- Sunday
- August 9th, 2026
அவுஸ்திரேலியா நோக்கி பயணிக்க முற்பட்ட சட்டவிரோதக் குடியேற்றவாசிகள் ஒன்பது பேர் நீர்கொழும்பு கடற்பரப்பில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவர்களில் ஐந்து ஆண்களும், பெண் ஒருவரும், இரண்டு சிறுவர்களும் சிறுமி ஒருவரும் அடங்கியுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது. ஆழ்கடல் கப்பல் ஒன்றின் மூலம் நீர்கொழும்பு துறைமுகத்தில் இருந்து குறித்த சட்டவிரோத குடியேற்றவாசிகள் பயணத்தை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. புலனாய்வு பிரிவினர் வழங்கிய...
கல்விப் பொதுத்தராதர சாதார தரப் பரீட்சை வினாத்தாள்களை மீள மதிப்பீடுவதற்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் இன்றுடன் நிறைவடைவதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. இதன்பின்னர் மீள் மதிப்பிடுவதற்கான விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என திணைக்களம் கூறியுள்ளது. பாடசாலை பரீட்சாத்திகள் மீள் மதீப்பீட்டு விண்ணப்பத்தை அதிபரிடம் கையளிக்குமாறு கோரப்பட்டுள்ளது. தனியார் விண்ணப்பதாரிகள் பரீட்சைகள் திணைக்களத்தில் தமது விண்ணப்பத்தை சமர்ப்பிக்க...
தமிழகத்தில் இருந்த படகு மூலம் கஞ்சா கடத்த முயன்ற ஸ்ரீலங்கா பிரஜையொருவர் இந்திய பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். இராமேஸ்வரத்திற்கு அருகிலுள்ள பாம்பன் பகுதியில் இருந்து கஞ்சா கடத்தப்படவுள்ளதாக கியூ பிரிவு பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து கியூ பிரிவு பொலிஸார் நடத்திய தேடுதலின் போது 10 கிலோ கஞ்சா வைத்திருந்த ஸ்ரீலங்காவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்....
சாவகச்சேரி பிரதேசத்தில் மீட்கப்பட்ட தற்கொலை அங்கி விவகாரத்தில் தொடர்புபட்டுள்ளதாக சந்தேகிக்கப்படும் புலம்பெயர் தமிழர் இருவரை கைது செய்வதற்கு சர்வதேச பொலிஸாரின் உதவியை இலங்கைப் பொலிஸார் நாடியுள்ளனர். குறித்த சந்தேக நபர்கள் இருவரும் ஜேர்மனியில் வாழ்ந்து வருவதாக கிடைத்த தகவலுக்கு அமைய அவர்களைக் கைது செய்வதற்கான அடுத்தகட்ட நகர்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸ் தலைமையக வட்டாரங்களில் இருந்து...
வெளிநாட்டில் இருந்து தாயகம் திரும்பிய மற்றுமொரு தமிழ் இளைஞர் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். முல்லைத்தீவு – முத்தையன்கட்டு பிரதேசத்தைச் சேர்ந்த முத்துலிங்கம் ஜெயகாந்தன் என்பவரே கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். இவர் கடந்த 2013ஆம் ஆண்டு தொழிலின் நிமித்தம் மத்திய கிழக்கு நாட்டிற்கு சென்று கடந்த 12ஆம் திகதி நாடு...
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் எந்த இலக்கை நோக்கி பயணிக்கிறார் என்பதை மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன் கேட்டுக் கொண்டுள்ளார். யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இனப்பிரச்சினைக்கு சமஷ்டி அடிப்படையில் தீர்வு காணப்பதாக தமிழ் தேசியக் கூட்டமைபின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் முன்வைக்கப்பட்டது....
சாவகச்சேரி - தனங்கிளப்பு வீதியில் அருகில் பனை வடலிக்குள் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட வெடிகுண்டு, சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றத்தின் உத்தரவுக்கமைய விசேட அதிரடிப் படையினரின் உதவியுடன் செயலிழக்கப்பட்டதாக சாவகச்சேரிப் பொலிஸார் தெரிவித்தனர். வீதியால் சென்றவர்கள் இக்குண்டை அவதானித்து பொலிஸ் நிலையத்துக்குத் தகவல் வழங்கினர். இது தொடர்பில் பொலிஸார், நீதிமன்றத்தில் கவனத்துக்கு கொண்டு சென்றனர். நீதிமன்றத்தின் உத்தரவுக்கமைய அங்கு...
அச்சுவேலி தெற்கு மற்றும் நவக்கிரி பகுதியில் 3 வீடுகள் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர்களின் சகாக்களால், வீட்டு உரிமையாளர்களுக்கு அச்சுறுத்தல் இருப்பதால் அவர்களின் வீடுகளுக்கு பாதுகாப்பு வழங்குமாறு மல்லாகம் நீதவான் நீதிமன்ற நீதவான் ரீ.கருணாகரன், அச்சுவேலிப் பொலிஸாருக்கு உத்தரவிட்டார். மேலும், கொள்ளைச் சம்பவம் தொடர்பில் கைதாகிய சந்தேகநபர்களை எதிர்வரும்...
செம்மணிப் பகுதியில் கடந்த திங்கட்கிழமை (18) இரவு கும்பலொன்று ஒருவரைத் துரத்தித் துரத்தி வெட்டியதில் அந்நபர் கால் துண்டிக்கப்பட்ட நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணப் பொலிஸார் தெரிவித்தனர் கைதடியைச் சேர்ந்த இங்கிலாந்தில் வசித்து தற்போது விடுமுறையில் நாட்டுக்கு வந்திருந்த பொன்னம்பலம் நந்தகுமார் (வயது 44) என்பவரே இவ்வாறு வாள் வெட்டுக்கு இலக்கானார். இது...
முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் பொலிஸ் பாதுகாப்பிற்கு மத்தியில் வழக்கு ஒன்றிற்காக அழைத்துவரப்பட்ட கைதியொருவர் தப்பிச்சென்றுள்ளார். இந்த சம்பவம், நேற்று செவ்வாய்க்கிழமை (19) பிற்பகல் 2.20க்கு இடம்பெற்றுள்ளதாக முல்லைத்தீவுப் பொலிஸார் தெரிவித்தனர். தப்பிச்சென்ற கைதியைக் கைதுசெய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கையில் முல்லைத்தீவு பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.
இலத்திரனியல் ஊடகங்களை கட்டுப்படுத்த சுயாதீன அதிகார சபையொன்றை நிறுவுவதற்கு அரசாங்கம் ஆலோசித்து வருவதாக அறியமுடிகின்றது. பிரித்தானியாவில் செயற்படுத்தப்படும் முறைமையை போன்றே, இவற்றை செய்வதற்கு அரசாங்கம் ஆலோசித்துள்ளது. இலத்திரனியல் ஊடக நிறுவனங்கள் விடுத்த கோரிக்கைக்கு அமைவாகவே இந்த தீர்மானத்தை அரசாங்கம் எட்டியுள்ளதாக அறியமுடிகின்றது.
"சிங்கள மாநிலம், தமிழ் மாநிலம் என இலங்கையை இரண்டாகப் பிளவுபடுத்த முயற்சிக்கும் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை உடன் கைதுசெய்து அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுங்கள்."- இவ்வாறு அரசை வலியுறுத்தியுள்ளது கடும் போக்கு இனவாத அமைப்பான சிங்கள ராவய. அத்துடன் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் அப்பதவியிலிருந்து விலகி சிங்களவர் ஒருவருக்கு இடமளிக்க வேண்டும் என்றும்...
பொதுமக்களுக்கு சுமை அதிகரிக்காத வகையில் வற் வரியை அமுல்படுத்துவது தொடர்பில் அமைச்சரவைக் கூட்டத்தில் ஆராயப்பட்டுள்ளது என அறியமுடிகின்றது. அமைச்சரவைக் கூட்டம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அமைச்சரவைப் பத்திரங்கள் தொடர்பில் ஆராய்ந்து அவற்றுக்கு அனுமதி வழங்கிய பின்னர், வற் வரி (பெறுமதிசேர் வரி) விவகாரம் பற்றி வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்றுள்ளன. இதன்போதே...
வடக்கு , கிழக்கில் பாதுகாப்புத் தரப்பினர் வசமுள்ள காணிகள் தொடர்பான விவரங்களின் தொகுப்பை அதிகாரிகள் சமர்ப்பிக்கத் தவறியதால், அவர்கள் மீது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது அதிருப்தியை நேரில் வெளிப்படுத்தியதுடன் காரசாரமாகப் பேசியுமுள்ளார். அத்துடன் எதிர்வரும் 28ஆம் திகதிக்குள் அத்தனை விவரங்களையும் முழுமைப்படுத்தி, அன்றைய தினம் இடம்பெறும் கூட்டத்தில் கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி...
இறுதிக்கட்டப் போரின்போது இராணுவத்தினரிடம் சரணடைந்து காணாமல்போன விடுதலைப் புலிகளின் திருகோணமலை மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் எழிலன் உள்ளிட்ட பலர் தொடர்பான வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதற்கமைய குறித்த வழக்கு எதிர்வரும் மே மாதம் 19 ஆம் திகதிக்கு முல்லைத்தீவு நீதிமன்றத்தால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இறுதிக்கட்டப் போரின்போது சரணடைந்தவர்கள் தொடர்பான விவரங்கள் இராணுவத்தின் 58ஆவது படைப்பிரிவு முகாமில் இருக்கின்றன எனவும்,...
ஓரினச் சேர்க்கை மூலமே அதிகளவு எயிட்ஸ் நோய் பரவுவதாக, சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது. இவ் வருடம் அடையாளம் காணப்பட்டுள்ள எயிட்ஸ் நோயாளிகளில் பெரும்பாலானவர்கள் ஓரினச் சேர்க்கையாளர்களே என, பாலியல் நோய்கள் மற்றும் எயிட்ஸ் தடுப்பு பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் சிசிர லியனகே தெரிவித்துள்ளார். இவ் வருடத்தின் கடந்த 3 மாதங்களுக்குள் 70 எயிட்ஸ் நோயாளிகள் அடையாளம்...
சாவகச்சேரி மற்றும் மன்னார் ஆகிய பிரதேசங்களில் கண்டெடுக்கப்பட்ட தற்கொலை அங்கி, ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் என்பன, புலிகள் மீண்டும் பயங்கரவாத தாக்குதலுக்கு தயாராவதை உணர்த்துகின்றதென கலாநிதி தயான் ஜயதிலக தெரிவித்துள்ளார். யுத்தம் நிறைவடைந்ததன் பின்னர் தென்னிலங்கையிலும் வெளிநாடுகளிலும் தஞ்சமடைந்துள்ள புலி உறுப்பினர்கள் மூலம், மீண்டும் நாட்டில் பயங்கரவாத தாக்குதல் சம்பவங்கள் இடம்பெறுவதற்கான வாய்ப்புள்ளதாக அவர் மேலும்...
இலங்கை மக்கள் எதிர்வரும் மே மாதத்திலும் அதிகளவு வெப்பத்துடன் கூடிய காலநிலையை அனுபவிக்க நேரிடும் என இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது. மே மாதம் இறுதி வரையில் காற்று வீசக்கூடிய சாத்தியங்கள் கிடையாது எனவும், மாலை நேரங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
வடமாகாண சபை உறுப்பினர்கள் மூவர், ஒன்றாக இணைந்து ஒரே தட்டில் உணவு உட்கொண்ட சம்பவம், தமிழரசுக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசாவின் வீட்டில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (17) நடைபெற்றது. மாவை சேனாதிராசாவின் தாயாருடைய அந்தியோட்டிக் கிரியைகள் அன்றைய தினம் மாவையின் வீட்டில் நடைபெற்ற போதே இந்தச் சம்பவம் இடம்பெற்றது. வடமாகாண சபை உறுப்பினர்களாக...
கிளிநொச்சி நீதிவான் நீதிமன்ற புதிய நீதிவானாக ஏ.ஏ.ஆனந்தராஜா, நேற்று திங்கட்கிழமை (18) தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார். 2016 ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் திகதி தொடக்கம் நீதிவானாக நியமிக்கப்பட்டு கடமையாற்றி வந்த ஏ.ஜே.பிரபாகரன், இடமாற்றம் பெற்றுச் சென்றதையடுத்தே, புதிய நீதிவானாக ஏ.ஏ.ஆனந்தராஜா நியமிக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாண நீதிவானாக கடமையாற்றிய இவர், புலமைப்பரிசில் பெற்று, மேலதிக படிப்புக்காக அவுஸ்திரேலியாவுக்குச்...
Loading posts...
All posts loaded
No more posts
