத்திரிகரிப்பு என்று கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கூறுவது சரியானதா என்பது தொடர்பில்...
ஒரு தேசிய அரசாங்கம் அமைந்து, சுமார் 6 மாதங்களுக்குள் பிரச்சினைகள் தீர்க்கப்படவேண்டும். மாறாக அது பிற்போடப்பட்டால் அது ஆறிய கஞ்சியாகிவிடும் என ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான கே.என்.டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். இது தொடர்பில் அவர் தொடர்ந்து கூறுகையில், புதிய அரசாங்கத்தின் 100 நாட்கள் வேலைத்திட்டத்தின் போதே பல பிரச்சினைகளுக்கான தீர்வுகளை...
அரசியல் கைதிகள் 43 பேர், முதற்கட்டமாக விடுதலை செய்யப்படவுள்ளதாக யாழ்ப்பாணத்தில் வைத்து நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். யாழ்ப்பாண நீதிமன்றக் கட்டடத் தொகுதியில் வைத்து நேற்று செவ்வாய்க்கிழமை (03) சட்டத்தரணிகளைச் சந்தித்துக் கலந்துரையாடிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அரசியல் கைதிகளை மூன்று பிரிவுகளாகப் பிரித்து, 43 பேரை வழக்குகள் எவையுமின்றி உடனடியாக விடுதலை செய்வது...
வடமாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையில் வடமராட்சி வடக்கு பிரதேச கலாசாரப் பேரவை நடாத்தும் பண்பாட்டுப் பெருவிழாவும் கண்காட்சியும் எதிர்வரும் 6 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 9.30 மணியளவில் யாழ் மாவட்டம் தும்பளை நெல்லண்டை அம்மன் திருமண மண்டபத்தில் இடம்பெறவுள்ளது. வடமராட்சி வடக்கு பிரதேச செயலாளர் இ.த.ஜெயசீலன் தலைமையில் இடம்பெறவுள்ள இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக முதலமைச்சரின்...
ஆவணப்படம், குறும்படம் தயாரித்தல் தொடர்பான கருத்தரங்கொன்று எதிர்வரும் டிசெம்பர் மாதம் 14 ஆம் திகதியிலிருந்து 18 ஆம் திகதி வரை அரசாங்க தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது. ஆசிய திரைப்பட மையத்தின் பங்களிப்புடன் இணைந்து தகவல் திணைக்களத்தின் அரசாங்க திரைப்பட பிரிவினரால் இதற்கென ஏற்பாடுகள் அனைத்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. நடைபெறவுள்ள இக்கருத்தரங்கு இந்தியாவின் சென்னை...
உயர் தேசிய கணக்கியல் கற்கை நெறியை பட்டப்படிப்பாக உயர்த்துவதற்காக வழங்கப்பட்ட பழைய சுற்றுநிருபத்தை மீண்டும் நடைமுறைப்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி. உயர்கல்வி மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சு, அமைச்சரவை பத்திரம் ஒன்றை சமர்ப்பித்துள்ளது.உயர்கல்வியமைச்சின் செயலாளர் டி.சி.திசாநாயக்க இந்த தகவலை வெளியிட்டார். எதிர்வரும் அமைச்சரவை கூட்டத்தில் இதுபற்றி கவனம் செலுத்தப்படும் என அவர் தெரிவித்தார். அண்மையில் உயர் தேசிய கணக்காய்வு...
சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 216 விடுதலைப் புலி உறுப்பினர்கள் தொடர்பில் சட்டமா அதிபருக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக, சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் ரோஹன புஸ்பகுமார தெரிவித்துள்ளார். எதிர்வரும் தீபாவளி பண்டிகைக்கு முன்னதாக கைதிகள் தொடர்பிலான பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கப்படும் என அரசாங்கம் வழங்கிய உறுதி மொழிக்கு அமைய, இந்த அறிக்கை சிறைச்சாலை திணைக்களத்தினால் சட்ட மா அதிபர்...
Loading posts...
All posts loaded
No more posts
