2016 ஆம் ஆண்டின் முதல் பூரண சந்திர கிரகணம் இன்று (23) நிகழவுள்ளது.பௌர்ணமி தினத்துக்கு அடுத்த நாள் இந்த சந்திர கிரகணம் ஏற்படவுள்ளது’ என ஆர்த்த சீ கிளார்க் நிறுவனத்தின் பேராசிரியர் சந்திர ஜயரத்ன, தெரிவித்தார்.
இன்று மாலை 3.09 மணியளவில் ஆரம்பிக்கும் இந்த சந்திர கிரகணத்தை இலங்கை மக்கள் 6.40 மணியளவில் காணமுடியும் என பேராசிரியர் மேலும் தெரிவித்துள்ளார்.
பிற்பகல் 6.23 மணியளவில் நிலவின் 77 சதவீத பகுதி பூமியின் நிழல் படிந்திருக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.