Ad Widget

பலாலி சர்வதேச விமானநிலைய முன்னெடுப்பு இந்திய அறிவுரையின் பிரகாரம் இடைநிறுத்தம்!

பலாலியில் சர்வதேச விமான நிலையம் அமைக்கும் முயற்சிகள் இந்திய அறிவுரையின் பிரகாரம் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

பலாலியில் சர்வதேச விமான நிலையம் அமைப்பது தொடர்பான சாத்தியவள கண்காணிப்புப் பணிகளுக்கு அண்மையில் இந்தியாவின் சார்பில் சென்னை விமான நிலைய தலைமை அதிகாரி தியான் சாஸ்திரி தலைமையிலான குழுவினர் வருகை தந்திருந்தனர்.

இக்குழுவினர் சமர்ப்பித்துள்ள அறிக்கையின் பிரகாரம் பலாலி விமான நிலைய சூழலானது சர்வதேச விமான நிலையமொன்றுக்கான சூழலைக் கொண்டிருக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, பலாலியில் சர்வதேச விமான நிலையமொன்றை அமைக்கும் முயற்சிகளைக் கைவிடுமாறும், அதற்காக காணி சுவீகரிப்பு மேற்கொள்வதை இடைநிறுத்துமாறும் குறித்த குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனும் பலாலியில் சர்வதேச விமானநிலையமொன்றை அமைப்பதற்காக பொதுமக்களின் காணிகளை சுவீகரிப்பதை இடைநிறுத்துமாறு வலியுறுத்தி வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Posts