- Saturday
- November 22nd, 2025
மனைவியின் மர்ம உறுப்பில் கத்தியால் குத்தியதுடன், மனைவியின் தலைமுடியையும் வெட்டி வீசிய கணவனொருவரை, 3 மாதங்களில் பின்னர், அச்சுவேலி பொலிஸ் நிலைய குற்றத்தடுப்புப் பிரிவு பொலிஸார், புதன்கிழமை (16) இரவு கைது செய்தனர். வல்வெட்டித்துறை பகுதியினை சேர்ந்த மேற்படி சந்தேகநபர், உடுப்பிட்டி பகுதியைச் சேர்ந்த குறித்த பெண்ணை திருமணம் செய்துள்ளார். இருப்பினும், இருவருக்கும் இடையில் சிலகாலமாக...
யாழ். மாவட்டத்தில் பணிபுரியும் தலைமை அதிகாரிகள் மாவட்ட செயலாளர், முதலமைச்சர், ஆளுநர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆலோசனைக்கு அமையவே பணியாற்ற வேண்டும். இல்லையேல் கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் எச்சரிக்கை விடுத்துள்ளார். தனியார் பஸ், போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஆகியவற்றுக்கு இடையிலான ஒருங்கிணைந்த நேர அட்டவணை...
கிளிநொச்சி, பரந்தன் பகுதியைச் சேர்ந்த பாடசாலை மாணவர்கள் மூவரைக் காணவில்லை என, அம்மாணவர்களது பெற்றோரால் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. நேற்று புதன்கிழமை காலை பாடசாலைக்குச் சென்ற மேற்படி மூன்று மாணவர்களும், நேற்று மாலை வரை வீடு திரும்பவில்லை. பெற்றோர் மற்றும் உறவினர்களால் பல இடங்களில் தேடியும் எந்த தகவலும் கிடைக்கப்பெறவில்லை. இதனையடுத்தே, சம்பவம்...
அரசாங்கம் பல நன்மைகளை செய்து வந்தாலும், இராணுவம் இருப்பது மிகப்பெரிய பிரச்சினையாக இருக்கின்றது என வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் பிரைஸ்ஸி ஜோன் ஹட்சசனுக்கு (Bryce Hatcesson) இன்று வியாழக்கிழமை தெரிவித்துள்ளார். அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனை அவரது வாசஸ்தலத்தில் சந்தித்து கலந்துரையாடினார். சுமார் 1 மணித்தியாலங்கள் நடைபெற்ற இந்த சந்திப்பின் பின்னர்...
நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் மின் உற்பத்தி நடவடிக்கைகள் தற்போது செயற்படுத்தப்படுவதாக, இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. இதன்படி, இன்று மாலையளவில் 600 மெகாவோட் மின்சாரத்தை தேசிய மின் கட்டமைப்பில் இணைத்துக் கொள்ள வாய்ப்புள்ளதாக, இலங்கை மின்சாரசபைத் தலைவர் அனுர விஜயபால தெரிவித்துள்ளார். அவ்வாறு செய்யின், இன்று மாலை மின் வெட்டு இன்றி, முழுமையான மின்சாரத்தை...
பலாலி விமான நிலைய விரிவாக்கம் தொடர்பில் ஆராய்வதற்காக இந்தியாவிலிருந்து அதிகாரிகள் குழுவொன்று இலங்கையை வந்தடைந்துள்ளது. அண்மையில் பலாலி விமான நிலைய விரிவாக்கம் தொடர்பில் இந்திய – இலங்கை ஆணைக்குழுத் திட்டத்தில் இணக்கம் காணப்பட்டு அதன்படி விரைவில் இதுதொடர்பில் ஆராய்வதற்காக இந்தியாவிலிருந்து குழுவொன்று இலங்கைக்கு அனுப்பிவைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்தே இக்குழுவினர் நேற்று முன்தினம் இலங்கையை வந்தடைந்ததாகவும்,...
மலேஷிய உட்பட வெளிநாடுகளில் தொழில் பெற்றுத் தருவதாகக் கூறி பணம் பெறும் மோசடிக்கும்பள்களிடம் ஏமாற வேண்டாமென இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் பொது மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இவ்வாறு மலேஷியாவில் தொழில் பெற்றுத் தருவதாக ஏமாற்றிய இருவர் நிட்டம்புவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பணியகம் மேலும் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மேலும்...
கும்மிடிப்பூண்டி அகதிகள் முகாமில் வசிக்கும் சுபேந்திரன் என்னும் ஈழத்தமிழ் அகதி மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை வன்மையாக கண்டிப்பதாக தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ.நெடுமாறான் தெரிவித்துள்ளார். அத்துடன், இந்த சம்பவத்துடன் தொடர்புடைய காவல் துறை ஆய்வாளரும் உடன் இருந்த காவலர்கள் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். தமிழகத்தை நம்பி தஞ்சம்...
காரைநகர் கல்வன்தாழ்வு பகுதியில் கடந்த 4ஆம் திகதி மண்வெட்டி தாக்குதலுக்குள்ளாகி படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த சின்னத்துரை தவமணிதேவி (வயது 56) என்பவர் சிகிச்சை பலனின்றி திங்கட்கிழமை (14) இரவு உயிரிழந்துள்ளதாக ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்தனர். இவரைத் தாக்கிய, இவரது சகோதரியின் கணவர் தலைமறைவாகியுள்ளார். மேற்படி பெண்ணுக்கும், அவரது தங்கையின் கணவருக்கும் இடையில்...
முகநூல் ஊடாக அரசுக்கும், அமைச்சர்களுக்கும் எதிராக முன்னெடுக்கப்படும் போலிப்பிராசாரங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது என்றும், இவ்வாறான 50 முகநூல் கணக்குகளின் தகவல்களை விரைவில் வெளியிடப்படும் என்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான மஹிந்த அமரவீர தெரிவித்தார். கொழும்பில் அமைந்துள்ள ஸ்ரீலாங்கா சுதந்திரக் கட்சித் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத்...
யாழ்ப்பாணம் செங்குந்தா மைதான கிரிக்கட் வீரர் கிறிஸ்தோபர் பிரேமன் கொலை வழக்கில் 3 எதிரிகளுக்கு தலா 15 ஆண்டுகள் கடூழியச் சிறைத் தண்டனை விதித்து நீதிபதி இளஞ்செழியன் தீர்ப்பளித்துள்ளார். இந்த வழக்கில் குற்றம் சுமத்தபட்ட ஏழு எதிரிகளில் முதலாம், இரண்டாம், ஏழாம் எதிரிகளான அருளானந்தம் சோபஸ், இராஜகுலேந்திரன் நிசாந்தன், உமாகாந்தன் கிரிகேசன் ஆகிய மூவருக்குமே இவ்வாறு...
நீதியும் சட்டமும் என்ற கோட்பாட்டில் இலங்கை, இந்தியா ஆகிய இருநாடுகளும் மீனவர்களுக்கான தீர்வினை பெற்றுகொடுக்க வேண்டும் என வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்தார். இந்திய மீனவர்களின் அத்துமீறலால் வடமாகாண மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளுக்கு உரிய தீர்வினை பெற்றுக்கொள்வது தொடர்பாக வடமாகாண மீனவ சம்மேளனத் தலைவர்கள், கிராம அமைப்புகள், மீனவ சங்க பிரதிநிதிகளுடான சந்திப்பு ஒன்று...
மன்னார் - முசலி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட சிலாபத்துறை பகுதியில் செவ்வாய்கிழமை (15) காலை ஒருகோடி 87 லட்சம் ரூபா பெறுமதிமிக்க கேரளா கஞ்சாவிணை மன்னார் மது வரி திணைக்கள அதிகாரிகள் மீட்டுள்ளனர். சிலாவத்துறையில் 56 வீட்டு திட்டத்திற்கு அருகில் அமைந்துள்ள. கடற்கரையை அண்டிய சிறு ஓடையில் நிலத்துக்கடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 187 கிலோ கிராம்...
அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகர் பிரைஸ் ஹட்டக்சன் மற்றும் அவரது குழுவினர் நேற்று புதன்கிழமை யாழ்.மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்டனர். நேற்று புதன்கிழமை காலை 11.00 மணியளவில் வடமாகாண ஆளுநர் அலுவலகத்திற்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றினை மேற்கொண்டு, வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரேயை சந்தித்து கலந்துரையாடினர். அதன்பின்னர் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகனை யாழ். மாவட்ட...
தெஹிவளை, கவுடான வீதியில் உள்ள வீடொன்றில் இருந்து கண்டெடுக்கப்பட்ட நான்கு பேரின் சடலங்கள் குறித்த பிரேத பரிசோதனை அறிக்கை வௌியாகியுள்ளது. வீட்டிற்குள் நச்சு வாயுவை சுவாசித்ததன் காரணமாகவே குறித்த நான்கு பேரும் உயிரிழந்திருப்பதாக களுபோவில போதனா வைத்தியசாலையில் நேற்று மாலை மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. நேற்று காலை ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று...
இலங்கை கிரிக்கெட் அணிக்கு அரசியல் மற்றும் அதிகார மட்ட அழுத்தங்கள் இருப்பதனால் அணியில் இருக்கும் வீரர்களால் விளையாட்டில் சுதந்திரமாக செயற்பட முடியாத சூழல் இருப்பதாக இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவரும் அமைச்சருமான அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார். இலங்கை கிரிக்கெட் அணி உலகக் கிண்ணத்தை வென்ற இருபது வருடங்களை கொண்டாடும் வைகயில், “96ஐ கொண்டாடுவோம்” என்ற...
இலங்கை தமிழர் வரலாற்றில் தமிழ் மக்களின் பிரச்சனையில் தீவிரமாக செயற்பட்டு பல்வேறு கஷ்டங்கள், துன்பங்கள், அவமானங்களையும் பட்டு நியாயமற்ற முறையில் உயிர் பறிக்கப்பட்ட ஒரு உத்தம தலைவன் எம்மை விட்டு பிரிந்து 27 வருடங்களுக்குள் அமிர்தலிங்கம் யார் என்று கேட்கின்ற இளைய தலைமுறையினருக்கு திருமதி மங்கையற்கரசி யாரென்று விளங்கப்படுத்துவது சுலபமான காரியமல்ல. திருமதி மங்கையற்கரசி அவர்களின்...
தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவு பொறுப்பாளராக கடமையாற்றி வந்த சண்முகலிங்கம் சிவசங்கர் எனப்படும் பொட்டு அம்மான் தமிழகத்தில் மறைந்து வாழ்ந்து வருவதாக திவயினவில் கீர்த்தி வர்ணகுல சூரிய தகவல் வெளியிட்டுள்ளார். மனைவி, பிள்ளையுடன் தமிழகத்தில் பொட்டு அம்மான் மறைந்து வாழ்ந்து வருகின்றார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பொட்டு அம்மான், 'குருட்டீ' என்ற பெயரில் தமிழகத்தில் வாழ்ந்து...
மன்னார் மாவட்டத்தில் நெற்சந்தைப்படுத்தும் சபையால் நெல் கொள்வனவு ஆரம்பமாகியுள்ளது. இதனை வடக்கு விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் கடந்த திங்கட்கிழமை (14.03.2016) சென்று பார்வையிட்டுள்ளார். வடக்கில் நெல் உற்பத்தி இம்முறை அதிகமாக இருந்தபோதும் நெல்லைச் சந்தைப்படுத்த முடியாமல் இருப்பதாக வடக்கு முதலமைச்சரும் விவசாய அமைச்சரும் அண்மையில் பிரதம மந்திரியைச் சந்தித்துத் தெரியப்படுத்தியிருந்தனர். இதன்போது, இது வடக்குக்கு மாத்திரம்...
தெஹிவளை, கவுடான வீதியில் உள்ள வீடொன்றில் இருந்து நான்கு சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது. மின்சாரம் தாக்கியதில் இவர்கள் நால்வரும் உயிரிழந்திருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பெண்கள் உள்ளிட்ட நான்கு பேரின் சடலங்களே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளன. அடையாளம் காண முடியாத அளவிற்கு உடல்கள் கருகி இருப்பதாக...
Loading posts...
All posts loaded
No more posts
