மூளைக்காய்சலினால் பாதிக்கப்பட்டு, யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்றுவந்த மாணவன், நேற்று வெள்ளிக்கிழமை (25) சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர்.
இடைக்காடு பகுதியைச் சேர்ந்த சீனிவாசன் தர்சிகன் (வயது 15) என்ற மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கடந்த 23ஆம் திகதி இரவு தலைவலியுடன் காய்ச்சல் ஏற்பட்டதைத் தொடர்ந்து உடனடியாக அவர் அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
வெள்ளிக்கிழமை (25) அதிகாலை மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டபோதே சிகிச்சை பலனின்றி மாணவன் உயிரிழந்துள்ளார்.