- Saturday
- November 22nd, 2025
மறைந்த அஸகிரிய பீடாதிபதி கலகம சிறி அத்தாதஸ்ஸி தேரரின் மறைவுக்கு தமிழ்த்தேசிய் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் இரங்கல் தெரிவித்துள்ளார். அவரது இரங்கல் செய்தியில் மறைந்த கலகம தேரருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கின்றேன். நிர்மலமான வாழ்க்கையை வாழ்ந்த கலகம தேரர், நாட்டில் பௌத்த சாசனத்தை மிளிரச் செய்ய அர்ப்பணிப்புடன் செயற்பட்டவர். 1936ஆம் ஆண்டு துறவற...
இன்று முதல் அமுலாகும் வகையில் கோதுமை மாவின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலை ரூபா 7.20 இனால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வவுனியா பாடசாலை மாணவி ஹரிஸ்ணவி கொலை செய்யப்பட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபரின் விளக்கமறில் நீடிக்கப்பட்டுள்ளது. இதன்படி சந்தேகநபரை 14 நாட்கள் மீண்டும் விளக்கமறியல் வைக்குமாறு வவுனியா மாவட்ட மேலதிக நீதவான் எஸ்.லெனின்குமார் உத்தரவு பிறப்பித்துள்ளார். கடந்த மாதம் 16ஆம் திகதி வவுனியா பாடசாலை மாணவி ஹரிஸ்ணவி வன்புனர்வின் பின் படுகொலை செய்யப்பட்ட நிலையில்,...
தேசிய மட்டத்தில் இடம்பெற்ற சிறந்த அறிவிப்பாளர்களை தேர்ந்தெடுக்கும் போட்டியில் கிளிநொச்சி மாணவன் முதலிடத்தைப் பெற்றுள்ளார். பாராளுமன்ற அனுசரணையுடன் ஊடகத் துறையினரால், நடத்தப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கிடையிலான சிறந்த அறிவிப்பாளர்களை தேர்ந்தெடுக்கும் நிகழ்ச்சித்திட்டம், கடந்த 2015ம் ஆண்டு பெப்ரவரி மாதம் அனைத்து மாவட்டங்களிலும் இடம்பெற்றது. ஒவ்வொரு மாவட்டத்திலும் 38 போட்டியாளர்களை ஊடகத்துறையினர் தெரிவு செய்து, கொழும்பு இளைஞர் பாராளுமன்றத்திற்கு...
இணையத்தள சேவையை துரிதப்படுத்துவதற்கான கூகுள் பலூன் பரிசோதனை எதிர்வரும் 30 ஆம் திகதி சிகிரியாவில் நடத்தப்படவுள்ளது. இதன்போது இளைஞர்கள் மற்றும் ஊடகங்களுக்கு குறித்த பலூன் பரிசோதனை தொடர்பில் தெளிவூட்டப்படவுள்ளதாக தொழில் நுட்ப மற்றும் டிஜிட்டல் துறை அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில், கூகுள் நிறுவனத்தினால் அண்மையில் பலூன் பரிசோதனை...
மறைந்த எதிர்க்கட்சித் தலைவரும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகமும் ஆகிய அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் அவர்களின் அன்புத் துணைவியாரும் தமிழரசுக் கட்சியின் மகளிர் அமைப்பின் செயலாளரும் தமிழ் அரசியலில் மங்கையரின் பங்கை மாண்புறச் செய்த திருமதி. மங்கையற்கரசி அமிர்தலிங்கம் அவர்களின் மறைவுச் செய்தி கேட்டு அதிர்ச்சியும் மனவேதனையும் அடைந்தேன் என வடமாகாண் முதலமைச்சர் க.வி. விக்னேஸ்வரன்...
யாழ்ப்பாணம் நகரை அண்டிய பிரபல தேசிய பாடசாலையொன்றில் உயர்தரம் படிக்கும் மாணவர்கள் சிலர், 11ஆம் தரத்தில் படிக்கும் மாணவர்கள் இருவர் மீது மேற்கொண்ட தாக்குதலில் படுகாயமடைந்த மாணவன், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தரம் 11 மாணவர்களிடம் உயர்தர மாணவர்கள் கப்பமாக பணம் தருமாறு கோரியதாகவும், அதனை அவர்கள் கொடுக்க மறுத்தமையால், தரம் 11 மாணவர்களின்...
சேவையாளர்களின் வரவு - செலவுத்திட்ட நிவாரணக் கொடுப்பனவு தொடர்பிலான சட்ட மூலத்தின் ஊடாக தனியார் துறையினருக்கான சம்பள அதிகரிப்பு இரண்டு கட்டங்களில் அதிகரிக்கப்படும் என்று தொழில் மற்றும் தொழிற்சங்க உறவுகள் அமைச்சர் டப்ளியு.டி.ஜே. செனவிரத்ன தெரிவித்தார். வேலையாளர்களின் தேசிய குறைந்தபட்ச வேதனம் சட்ட மூலத்தை நாடாளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை (11) சமர்ப்பித்து உரையாற்றும் போதே அவர்...
யாழ்ப்பாணம் பஸ்ரியன் சந்தியில் நேற்று வெள்ளிக்கிழமை (11) காலை, வீதியைக் கடக்க முற்பட்ட வயோதிபரை மோட்டார் சைக்கிளால் மோதிய குற்றச்சாட்டில், இரண்டு பல்கலைக்கழக மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணப் போக்குவரத்து பொலிஸார் தெரிவித்தனர். இந்தச் சம்பவத்தில் படுகாயமடைந்த குருசுவீதி, சுண்டுக்குளி பகுதியை சேர்ந்த பீற்றர் (வயது 53) என்ற வயோதிபர் ஆபத்தான நிலையில் யாழ்ப்பாணம் போதனா...
யாழ். காங்கேசன்துறை நடேஸ்வரக் கல்லூரி மற்றும் காங்கேசன்துறை நடேஸ்வர கனிஷ்ட வித்தியாலயம் மற்றும் அதனைச் சூழவுள்ள பிரதேசங்கள் என்பன இன்றைய தினம் உத்தியோகபூர்வமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் விடுவிக்கப்படவுள்ளன என்று யாழ்.மாவட்டச் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா மூன்று மணி நேரப் பயணமாக யாழ்ப்பாணத்துக்கு இன்றைய தினம் வரவுள்ளார். தமிழீழ விடுதலைப்புலிகளின் கோப்பாய்...
"ராஜபக்ஷ படையணிதான் உலகிலேயே மிகப்பெரிய திருட்டுக் கும்பல். திருடப்பட்ட விதங்கள் இன்னும் மூன்று மாதங்களில் அம்பலப்படுத்தப்படும். சட்டத்தரணிகளைத் தயாராக வைத்துக்கொள்ளுங்கள்."- இவ்வாறு பிதமர் ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றில் தெரிவித்தார். நாடாளுமன்றம் நேற்று முற்பகல் 10.30 மணிக்கு பிரதி சபாநாயகர் திலங்க சுமதிபால தலைமையில் கூடியது. சபாநாயகர் அறிவிப்பு, பொதுமனுத் தாக்கல், வாய்மூல விடைக்கான கேள்விச்சுற்று ஆரம்பமானது....
கிழக்குப் பல்கலைக்கழக திருகோணமலை வளாகத்தின் சித்த மருத்துவபீட தமிழ் மாணவர்கள் 9 பேர் நேற்றிரவு காட்டுமிராண்டித்தனமான தாக்குதலுக்குள்ளாகிய நிலையில் கடும் காயங்களுடன் நிலாவெளி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். 50 இற்கும் மேற்பட்ட சிங்கள மாணவர்கள் மருத்துவபீடத்தினுள் நுழைந்து தம்மைத் தாக்கினர் என்று தாக்குதலுக்குள்ளான மாணவர்கள் தெரிவித்தனர். திருகோணமலையைச் சேர்ந்த இரண்டு மாணவர்களும், கல்முனையைச் சேர்ந்த ஒரு மாணவனும்,...
எதிர்வரும் 2019 ஆம் ஆண்டிலிருந்து அனைத்துப் பல்கலைக்கழகங்களுக்கும் மாணவர்களை உட்சேர்ப்புச் செய்வதற்கான திகதி ஜூலை மாதம் முதலாம் திகதியாக தீர்மானிக்கப்பட்டுள்ளதாக உயர் கல்வியமைச்சு தெரிவித்துள்ளது. அத்துடன் எதிர்வரும் 2020 ஆம் ஆண்டளவில் இருந்து பல்கலைக்கழகத்துக்கு செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை 35,000 ஆக அதிகரிக்கப்படும் எனவும் அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
உலக சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை பாரிய அளவில் வீழ்ச்சியடைந்திருந்தாலும் இலங்கையில் அதன் விலையில் மாற்றத்தை ஏற்படுத்த முடியாதுள்ளதாக பெற்றோலிய வளத்துறை அமைச்சர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார். அதற்குக் காரணம், பெற்றோலிய வளத்துறை அமைச்சு பாரிய தொகை கடன் செலுத்த வேண்டியிருப்பதே என்று அமைச்சர் கூறியுள்ளார். பெற்றோல் விலையை குறைப்பதற்கு பதிலாக கடன் சுமையிலிருந்து பொதுமக்களுக்கு...
உள்ளூராட்சிமன்ற தேர்தலை பிற்போடப்படுவது அரசியல் தேவையின் காரணங்களுக்காக அல்ல என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளார். நேற்று பாராளுமன்றில் தினேஷ் குணவர்தன உள்ளூராட்சிமன்ற தேர்தல் சம்பந்தமாக எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போது பிரதமர் இவ்வாறு கூறியுள்ளார். உள்ளூராட்சிமன்ற தேர்தலை நடத்துவதற்கு உண்மையான தேவை இருப்பது ஐக்கிய தேசிய கட்சிக்கே என்று பிரதமர் மேலும் கூறியுள்ளார்.
எனக்கும் அப்பாவை கட்டிப்பிடிச்சுக் கொண்டு பைக்கில இருந்து பள்ளிக் கூடம் போக ஆசையாக இருக்குது மாமா ஆனா…. அப்படி நடக்குமா? என தனது பெரும் ஏக்கத்தை வெளிப்படுத்தினாள் அருள்பிரகாஸ் றஜிதா தரம் நான்கில் கல்வி கற்கும் ஒன்பது வயது மாணவி. கிளிநொச்சி அம்பாள்குளத்தில் வசித்துவரும் றஜிதாவின் அப்பா அருள்பிரகாஸ் வயது 44 கடந்த எட்டு வருடங்களாக...
சட்டமா அதிபர் திணைக்களத்தினால் வழங்கப்பட்ட உறுதிமொழியை அடுத்து கடந்த 18 நாட்களாக தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுவந்த தமிழ் அரசியல் கைதிகள் 14 பேரும் இன்று வெள்ளிக்கிழமை பகல் உண்ணாவிரதத்தைக் கைவிட்டுள்ளனர். இந்த தகவலை தமிழ் அரசியல் கைதி உறுதிப்படுத்தினார். மிகவிரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்று சட்டமா அதிபர் சார்பாக நீதின்றத்தில் இன்று முன்னிலையான...
உண்ணாவிரதம் இருக்கும் தமிழ் அரசியல் கைதிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்ய நடவடிக்கை எடுப்பதாக சட்டமா அதிபர் கொழும்பு நீதவான் நீதிமன்றில் இன்று தெரிவித்துள்ளார். உண்ணாவிரதம் இருக்கும் 13 தமிழ் அரசியல் கைதிகள் இன்றைய தினம் சிறைச்சாலையினால் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதாகவும் இதன்போது, குறித்த சந்தேக நபர்களுக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் பாரதூரமானது என்பதால் அவர்களுக்கு எதிராக...
இருபதுக்கு இருபது உலக கிண்ண போட்டிகளின் பொருட்டு அணியை தேர்வுச் செய்த முறை தொடர்பாக தான் கவலை கொள்வதாக முன்னாள் இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவரும், துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அமைச்சருமாகிய அர்ஜீன ரணதுங்க தெரிவித்தார். இந்நாட்டில் வழமைக்கு மாறான முறையில் அணி தேர்வு இடம்பெற்றுள்ளதென அமைச்சர் குறிப்பிட்டார். கிரிக்கெட் போட்டி தொடர்பாக போதிய அறிவற்ற...
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தியும், சிறையில் உண்ணாவிரதம் இருக்கும் அரசியல் கைதிகளுக்கு ஆதரவு வழங்கும் முகமாக யாழ்.பல்கலைகழக மாணவர்கள் அடையாள உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் மற்றும் ஆசிரியர் சங்கம் இணைந்து இந்த அடையாள உண்ணாவிரதத்தை முன்னெடுத்துள்ளனர். நல்லிணக்க அரசே மௌனம் சாதிப்பது ஏன்?, அனைத்து அரசியல் கைதிகளையும் உடன் விடுதலை...
Loading posts...
All posts loaded
No more posts
