Ad Widget

வெப்பமான காலநிலை : குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் விடுக்கப்படும் எச்சரிக்கை!

நாட்டில் தற்போது நிலவும் வெப்பமான காலநிலை காரணமாக குழந்தைகள் மத்தியில் பரவும் தோல் நோய் தொடர்பில், ருஹுனு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் பேராசிரியர் சுஜீவ அமரசேன விளக்கம் அளித்துள்ளார்.

இந்த காலப்பகுதியில் குழந்தைகள் உடலில் வியர்கூறு ஏற்பட கூடிய ஒருவகை நோய் பரவி வருகிறது.இதற்கு கிரீம் போன்றவை பயன்படுத்துவதால் பயன் ஏதும் இல்லை.இவை இரண்டு அல்லது மூன்று நாட்களில் தானாகவே குணமடையும் என அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை நிலவும் வெப்பமான காலநிலை காரணமாக இந்த தினங்களில் சூரிய ஒளியின் அதிகபடியாக இருக்க வேண்டாம் என வளிமண்டலவியல் திணைக்களம் பொது மக்களிடம் கோரியுள்ளது.

இந்த நாட்களில் பல பிரதேசங்களில் பகல் நேரங்களில் வெப்பம் சாதாரண நாட்களை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகரித்துள்ளதாக திணைக்களத்தின் எதிர்வு கூறல் பிரிவின் இயக்குனர் சரத் பிரேமலால் தெரிவித்துள்ளார்.

Related Posts