நடிகர்களுக்கு மனோதத்துவ சிகிச்சை!

தற்கொலை சம்பவங்களை தடுக்கும் வகையில், நடிகர், நடிகையருக்கு மனோதத்துவ சிகிச்சை அளிக்கும் வசதி, நடிகர் சங்கத்தில் விரைவில் அறிமுகம் செய்யப்படுகிறது. சின்னத்திரை நடிகர்கள் முதல் வெள்ளித்திரை நடிகர்கள் வரை நடிகர்களின் தற்கொலை சம்பவம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சில தினங்களுக்கு முன்னர் சின்னத்திரை நடிகர் சாய்பிரசாந்த் தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக நடிகர்களுக்கு மருத்துவ அடையாள...

இணையவழி மூலம் இலவச படிப்புகள்!

தஞ்சாவூர் சாஸ்த்ரா பல்கலைக்கழகமும், என்.ஐ.ஐ.டி. டிவியும் இணைந்து தொலைக்காட்சியில் இணையவழி மூலமாக இலவசப் படிப்புகளை வழங்குகின்றன. இதுகுறித்து பல்கலைக்கழக முதன்மையர் (ஆய்வுத் துறை) எஸ். சுவாமிநாதன் தெரிவித்தது: உலகின் பல்வேறு பகுதிகளிலும் வாழும் மாணவர்களின் தேவையை நிறைவு செய்யும் வகையில் சாஸ்த்ரா பல்கலைக்கழகமும் என்.ஐ.ஐ.டி. டிவியும் ஒரு உடன்படிக்கையை ஏற்படுத்திக் கொண்டுள்ளன. இந்த உடன்படிக்கை பி.டெக்.,...
Ad Widget

கிளிநொச்சியில் புத்தர்சிலையுடன் கூடிய வழிபாட்டிடம் திறந்துவைப்பு!

கிளிநொச்சியில் புத்தர்சிலையுடன் கூடிய புதிய வழிபாட்டிடம் ஒன்று புதிதாகத் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இதனை கிளிநொச்சிப் படைகளுக்கான தலைமையகத் படைத்தளபதி மேஜர் ஜெனரல் அமல் கருணாசேன திறந்துவைத்துள்ளார். அனுராதபுரத்தில் அமைந்துள்ள ஸ்ரீமகாபோதி விகாரையிலிருந்து கடந்த ஜனவரிமாதம் வெள்ளரசு மரக்கிளையொன்று கொண்டுவரப்பட்டு கிளிநொச்சி படைத் தலைமையத்தில் நடப்பட்டது. அதனையடுத்து அந்த வெள்ளரசு மரத்துக்கான சுற்றுச்சுவருடன் கூடிய சமாதி நிலையில்...

இணையத்தள அங்குரார்ப்பணம்

தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் இணையத்தள அங்குரார்ப்பணம் நேற்று(15) செவ்வாய்கிழமை கொழும்பு தமிழ்ச்சங்க சங்கரப்பிள்ளை மண்டபத்தில் இடம்பெற்றது. எழுத்தாளர் உமா வரதராஜன், ஜே.வி.பி. பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத், புரவலர் ஹாசிம், தமிழ்ச் சங்கத் தலைவர் ராஜகுலேந்திரா, லயன் நோபேர்ட் பொர்னான்டோஆகியோர் கலந்து கொண்டனர்.

மீள்குடியமராவிடின் காணிகள் அரச உடைமையாக்கப்படும்

குடியமர வேண்டும். இல்லையேல் காணி அரசுடமையாக்கப்படும்' என முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்தில் செவ்வாய்க்கிழமை(15) நடைபெற்ற இந்த வீட்டுத்திட்ட பயனாளிகளுக்கான விசேட கூட்டத்திலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார் முல்லைத்தீவு, ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவுக்குட்ப்பட்ட பனிக்கன்குள கிராமத்தில் அரச உத்தியோகத்தர்களுக்கென வழங்கப்பட்ட வீட்டுத்திட்டத்தில் இலவசமாக காணி...

மின்தடைக்கான நேர அட்டவணை இதோ

அடுத்து வரும் இரு தினங்களுக்கு நாடு பூராகவும் 7 1/2 மணித்தியால மின்சாரத்தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக மின்சக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. குறித்த மின்சாரத்தடை இரு பகுதிகளாக மேற்கொள்ளபடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி இன்று புதன்கிழமையும் வியாழக்கிழமையும் குறித்த மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. காலை 7 மணி முதல் நண்பகல் 12.30 மணிவரையும் மாலை 6 மணிமுதல்...

கிளிநொச்சியில் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் உண்ணாவிரதம்!

கடல் அட்டை வளர்ப்புப் பண்ணை அமைக்கப்பட்டுள்ளதால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகக் கூறி ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கிளிநொச்சி, பூநகரி, பிதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கிராஞ்சி இலவன்குளம் பகுதியில் நேற்று முதல் இக்குடும்பத்தினர் உண்ணாவிரதத்தை ஆரம்பித்துள்ளனர். குறித்த தமது தொழிலில் ஈடுபடும் பகுதியில் கடல் அட்டை வளர்ப்பு பண்ணை அமைக்கப்பட்டுள்ளமையால் தமது வாழ்வாதாரம்...

சிறுவனை வாளால் வெட்டிய கும்பலைச் சேர்ந்த இருவர் கைது

தட்டாதெருச் சந்தி, ஐயனார் கோவிலடியிலுள்ள மரக்காலையில் பணிபுரியும் சிறுவனை வாளால் வெட்டி படுகாயப்படுத்திய சம்பவம் தொடர்பில், இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ். தலைமைப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டி.டி.பி.வீரசிங்க தெரிவித்துள்ளார். கடந்த வருடம் உயர்தர பரீட்சைக்கு தோற்றியிருந்த மாணவர்களே இந்தத் தாக்குதலை மேற்கொண்டுள்ளமை விசாரணைகளின்போது தெரியவந்துள்ளது. தாக்குதல் மேற்கொண்ட கும்பல் கைவிட்டுச் சென்ற...

வட மாகாணத்தில் பாலியல் லஞ்சம் கோரும் தமிழ் அரச அதிகாரிகள்! சந்திரிக்கா குற்றச்சாட்டு

வட மாகாணத்தில் கணவனை இழந்த இளம் பெண்களிடம் இராணுவம் மட்டுமன்றி தமிழ் அரச ஊழியர்களும் பாலியல் இலஞ்சம் கோருவதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். நல்லிணக்க செயற்பாடுகளை முன்னெடுக்கும் அலுவலகத்தின் பணிகள் தொடர்பில் ஊடகவிலாளர்களை தெளிவூட்டும் செயலமர்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், நீண்டகாலமாக...

இராணுவமயமாகும் பூநகரி!

கிளிநொச்சி - பூநகரி பிரதேசத்திலுள்ள நன்னீர் பகுதி உட்பட வைத்தியசாலை வளாகம் இராணுவத்தால் தொடர்ந்தும் கையகப்படுத்தப்பட்டுள்ளது' என வடமாகாண சபை உறுப்பினர் சு.பசுபதிப்பிள்ளை குற்றம் சுமத்தியுள்ளார். இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், நாட்டில் இடம்பெற்ற போரின் போது மக்கள் சொந்த இடங்களை விட்டு வெளியேறியதையடுத்து, அப்பகுதியை இராணுவம் ஆக்கிரமித்துள்ளது. தற்போது போர் முடிவடைந்து...

யாழ்ப்பாணத்தில் மின்பிறப்பாக்கிக்கு கிராக்கி

திடீர் மின் வெட்டு அமுல்படுத்தப்படும் நிலையில், யாழ்ப்பாணத்தில் சுய தேவைக்கான மின்பிறப்பாக்கிகளுக்கு கிராக்கி ஏற்பட்டுள்ளது. கடந்த 2 நாட்களாக அடிக்கடி மின்சாரம் தடைப்படுவதால் தொழில் நிறுவனங்கள், வியாபார நிறுவனங்கள் மற்றும் வீடுகளில் வசிப்போர் மின்சாரமின்றி பெரும் சிரமங்களை எதிர்நோக்குகின்றனர். இதனையடுத்து, யாழ்ப்பாணத்தில் மின்பிறப்பாக்கிகள் விற்பனை செய்யும் கடைகளில் கடந்த இரு நாட்களாக மின்பிறப்பாக்கிகள் விற்பனை சடுதியாக...

அலைபேசியில் உரையாடியவர் ரயில் மோதி படுகாயம்

தண்டவாளத்தில் நடந்துகொண்டு அலைபேசியில் உரையாடிச்சென்ற இளைஞன் மீது ரயில் மோதிய சம்பவமொன்று சாவகச்சேரி ஐயா கடையடியில் செவ்வாய்க்கிழமை (15) இரவு இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணம் ஓட்டுமடத்தடியை சேர்ந்த துரைசிங்கம் ஜங்கரன் (வயது 24) என்ற இளைஞனே இவ்வாறு படுகாயமடைந்துள்ளார். இதில் படுகாயமடைந்த இளைஞன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வங்கியொன்றில் கடமையாற்றும் மேற்படி இளைஞன், தனது நண்பர்களுடன்...

சுமந்திரன் எம்.பி ஐ சந்தித்தனர் வட மாகாண சபை உறுப்பினர்கள்!!

இந்திய மீனவர்களின் இழுவைப் படகுகளை இலங்கைக் கடற்பரப்பில் கட்டுப்படுத்துவது தொடர்பாக நாடாளுமன்றில் தான் முன்வைத்துள்ள பிரேரணைக்கு வடக்கு மாகாண சபையின் அங்கீகாரத்தைப் பெறுவதற்காக அதன் உறுப்பினர்களை நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் நேற்று செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசினார். குறித்த விடயத்தை தனிநபர் சட்டமூலமாகக் கொண்டுவந்த அவரின் பிரேரணைக்கு மாகாண சபைகளின் கருத்துக்களை நாடாளுமன்றம் கோரியது. வடக்கு மாகாண...

மின்தடை தொடர்பாக விசாரிக்க விசேட குழு!- ஜனாதிபதி

நாட்டில் ஏற்பட்ட மின்தடை தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்வதற்கும், இது தொடர்பாக உடனடியாக அரசு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளை அரசுக்கு பரிந்துரை செய்வதற்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விசேட குழுவொன்றை நியமித்துள்ளார். இக்குழுவில் அமைச்சர்களான ரஞ்சித் சியம்பலாபிட்டிய, சுசில் பிரேம ஜயந்த, பாட்டலி சம்பிக்க ரணவக்க, சாகல ரத்னாயக்க, பிரதி அமைச்சர்களான எரான் விக்கிரமரத்ன, அஜித் பி...

மெடம் ஷிராந்தியின் வீட்டில் பொலிஸார் அதிரடி சோதனை! – அதிர்ச்சியில் ராஜபக்‌ஷ குடும்பம்!

கொழும்பு - காலி வீதியில் கல்கிஸை மிஹிந்து மாவத்தையில் இலக்கம் 172/2 இல் அமைத்துள்ள இரு மாடிகள் கொண்ட வீட்டில் பொலிஸ் நிதி குற்ற விசாரணைப் பிரிவினர் நேற்று செவ்வாய்க்கிழமை சோதனை நடத்தியுள்ளனர். வீட்டின் முன்புறத்தில் 'மெடம் ஷிராந்தி விக்கிரமசிங்க ராஜபக்‌ஷ' எனப் பெயர்பலகை இடப்பட்டுள்ளது. இந்த வீட்டின் ஒரு பகுதி கட்டி முடிக்கப்பட்ட நிலையிலும்,...

ஊழலிலும் ஒழுங்கீனமான செயலிலும் ஈடுபட எவரையும் ஈடுபட அனுமதிக்க மாட்டோம்- சுமந்திரன்

வடக்கு, கிழக்கில் வீட்டுத் திட்டத்தை சாட்டாகப் பயன்படுத்தி ஊழலிலும் ஒழுங்கீனமான செயலிலும் ஈடுபட எவரையும் ஈடுபட அனுமதிக்க மாட்டோம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மீள்குடியேற்ற அமைச்சால் 65 ஆயிரம் வீடுகள் அமைக்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. மாதிரிக்காக 2 வீடுகள் யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்ட நிலையில்...

நடேஸ்வரா வித்தியாலயம் மீண்டும் மாணவர்களுக்காக!

நடேஸ்வரா மகா வித்தியாலயம் மீண்டும் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்காக கடந்த ஞாயிற்றுக்கிழமை(12) மாணவர்களிடம் கையளிக்கப்பட்டது. அண்மையில் வடக்கிற்கு விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, போரின் போது இராணுவத்தினரால் பயன்படுத்தப்பட்டு வந்த நடேஸ்வரா மகா வித்தியாலயத்தை நல்லிணக்க செயற்பாட்டினை வலுப்படுத்தும் ஓர் அங்கமாகவும் அங்குள்ள மாணவர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்தும் வகையிலும் மீள கையளிக்கும் நிகழ்வில்...

’96’ கொண்டாடுவோம் நிகழ்வு : யாழ் மாவட்ட கிரிக்கெட் அணி கொழும்புக்கு சுற்று பயணம்

உலக கிண்ணத்தை வெற்றிக்கொண்டு 20 ஆண்டுகள் பூர்த்தியை முன்னிட்டு '96 கொண்டாடுவோம்' எனும் தலைப்பின் கீழ் பல்வேறுப்பட்ட நிகழ்வுகளை இலங்கை துறைமுக அதிகாரசபையின் விளையாட்டுப்பிரிவு சேவ் த ஸ்போர்ட் இயக்கத்துடன் இணைந்து ஏற்பாடு செய்துள்ளது. இதனை முன்னிட்டு '96 கொண்டாடுவோம் - கிரிக்கெட் பயிற்சி முகாம்' நாளை மறுநாள் (18) தெஹிவல கவுடானந்த சாஸ்திரானந்த மகா...

விபத்தில் இளைஞர் படுகாயம்!

லொறி ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்ததுடன், மாடு ஒன்றும் உடல் சிதறி உயிரிழந்துள்ளது. யாழ். பளை புதுக்காட்டுச் சந்தியில் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த விபத்துச் சம்பவத்தில், பளைப் பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் கால் முறிந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில்...

கோதுமை மாவுக்கான விலை குறைப்பு

பேக்கரி உற்பத்திகளுக்காக பயன்படுத்தப்படும் கோதுமை மாவுக்கான விலையை ஏழு ரூபாவால் குறைக்க, பிரிமா நிறுவனம் தீர்மானித்துள்ளது. மேலும், நுகர்வோருக்கு ஒரு வார காலத்துக்கு அமுலுக்கு வரும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. நுகர்வோர் சேவைகள் அதிகார சபையின் கோரிக்கைக்கு அமைய இந்த விலை குறைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், இந்த நடவடிக்கையை எதிர்வரும் 20ம்...
Loading posts...

All posts loaded

No more posts