Ad Widget

கிழக்கில் சகல உள்ளூராட்சி மன்றங்களுக்கும் கட்டாய உத்தரவு – வடக்கில் பாடசாலைகளுக்கு பூட்டு

கிழக்கு மாகாணத்தில் உள்ள சகல உள்ளூராட்சி மன்றங்களையும் 24 மணி நேரமும் மக்கள் பணிக்காக தயார் நிலையில் இருக்குமாறு, அம் மாகாண முதலமைச்சர் சகல உள்ளூராட்சி மன்றங்களின் செயலாளர்களுக்கும் கட்டாய உத்தரவு பிறப்பித்துள்ளார்.

பெய்து கொண்டிருக்கும் அடைமழையால் பல பகுதிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வருகின்றது. இதனால் ஏதேனும் வகையில் நீரை வடிந்தோட வழி செய்யவேண்டும் அல்லது மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்ற வேண்டும், அவர்களுக்கான சகல பாதுகாப்பு, உணவு போன்றவற்றை பிரதேச செயலங்களுடன் இணைந்து மேற்கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

மேலும் மழை வெள்ளம் காரணமாக நுளம்பு அதிகரித்து வருவதால் நுளம்புத் தொல்லையைத் தடுக்க மருந்தூட்டப்பட்ட நுளம்பு வலைகளை வழங்குவதற்கும் முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் சம்மந்தப்பட்ட அதிகாரிகளைப் பணித்துள்ளதாக முதலமைச்சின் ஊடகச் செயலாளர் எஸ்.எல்.முனாஸ் தெரிவித்துள்ளார்.

இதேவேளை வட மாகாணத்தின் அனைத்துப் பாடசாலைகளுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அம் மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ஆர்.ரவீந்திரன் தெரிவித்துள்ளார்.

எனினும் இன்று வழங்கப்பட்ட விடுமுறைக்கு பதிலாக எதிர்வரும் 21ம் திகதி பாடசாலை திறக்கப்படும் எனவும் அவர் குறிபபிட்டுள்ளார்.

Related Posts