Ad Widget

65 ஆயிரம் வீடுகளை அமைக்கும் திட்டம் – மிட்டல் நிறுவன அதிகாரிகள் கொழும்பு வருகின்றனர்!

வடக்கு கிழக்கில் 65 ஆயிரம் வீடுகளை அமைக்கும் திட்டத்தை முன்னெடுக்க தெரிவு செய்யப்பட்டுள்ள இந்திய தொழில் அதிபரின் சர்வதேச நிறுவன அதிகாரிகள் இந்த வாரம் இலங்கை வரவுள்ளனர்.

இந்திய தொழில் அதிபர் லக்ஸ்மி மிட்டலின் ஏஷ்லொர் மிட்டல் நிறுவனமே 65 ஆயிரம் வீடுகளை நிர்மாணிக்க அரசாங்கத்தினால் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

எனினும் அந்த நிறுவனத்தின் வீடுகள் நீண்ட ஆயுளை கொண்டவையல்ல என்றும் அவை அதிகளவான 21 லட்சம் ரூபா பெறுமதியை கொண்டிருப்பதால், இடம்பெயர்தோருக்கு உகந்தததாக அமையாது என்றும் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் மிட்டல் நிறுவன அதிகாரிகள் எதிர்வரும் 31ஆம் திகதி இலங்கையில் அமைச்சரவை கேள்விப்பத்திரக்குழுவை சந்திக்கவுள்ளனர்.

இதன்போது இறுதி உடன்படிக்கைக்கான வரைபும் மேற்கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இதனையடுத்து உடன்படிக்கை வரைபு அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்படவுள்ளது. இதேவேளை மிட்டலின் வீடமைப்பு திட்டத்துக்கு பதில் வீடுகளை அமைக்க உள்ளுர் நிறுவனங்களும் தமது விருப்பத்தை வெளியிட்டுள்ளன.

Related Posts