வித்தியா கொலை: எதுவும் தெரியாதென கைவிரித்த 12 ஆவது சந்தேகநபர்!

புங்குடுதீவு மாணவி வித்தியா கொலையுடன் தொடர்புடைய 11வது மற்றும் 12வது சந்தேக நபர்கள் நேற்று ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போது, 12வது சந்தேக நபரான ரவீந்திரன் நீதிமன்றில் வாக்குமூலம் வழங்கினார். இதன்போது, வித்தியா கொலை சம்பந்தமாக தனக்கு வேறு எதுவும் தெரியாது என்றும், எல்லோருக்கும் தெரிந்த விடயமே தனக்கும் தெரியும் என்றும் கூறியுள்ளார். புங்குடுதீவு...

வவுனியாவில் கூண்டுக்குள் அடைக்கப்பட்ட தாய்!

வவுனியா சாந்தசோலை கிராமத்தில் ஒருவர் 95 வயதான தனது பெற்ற தாயை 5 வருடங்களாக கூண்டில் அடைத்து வைத்துள்ளதாக வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்படுள்ளது. அதனையடுத்து, குறித்த இடத்துக்குச் சென்ற வவுனியா பொலிஸார், தாயை மீட்டு வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதித்தனர். இதேவேளை, குறித்த நபரிடம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்ட போது, தாயை கொடுமைப்படுத்தவில்லை...
Ad Widget

12 தமிழ் அரசியல் கைதிகளுக்கு விளக்கமறியல் நீடிப்பு!

தமிழ் அரசியல் கைதிகள் 12 பேரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது. வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளில் 12 பேர் நேற்று கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து அவர்களின் விளக்கமறியல் மேலும் 14 நாட்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது. தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பாக சட்டமா அதிபர் திணைக்களத்தின்...

வடக்கிற்கு பயணம்செய்யும் வெளிநாட்டவர்கள் இராணுவ விசாவைப் பெறவேண்டும்!

சிறீலங்காவில் வடபகுதிக்குப் பயணிக்கும் வெளிநாட்டவர்கள் இராணுவத்தினரிடம் பதிவை மேற்கொள்ளவேண்டுமென பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. பாதுகாப்பு அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் இந்த விடயம் பிரசுரமாகியுள்ளது. மனிதாபிமான உதவிகளை மேற்கொள்ள ஐரோப்பாவிலிருந்து வருகைதந்த ஒரு ஈழத்தமிழர் மனித உரிமை ஆணையகத்தில் இது தொடர்பில் முறைப்பாடொன்றைப் பதிவு செய்துள்ளார். இராணுவப் புலனாய்வுப் பிரிவினரால் வடபகுதியில் கடத்தல்கள் அதிகரிக்கப்பட்டுள்ள பின்னணியில் இச்...

கிளிநொச்சியில் இராணுவத்தினரின் அடாவடி!

கிளிநொச்சி நகரை அண்டிய சில பிரதேசங்களிலுள்ள வியாபார நிலையங்களின் விபரங்களைத் திரட்டிவருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. கிளிநொச்சி வைத்தியசாலைக்கு முன்பாக இருக்கும் வியாபார நிலையங்களில் பதிவுகள் மேற்கொள்ளப்பட்டன. ஒவ்வொரு வியாபார நிலையமாகச் சென்ற இரண்டு இராணுவத்தினர் கடையின் பெயர், கடையின் உரிமையாளர் பெயர், கடையில் எத்தனைபேர் வேலைசெய்கிறார்கள், கடையில் என்ன வியாபாரம் நடக்கின்றது, எந்தக் கிராமசேவையாளர் பிரிவு,...

குடும்பத்தகராறு: மனைவி தீக்குளித்து மரணம்!! கணவரின் நிலை கவலைக்கிடம்!!!

மனைவி தீக்குளித்த போது, அத்தீயை அணைப்பதற்கு முயற்சி செய்த கணவனும் தீயில் எரிந்த பின்னர், இருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், மனைவி சிகிச்சை பலனின்றி புதன்கிழமை (20) உயிரிழந்துள்ளதாக யாழப்பாணம் போதான வைத்தியசாலையின் தகவல்கள் தெரிவிக்கின்றன. மண்டைதீவு 3ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த யோசப் அன்ரனி மரியம்மா (வயது 30) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். மதுபோதையில் கடந்த...

மீண்டும் சேவையில் இணைந்த பாதை

காரைநகருக்கும் ஊர்காவற்றுறைக்கும் இடையில் கடல்வழி சேவையில் ஈடுபட்டு பழுதடைந்த நிலையில் நிறுத்தப்பட்டிருந்த பாதை புதன்கிழமை (20) முதல் மீண்டும் வழமைக்கு திரும்பியது. இந்தப் பாதைச் சேவையானது, நாளொன்றுக்கு 6 தடவைகள் என்ற ரீதியில் வீதி அபிவிருத்தி அதிகார சபையால், இலவசமாக நடத்தப்பட்டது. இதன் மூலம் பயணிகள், மோடடார் சைக்கிள் மற்றும் லொறி ஆகியவற்றை கொண்டுச் செல்லக்கூடியதாக...

பயங்கரவாத தடுப்புச்சட்டம் நீக்கப்படாது

'பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை அகற்ற வேண்டும் என்றால் அதற்கு இணையான அல்லது நாட்டைப் பாதுகாக்கக்கூடிய சட்டமொன்று உருவாக்கப்பட வேண்டும். அவ்வாறான புதிய பலமான சட்டம் உருவாக்கப்படும் வரை பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் நீக்கப்படாது' என, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி தெரிவித்தார். பயங்கரவாத தடுப்புச்சட்டம் அகற்றிக்கொள்ளப்படுமா என்று ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே...

27,603 மாணவர்களுக்கு பல்கலைக்கழக அனுமதி!

பல்கலைக்கழகங்களுக்கு இம்முறை 27 ஆயிரத்து 603 மாணவர்கள் அனுமதிக்கப்படுவர் என பல்கலைக்கழ மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. கடந்த ஆண்டு 25 ஆயிரத்து 200 பேர் பல்கலைக்கழகங்களுக்கு அனுமதிக்கப்பட்டடனர். இம்முறை 2 ஆயிரத்து 403 பேருக்கு பல்கலைக்கழக அனுமதி அதிகரிக்கப்பட்டுள்ளது,

வித்தியா கொலை வழக்கு: ஜின்ரெக் நிறுவனப் பணிப்பாளரை மன்றில் முன்னிலையாகப் பணிப்பு!

புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கில் டி.என்.ஏ அறிக்கையை இன்னும் சமர்ப்பிக்காமை குறித்து மன்றில் முன்னிலையாகி விளக்கமளிக்குமாறு 'ஜின்ரெக்' நிறுவன அதிகாரிக்கு ஊர்காவற்றுறை நீதிவான் ஏ.எம்.எம்.றியால் உத்தரவிட்டுள்ளார். புங்குடுதீவில் மாணவி வித்தயா கூட்டுப் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுக் கொல்லப்பட்டார். அவர் கொலை செய்யப்பட்டு ஒரு வருடம் நெருங்குகிறபோதும் டி.என்.ஏ. பரிசோதனை அறிக்கை நீதிமன்றுக்கு இன்னமும் சமர்ப்பிக்கப்படவில்லை....

தனியார் வைத்தியசாலை செயற்பாடுகளில் கட்டுப்பாடு

தனியார் வைத்தியசாலைகளில் வைத்தியர்களை பார்வையிடுவதற்கான கட்டணம் மற்றும் வைத்தியர்கள் நோயாளிகளுடன் செலவிட வேண்டிய நேரம் போன்றவற்றை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் விரைவில் சுற்று நிருபங்கள் அனுப்பப்படவிருப்பதாக அமைச்சரவைப் பேச்சாளரும் சுகாதாரத்துறை அமைச்சருமான டொக்டர் ராஜித சேனாரட்ன தெரிவித்தார். வற் வரி மறுசீரமைப்பில் தனியார் வைத்தியசாலைகளின் சேவைகளுக்கான கட்டணம் அதிகரிக்கப்படுகிறது. எனினும், மருந்துகளுக்கான விலை அதிகரிக்கப்படாது. வற் வரி...

கோட்டாபயவை கைதுசெய்யுமாறு ஒபாமாவிடம் கோரிக்கை

தற்போது அமெரிக்காவுக்கு சென்றுள்ளதாக கூறப்படும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவை கைதுசெய்யுமாறு இரு தமிழ் அமைப்புக்கள் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவை வலியுறுத்தியுள்ளன. தமிழ் ப்போர் ஒபாமா (Tamils for Obama) மற்றும் அமெரிக்கன் தமிழ் போரம் (American Tamil Forum) ஆகிய இரு அமைப்புக்களுமே இவ்வாறு கோரியுள்ளதாக தெரியவந்துள்ளது. இது தொடர்பில் குறித்த...

வித்தியா கொலை திட்டமிட்ட சதி!! வித்தியாவின் தாயார்

புங்குடுதீவு மாணவி கொல்லப்பட்ட அதிர்ச்சியும் கொதிப்பும் இன்னும் மறையவில்லை. அதற்குள் ஒரு வருடம் ஓடிக் கடக்கவுள்ளது. வரும் மே மாதம் 13 ஆம் திகதியுடன் வித்தியா கொல்லப்பட்டு ஒரு வருடமாகிறது. வடக்கு, கிழக்கையே கொதிக்க வைத்த வித்தியா விவகாரம் இப்பொழுது மெது மெதுவாக அடங்கிச் செல்கிறது. வித்தியாவிற்கான எழுச்சியில் வலியுறுத்தப்பட்ட பிரதான கோரிக்கை கொலையாளிகளை அடையாளம்...

கணவனை வெட்டிக் கொலை செய்த மனைவி!

கணவனை வெட்டிக் கொன்ற மனைவி ஒருவர் கோடரியுடன் பொலிஸில் சரணடைந்த சம்பவம் ஒன்று வவுனியா பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த சம்பவம் நேற்று இரவு வவுனியா – புபுதுகம பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர். 43 வயதான எஸ்.எஸ்.திசாநாயக்க என்ற நபரே இவ்வாறு பலியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்த நபர் தினமும் வீட்டிற்கு மதுபோதையில்...

மழையுடன் வானிலிருந்து விழுந்த ஆமை குஞ்சுகள்!!

மஹரகம பிரதேசத்தில் நேற்று பெய்த கடும் மழையின் போது ஆமைக் குஞ்சுகள் மேலிருந்து விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மஹரகம வத்தேகெதர கெமுனு வீதி இலக்கம் 227/25 என்ற முகவரியைக் கொண்ட வீட்டின் மீது நேற்று மாலை 4.30 மணியளவில் இவ்வாறு ஆமைக் குஞ்சுகள் விழுந்துள்ளன. கடும் காற்றுடன் மழை பெய்து கொண்டிருந்த வேளையில் வானிலிருந்து கூரை மீத...

வெயில் காலத்தில் எம்மைப் பாதுகாத்துக் கொள்வது எப்படி?

கடந்த சில வாரங்களாக யாழ்ப்பாணத்தில் நிலவும் உச்ச வெயில் மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இதன் காரணமாக மக்கள் தமது நாளாந்த வாழ்க்கையில் சில கட்டாய மாற்றங்களை ஏற்படுத்த வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். வெயிலினால் எமது உடலில் பல்வேறு மாற்றங்கள் ஏற்படுகின்றன. தோலில் ஏற்படும் சாதாரண மாற்றங்களிலிருந்து (பருக்கள்) வெப்ப அதிர்ச்சி எனப்படும் பாரதூரமான நோய் வரை...

பாடசாலை மாணவர்களுக்கான கட்டுரை,சித்திரப் போட்டிகள்

உலக சுகாதார தினத்தையொட்டி பாடசாலை மாணவர்களிடையே நீரிழிவு சிகிச்சை நிலையம் நடத்தும் கட்டுரை மற்றும் சித்திரப் போட்டிகள். கட்டுரை தலைப்பு: ஆரோக்கியமான வாழ்வு, உள்ளடக்கம்: ஆரோக்கியமான வாழ்வின் அவசியத்தை வலியுறுத்தும் விதத்தில் கட்டுரையானது அமைவதோடு, ஏ4 தாளில் 3-4 பக்கங்களுக்குள் இருத்தல் அவசியமாகும். வயதுப்பிரிவு: கீழ்ப்பிரிவு தரம்1முதல் 5 வரை. மத்திய பிரிவு: தரம் 6...

36ஆண்டுகளுக்குப் பின் காவல்துறை தமிழ் அமைச்சரின் கையில்!

36 ஆண்டுகளுக்குப் பின்னர் முதன்முறையாக தமிழ் அமைச்சர் ஒருவரின் கையில் தற்காலிகமாக காவல்துறை நிர்வாகம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இரண்டு வாரங்களுக்கு சட்டம், ஒழுங்கு பதில் அமைச்சராக டி.எம். சுவாமிநாதன் அதிபர் மைத்திரிபால சிறிசேனவால் நியமிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து தற்காலிகமாக காவல்துறைத் திணைக்களம் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதனின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. 1980ஆம் ஆண்டு சிறீலங்கா அதிபராக ஜே.ஆர்.ஜெயவர்த்தன பதவிவகித்தபோது, அப்போது உள்நாட்டு...

யாழ். நகரத்தில் அல்லற்படும் பாதசாரிகள்

யாழ் போதனா வைத்தியசாலையின் முன் வீதியில் உள்ள பாதசாரிகள் நடந்து செல்லும் பகுதியில் மின்கம்பங்கள் புதிதாக நடப்பட்டு உள்ளமையால் குறித்த நடைபதையில் பாதசாரிகள் நடந்து செல்லது சிரமமாக உள்ளது. குறிப்பாக வைத்தியசாலைக்கு செல்லும் நோயாளர்கள் ,முதியவர்கள் மிகுந்த சிரமத்தை எதிர்நோக்குகின்றனர். மேலும், மின்கம்பம் நடுவதற்கு என தோண்டப்பட்டுள்ள கிடங்கு மூடப்படாமையால் ஆபத்தான நிலைமையும் ஏற்பட வாய்ப்புள்ளது....

மாலைதீவிலிருந்து கொண்டுவரப்பட்டவர்களில் 3 தமிழ் இளைஞர்களும் அடக்கம்!

இலங்கையில் போர் நடைபெற்ற நேரம் காணாமல் போனதாக முறைப்பாடு செய்யப்பட்ட மூன்று தமிழ் இளைஞர்களும் இலங்கைக்கு அழைத்துவரப்பட்டு வெலிக்கடைச் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. வவுனியா, விசுவமடு, முல்லைத்தீவு ஆகிய பகுதிகளைச் சேர்ந்த இளைஞர்களே இறுதிக்கட்ட யுத்தத்தின்போது காணாமல் போனார்கள் என அவர்களது பெற்றோரால் மன்னார் பிரஜைகள் குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டு காணாமல் போனோர் தொடர்பில் விசாரணை...
Loading posts...

All posts loaded

No more posts