யாழ். நீதிமன்றத்திற்கு நீதியமைச்சர் விஜயம்

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச இன்றைய தினம் யாழ். நீதிமன்றத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். கொழும்பிலிருந்து பலாலி இராணுவ படைத்தலைமையகத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்த அவர் அங்கிருந்து யாழில் வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தனை வழிபட்டிருந்தார். இந்த நிலையிலேயே இதனைத் தொடர்ந்து யாழ். நீதிமன்றத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள அவர், நீதிபதிகள் மற்றும் சட்டத்தரணிகள் உள்ளிட்டவர்களுடன்...

நான் என்று வாழத் தலைப்பட்டதே சமூக சீரழிவுக்குக் காரணம் – வடக்கு முதல்வர்

யாழ்ப்பாண பல்கலைக்கழக ஊழியர் சங்கம் சேவையில் இருந்து ஓய்வு பெற்ற பணியாளர்களையும், சேவையில் 25 வருட காலத்தைப் பூர்த்தி செய்த பணியாளர்களையும், கௌரவித்து விருதுகள், பரிசில்கள் வழங்கும் நிகழ்வு பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தின் தலைவர் சி.தங்கராஜா தலைமையில் இன்று யாழ்.பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றது. இவ்விழாவில் ஊழியர் சங்கத்தின் அங்கத்தவர்களின் பிள்ளைகள் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் அதிக...
Ad Widget

மாணவர்களின் போராட்டத்திற்கு நீதிமன்றம் தடை

பொலிஸாரின் தாக்குதலுக்கு எதிராக பல்கலைக்கழக மாணவர்களினால் மேற்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்டத்திற்கு எதிராக நீதிமன்றம் தடை உத்தரவை பிறப்பித்துள்ளது. கடந்த வாரம் தேசிய உயர் கணக்கீட்டு டிப்ளோமா மாணவர்கள் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு முன்பாக நடத்திய ஆர்ப்பாட்டத்தில் பொலிஸாருக்கும், மாணவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் மாணவர்கள் பலர் பொலிஸாரினால் தடியடி மூலம் தாக்கப்பட்டதாக குற்றச்சாட்டு...

யாழிலிருந்து முஸ்லிம்களை வெளியேற்றியது இனப்பாதுகாப்பு என்பது நகைப்புக்குரிய விடயம் – சுமந்திரன்

யாழ்ப்பாணத்திலிருந்து முஸ்லிம் மக்களை வெளியேற்றியமையானது சட்ட வரைவிலக்கணத்துக்கமைய, இனச் சுத்திகரிப்பே ஆகும் எனத் தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், பலவந்தமாக ஓர் இனத்தை ஒரு பிரதேசத்திலிருந்து வெளியேற்றியமையை, இனப் பாதுகாப்பு எனக் கூறுவது, அவர்களை மேலும் அவமானப்படுத்தும் செயலாகும் எனவும் குறிப்பிட்டார். யாழ்ப்பாணத்திலிருந்து முஸ்லிம் மக்கள் வெளியேற்றப்பட்டமையானது இனப்பாதுகாப்பு...

கையடக்கத் தொலைபேசியில் உரையாடிக் கொண்டு சென்றவர் மின்னல் தாக்கி பலி

கையடக்கத் தொலைபேசியில் உரையாடிக் கொண்டு மோட்டார் சைக்கிளில் பயணித்த குடும்பஸ்தர் மின்னல் தாக்கி உடல் கருகி பரிதாபமாக மரணமடைந்தார். இச்சம்பவம் நேற்று முன்தினம் பிற்பகல் ஒட்டுசுட்டான் புதுக்குடியிருப்பு வீதியில் மன்னாகண்டல் சந்தியை அண்மித்த வேளை நடைபெற்றது. இதில் புதுக்குடியிருப்பு 7ஆம் வட் டாரத்தைச் சேர்ந்த நடராசா ரவி (வயது 50) என்ற குடும்பஸ்தரே மரணமடைந்தவராவார். இது...

கொழும்பில் சன்னி லியோனின் இசை நிகழ்ச்சி ?

இந்திய சினிமாவில் தன் கவர்ச்சியால் ரசிகர்களை கவர்ந்து இழுத்தவர் சன்னி லியோன். இவர் நடிக்கும் படங்களை இந்தியாவில் அனுமதிக்க கூடாது என்ற அளவிற்கு போராட்டம் நடந்து வருகின்றது.இந்நிலையில் இவர் அடுத்த மாதம் இலங்கை வரவுள்ளாராம். எதற்கு என்று விசாரிக்கையில் இலங்கையில் உள்ள பிரபல கெசினோ சூதாட்ட நிலையம் ஒன்றின் அழைப்பின் பேரில் அவர் இலங்கைக்கு வரவுள்ளதாக...

வடக்கில் போதைப்பொருள் பாவனை அதிகரிப்பு

வடக்கில் போதைப்பொருள் பாவனை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கும், நாட்டில் இடம்பெறும் குற்றச்செயல்களை தடுப்பதற்கு அனைத்து தரப்புக்களினதும் ஒத்துழைப்பு தேவையெனவும் ருவான் குணசேகர குறிப்பிட்டார். கிளிநொச்சிக்கான விஜயத்தினை மேற்கொண்டுள்ள பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேக கிளிநொச்சி இரணைமடு சந்தியில் அமைந்துள்ள பிரதி பொலிஸ்மா அதிபர் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே மேற்கண்டவாறு குறிப்பட்டார். அவர் மேலும்...

தமிழ் அரசியல் கைதிகள் அரசுக்கு எச்சரிக்கை!!

சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள எம்மை பொதுமன்னிப்பில் ஜனாதிபதி விடுவிக்க வேண்டும். இல்லையேல் உயிர் துறப்போம் என தமிழ் அரசியல் கைதிகள் எச்சரித்துள்ளனர். தமது விடுதலை தொடர்பில் எதிர்வரும் 7ஆம் திகதிக்கு முன்னர் தீர்க்கமான பதிலை ஜனாதிபதி எமக்கு வழங்கவேண்டும். இல்லையெனில் மீண்டும் நாம் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு சாவைத் தழுவுவோம். இதுதான் எமக்கு இறுதியாக...

பொலிஸாரிற்கு எதிராக நாடளாவிய ரீதியில் பல்கலை மாணவர்கள் இன்று ஆர்ப்பாட்டம்

உயர் தேசிய கணக்கீட்டு டிப்ளோமா மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை கண்டித்து நாடு முழுவதிலுமுள்ள பல்கலைக்கழக மாணவர்கள் இன்று செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளனர். கொழும்பில் கடந்த வாரம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது பொலிஸார் தாக்குதல் நடத்தியதில் 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததோடு, பலர் கைது செய்யப்பட்டிருந்தனர். காயமடைந்த மாணவி சிகிச்சையின் பின்னர் வைத்தியசாலையிலிருந்து வெளியேறியிருந்த நிலையில்...

கொள்ளையிட வந்தவர்களால் மூதாட்டி படுகொலை! உடுவிலில் பயங்கரம்!!

தனியாக வசித்த மூதாட்டியைக் கொலை செய்துவிட்டு அங்கிருந்த பெறுமதியான பொருட்கள் கொள்ளையிடப்பட்டிருப்பதாகத் தெரிய வருகின்றது. பாலசிங்கம் சிறிதேவி (வயது 67) என்பவரே இவ்வாறு கொல்லப்பட்டவராவர். நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை இரவு யாழ்ப்பாணம் - உடுவில் - லவ் லேனில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இது குறித்து மேலும் அறியவருவதாவது: பெண்ணின் வீட்டில் அவர் மட்டுமே வசித்து வந்த...

வாள்முனையில் அச்சுறுத்தி கொள்ளை!

வயதான பெற்றோருடன் வசித்த பெண்ணின் வீட்டுக்குள் நுழைந்த இரு கொள்ளையர்கள் அவர்களை வாள் முனையில் அச்சுறுத்தி 3 இலட்சம் ரூபா பெறுமதியான நகை, பணம் என்பவற்றை கொள்ளையிட்டு சென்றுள்ளனர். இன்று நள்ளிரவு 12.30 மணியளவில் யாழ்ப்பாணம் - மானிப்பாய் - எழுமுளிப் பகுதியில் இடம்பெற்றுள்ளது. இந்தச் சம்பவம் குறித்து மானிப்பாய் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அரசியல் கைதிகள் விடுதலை!! இந்த வாரம் இறுதி முடிவு! ஜனாதிபதி, பிரதமருடன் பேச்சு – மாவை

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக ஜனாதிபதி, பிரதமர் ஆகியோருடன் இந்த வாரம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பேச்சு நடத்தவுள்ளது. இந்தப் பேச்சின்போது கைதிகள் விவகாரம் குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும்." - இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்தார். இது தொடர்பில்...

வியட்நாமுடன் இணைந்து முன்னோக்கி வரும் மனோநிலை இலங்கைக்கு இல்லை !

இலங்கை அரசுக்கு வியட்நாம் அரசுடன் இணைந்து அபிவிருத்தியில் முன்னோக்கி வருவதற்கான மனோநிலை இல்லை என, இலங்கைக்கான வியட்நாம் தூதுவர் பஹன் கியு து (phan kieu thu ) குற்றஞ்சாட்டியுள்ளதாக வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழிற்கு விஜயம் மேற்கொண்ட வியட்நாம் தூதுவர் வடமாகாண முதலமைச்சரை அவரது வாசஸ்தலத்தில் சந்தித்து கலந்துரையாடிய போதே அவர் இவ்வாறு...

ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட 75 பேருக்கு நீதிமன்றம் நோட்டீஸ்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் அமைச்சரவையின் உறுப்பினர்கள் உள்ளிட்ட 75 பேருக்கு உயர்நீதிமன்றம் நேற்று நோட்டீஸ் அனுப்பியுள்ளது. நுரைச்சோலை லக்விஜய மின் உற்பத்தி நிலையத்திற்காக நிலக்கரி கொள்வனவு செய்வது தொடர்பில் மோசடி இடம்பெற்றதாக முன்வைக்கப்பட்ட மனு இன்று பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. தனியார் நிறுவனம் ஒன்று தாக்கல் செய்த குறித்த மனுவில்,...

அராலி ஸ்ரீமுருகன் சனசமூக நிலையத்தால் 5000 பனைவிதைகள் நடுகை

வடமாகாண மரநடுகை மாதத்தின் தொடக்க நாளான நேற்று ஞாயிற்றுக்கிழமை (01.11.2015) அராலி ஸ்ரீமுருகன் சனசமூக நிலையத்தால் 5000 பனைவிதைகள் நடுகை செய்யப்பட்டுள்ளன. பனை அபிவிருத்திச் சபையின் அனுசரையுடன் வழங்கப்பட்ட இப்பனம் விதைகள் பூனாவோடை இந்து மயானப்பகுதியில் நடுகை செய்யப்பட்டுள்ளன. வடமாகாண சுற்றாடல் அமைச்சர் பொ.ஐங்கரநேசன் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு, சம்பிரதாயபூர்வமாகப் பனம் விதைகளை நாட்டி வைத்தார்....

சிறுமியைக் காணவில்லையென முறைப்பாடு

கொடிகாமம், பாலாவி வடக்கு பகுதியைச் சேர்ந்த குணரட்ணம் சஞ்சீவினி (வயது 15) என்ற சிறுமியை, நேற்று ஞாயிற்றுக்கிழமை (01) மதியம் முதல் காணவில்லையென சிறுமியின் உறவினர்களால் கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. சிறுமியின் தாயார் சில மாதங்களுக்கு முன்னர் குடும்பச் சண்டை காரணமாக வீட்டைவிட்டு வெளியேறிச் சென்ற நிலையில் சிறுமியும் அவரது சகோதரரும்...

இராணுவ சிப்பாயின் மோட்டார் சைக்கிள் திருட்டு! – இராணுவ காவலரணுக்கு முன் கைவரிசை

காங்கேசன்துறை இராணுவ காவலரணுக்கு முன் நிறுத்தி விட்டு, பணிக்காக உள்ளே சென்ற தமிழ் இராணுவ உத்தியோகத்தர் ஒருவரின் மோட்டார் சைக்கிள், திருட்டு போயுள்ளதாக காங்கேசன்துறை பொலிஸார், நேற்று ஞாயிற்றுக்கிழமை (01) தெரிவித்தனர். காங்கேசன்துறை ஹரிசன் படைமுகாமில் கடமையாற்றும் பண்டத்தரிப்பு பகுதியினைச் சேர்ந்த குறித்த இராணுவ சிப்பாய், வியாழக்கிழமை (29) காலை வழமை போல இராணுவ காவலரனின்...

32 வைத்தியசாலைகளில் நிரந்தர வைத்தியர்கள் இல்லை

வடமாகாணத்தில் உள்ள 102 வைத்தியசாலைகளில் 32 வைத்தியசாலைகள் நிரந்தர வைத்தியர்கள் இன்றி இயங்கி வருவதாக வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி மலையாளபுரம் பகுதியில் அமைக்கப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தின் புதிய கட்டடத்திறப்பு விழாவில்கலந்து கொண்டு உரையாற்றிய வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், 'வடக்கு மாகாணத்தில்...

எட்டு மதுபான நிலையங்களுக்கு சீல்

யாழ்ப்பாண மாவட்டத்தில் வெவ்வேறு பகுதிகளில் முறைகேடாக இயங்கி வந்த எட்டு மதுபான நிலையங்களுக்கு சீல்வைக்கப்பட்டுள்ளது. கொழும்பில் இருந்து வருகை தந்திருந்த மதுவரி திணைக்கள உயர் அதிகாரிகள் தலமையிலான குழுவினர், குறித்த மதுபான நிவையங்களுக்கு சீல் வைத்துச் சென்றதாக மதுவரி திணைக்கள உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் இயங்கிய 3 மதுபான நிலையங்கள், ஊர்காவற்துறையில் 2,...

யாழ் எய்ட் முன்னால் போராளிகளுக்கு உதவி

யாழ் எய்ட்டின் முன்னால் போராளிகளுக்கு உதவும் செயற் திட்டத்தின் கீழ் இடுப்புக்கு கீழ் செயலிழந்த நிலையில் வாழ்வியலை கொண்டு நடாத்துவதற்கு சிரமப்பட்ட திருகோணமலையைச் சேர்ந்த முன்னால் போராளிக்கு வவுனியாவில் வைத்து முன்னர் ஒரு தொகைப்பணம் வழங்கி வைக்கப்பட்டதுடன் நல்லின பசுமாடும் கன்றும் திருமலை மொரவெவவில் உள்ள அவரின் வீட்டில் வைத்து வழங்கப்பட்டது.அத்துடன் அங்கவீனமான முன்னால் போராளிகள்...
Loading posts...

All posts loaded

No more posts