Ad Widget

WT1190F மர்மப்பொருள் இலங்கை அருகில் விழும் காட்சி வெளியானது

WT 1190F எனப் பெயரிடப்பட்டுள்ள மர்மப்பொருள் விண்வெளியில் இருந்து இலங்கை நேரப்படி இன்றுக்காலை 11.48 க்கு,  இலங்கையின் தென் கடற்பகுதியில் விழும் என்று எதிர்வு கூறப்பட்டிருந்த நிலையில், அந்த மர்மப் பொருளானது பகல் 12.45 வரை விழவில்லை என்றும் அந்த மர்மப் பொருள் தொடர்பிலான தகவல்கள் எதுவும் தங்காலை கண்காணிப்பு மத்தியநிலையத்துக்கு கிடைக்கவில்லை என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் ஐக்கிய அராபிய அமீரகத்தில் அபுதாபியிலுள்ள பன்னாட்டு வானியல்சார் ஆய்வுக்கூடம் ஒன்றின் 7 பேர்கொண்ட குழுவினரின் பறக்கும் விமானத்தில் இருந்தான மிக அருகிலான படப்பிடிப்பில் இந்த மர்மப்பொருள் தொகுதி விழும் கட்சி படமாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.அந்த மர்மப்பொருட்களின் வீழ்ச்சி எதிர்பார்க்கப்பட்ட நேரத்தினை சற்று அண்மித்திருந்ததாக் கூறப்படுகின்றது்

எதிர்காலத்தில் விண்பொருட்கள் விழுவது தொடர்பில் எடுக்கப்படக்கூடிய முன்னேற்பாடுகள் தொடர்பிலான ஆய்வில் இந்த குழுவினர் ஈடுபட்டிருந்தனர்.இந்த படப்பிடிப்பு   எதிர்கால விண்பொருள் வருகைகளை எதிர்வு கூறுவதற்கு மிகவும் உதவியாக இருக்கும் என நம்பப்படுகின்றது.

இது தொடர்பில் அவர்களால் வெளியிடப்பட்ட காணொளி இதோ

னன

Related Posts