Ad Widget

முதலமைச்சர்களின் மாநாட்டை புறக்கணித்தார் வடக்கு முதல்வர்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்ற முதலமைச்சர்களின் 32ஆவது மாநாட்டில், வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் பங்கேற்கவில்லை. இந்த மாநாடு, ஹிக்கடுவையில் கடந்த திங்கட்கிழமை நடைபெற்றது.

இதேவேளை, இன்று 23ஆம் திகதி புதன்கிழமையன்று இடம்பெறும், வாராந்த அமைச்சரவை மாநாட்டுக்கு வருகைதந்து, மாகாண சபைகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதிகளைப் பகிர்ந்தளிப்பதில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் தொடர்பில் கருத்துரைக்குமாறு அம்மாநாட்டில் பங்கேற்றிருந்த ஏனைய எட்டு மாகாணங்களின் முதலமைச்சர்களிடம், ஜனாதிபதி கேட்டுக்கொண்டார் என்பதுவும் குறிப்பிடத்தக்கது.

Related Posts