‘சம்பந்தரிடமோ, த.தே.கூ.விடமோ இனியும் ஏமாறோம்’- தமிழ் அரசியல் கைதிகள்

கடந்த காலங்களில், அனைத்துத் தரப்பினரும் எம்மை ஏமாற்றிவிட்டனர். அதனால், இனியும் எவரிடத்திலும் நாம் ஏமாறுவதற்குத் தயாராக இல்லை. எமது கோரிக்கைகள் நிறைவேறும் வரையில், எமது இந்த உண்ணாநிலைப் போராட்டத்தைக் கைவிடப்போவதில்லை' என்று கொழும்பு மெகசின் சிறைச்சாலையில், உண்ணாநிலைப் போராட்டமொன்றை முன்னெடுத்துவரும் தமிழ் அரசியல் கைதிகள் தெரிவித்துள்ளனர். இவ்வாறு போராட்டம் நடத்திவரும் கைதிகளின் நிலைமை தொடர்பில் ஆராய்வதற்காக,...

தண்டவாளத்தில் படுத்திருந்த இளைஞனின் கை துண்டிப்பு

ரயில் விபத்தில் இளைஞர் ஒருவர் தனது வலது கையை முழங்கையுடன் இழந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாiயில் அனுமதிக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாண் நாவலர் வீதி ஐந்து சந்திப்பகுதியைச் சேர்ந்த யசுரூதீன் சயின் மொஹமட் (வயது 19) என்ற இளைஞரே இவ்வாறு படுகாயமடைந்துள்ளார். கொழும்பில் இருந்து காங்கேசன்துறையில் நோக்கி நேற்று வியாழக்கிழமை அதிகாலை 5.30 மணியளவில் புகையிரதம் பயணித்துக்...
Ad Widget

111 ஆசிரியர்களை தெரிவு செய்வதற்கு ஏன் 397 பட்டதாரிகளுக்கு நேர்முகத்தேர்வு நடாத்தவேண்டும்??

வடக்கு மாகாணத்திலுள்ள பாடசாலைகளில் நிலவும் ஆசிரிய வெற்றிடங்களுக்கு பட்டதாரிகள் மூலம் ஆசிரியர் சேவை 3.1(அ) இற்கு நியமனம் தொடர்பாக சேவை பிரமாணத்திற்கு முரணாக நியமனம் 11.03.2016 வழங்க இருப்பது தொடர்பில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தீர்வு வழங்கப்பட வேண்டுமென கோரிக்கையினை நேர்முகத்தேர்வில் பங்குபற்றிய பட்டதாரிகள் நேற்று (10.03.2016) வட மாகாண கல்வி அமைச்சு, கல்வி அமைச்சின் செயலாளர், ஆளுநர்...

யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம்

தடுத்து வைக்கப்பட்டுள்ள தம்மை விடுதலை செய்யுமாறு கோரி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள 14 தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஆதரவு தெரிவித்து யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் இன்று வெள்ளிக்கிழமை அடையாள உண்ணாவிரத போராட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளனர். யாழ்.பல்கலைக்கழக வளாகத்தில் இன்று வெள்ளிக்கிழமை காலை பத்து மணி முதல் மாலை ஐந்து மணிவரை அந்த அடையாள உண்ணாவிரத போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக...

இலங்கை கிரிக்கெட் அணியில் மூன்று தமிழ் வீரர்கள்!

மலேசியாவில் இடம்பெறவுள்ள கிரிக்கெட் சுற்றுப் போட்டிகளில் பங்குபற்றும் 19 மற்றும் 25 வயதிற்கிடைப்பட்டோருக்கான இலங்கை இலங்கை கிரிகெட் அணியில் தமிழர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத்தைச் சேர்த்த மூவர் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர். 19 வயதிற்குட்பட்டோருக்கான அணியில் பதுளை சரஸ்வதி தேசிய கல்லூரி மாணவன் கோபிநாத்தும், 25 வயதிற்குட்பட்டோருக்கான அணியில் யாழ். புனித பத்திரிசியார்...

பூர்வீக காணிகளை இராணுவ தேவைகளுக்கு விற்க வேண்டாம்!

ஆசைப்பேச்சுக்களுக்கு மயங்கியோ அல்லது பயமுறுத்தல்களுக்குப் பயந்தோ தமது பூர்வீக காணிகளை இராணுவ தேவைகளுக்கு விற்க வேண்டாம் என வடமாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் கோரிக்கை விடுத்துள்ளார். வடமாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள செய்தி குறிப்பிலேயே இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார். செய்தி குறிப்பில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, போர் முடிவுற்று பல ஆண்டுகளான பின்பும் நாட்டில் சமாதானம்...

எதிர்வரும் மாதங்கள் இலங்கைக்கு முக்கியமானவை : ஐ.நா மன்றில் அல் ஹுசைன்

இலங்கை நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான பாதையை நோக்கி பயணிப்பதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் செய்யத் அல் ஹுசைன் தெரிவித்துள்ளார். ஜெனீவாவில் நடைபெற்றுவரும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 31ஆவது அமர்வில் வருடாந்த அறிக்கையை சமர்ப்பித்து உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அத்துடன் எதிர்வரும் மாதங்கள் இலங்கைக்கு மிகவும் முக்கியமானதாக அமையும் என தெரிவித்த...

வடக்கின் சமர் : முன்னிலையில் யாழ். மத்தி

வடக்கின் மாபெரும் போர் என வர்ணிக்கப்படும், யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கும் யாழ்ப்பாணம் சென். ஜோன்ஸ் கல்லூரிக்குமிடையிலான வருடாந்த கிரிக்கெட் போட்டியின் 110ஆவது போட்டி, யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானத்தில் நேற்று ஆரம்பமானது. முதலாம் நாளில் இரு அணிகளுமே கடுமையான போட்டி வெளிப்படுத்தியதோடு, சென். ஜோன்ஸின் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ள யாழ். மத்தி, சிறியளவிலான முன்னிலையைப் பெற்றுள்ளது....

2009 மே 19இல் உயிருடனேயே இருந்தார் பிரபாகரன்!- பொன்சேகா

இறுதிக்கட்டப் போர் முழுமையாக முடிவடைவதற்கு முன்னரே போர் முடிவடைந்துவிட்டது என்ற அறிவிப்பை மஹிந்த ராஜபக்‌ஷ விடுத்தார் என்றும், 2009 மே 19ஆம் திகதிகூட பிரபாகரன் உயிரிழக்கவில்லை என்றும் இறுதிக்கட்டப் போருக்குத் தலைமை தாங்கிய முன்னாள் இராணுவத் தளபதியான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா நாடாளுமன்றில் அதிர்ச்சித் தகவல் வெளியிட்டார். அத்துடன், இறுதிக்கட்டப் போரில் என்ன நடந்தது...

மஹிந்தவுக்கு எதிரான வழக்கு: ஜூனில் விசாரணை!

முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய நாடாளுமன்றி உறுப்பினருமான மஹிந்த ராஜபக்‌ஷ உள்ளிட்ட ஏழு பேருக்கு எதிரான வழக்கு எதிர்வரும் ஜூன் மாதம் 23 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தல் பிரசாரங்களுக்காக மக்களை ஏற்றிச் சென்ற இலங்கைப் போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பஸ்களுக்கான கட்டணமாக 14 கோடியே 20 இலட்சம்...

இறுதிப்போரில் 400 கிலோவுக்கு மேற்பட்ட தங்கம் மீட்பு! பெருந்தொகையானவை ராஜபக்‌ஷவினரால் கொள்ளை!

இறுதி யுத்தத்தின்போது 400 கிலோவுக்கு மேற்பட்ட தங்கம் மீட்கப்பட்டதாக நாடாளுமன்றில் நேற்று வியாழக்கிழமை தகவல் வெளியிட்ட பீல்ட் மார்ஷல் அமைச்சர் சரத் பொன்சேகா, இவற்றுள் பெருந்தொகையான தங்கத்தை ராஜபக்‌ஷவினர் கொள்ளையடித்துவிட்டனர் என பகிரங்கமாக ஆதாரத்துடன் குற்றஞ்சாட்டினார். அத்துடன், தன்னால் கைப்பற்றப்பட்ட 220 கிலோகிராம் தங்கத்தின் உரிமையாளர்களின் பெயர், விவரங்கள் பொறிக்கப்பட்டிருந்தன என்று மேலும் தகவல் வெளியிட்ட...

வருடமொன்றுக்கு 15,000 கருக்கலைப்புக்கள்

இலங்கையில் வருடமொன்றுக்கு 15,000 கருக்கலைப்புக்கள் இடம்பெறுவதாக, சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. நேற்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், உளவள ஆரோக்கிய பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் சித்ரமாலி சில்வா இதனைக் கூறியுள்ளார். தற்போது, வறுமை, போசாக்கின்மை, உடல்நிலை மாற்றம், வீட்டுப் பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளால் பெண்கள் உளநிலை பாதிப்புக்கு உள்ளாவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதேவேளை, வருடாந்தம்...

ஆனையிறவு தாக்குதல் வழக்கு – சந்தேகநபர் விடுதலை

ஆனையிறவு இராணுவ முகாம் மீது ஓயாத அலைகள் 3 அணிகளில் இணைந்து தாக்குதல் நடத்தியதாகக் குற்றம் சுமத்தப்பட்ட வழக்கில் சந்தேகநபரான விடுதலைப் புலிகள் அமைப்பின் புலனாய்வு பிரிவைச் சேர்ந்தவர் எனக் கூறப்படும் ஒருவரை, யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் விடுதலை செய்துள்ளார். கடந்த 2000ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 22, 23ம் திகதிகளில் ஆனையிறவு...

இலங்கை இராணுவத்தினரால் தமிழர்களை வெற்றி கொள்ள முடியவில்லை! ஆதங்கத்தில் ஞானசார தேரர்

இலங்கை இராணுவத்தினரால் பிரபாகரனின் ஆயுதங்கள் மௌனிக்கப்பட்ட போதிலும், தமிழர் தரப்பை வெற்றிக் கொள்ள முடியாதுள்ளதாக பொதுபல சேனா அமைப்பு தெரிவித்துள்ளது. கொழும்பில் இன்று (9) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றிய பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். வட மாகாணத்திலுள்ள பெரும்பான்மை சமூகத்தின் காணிகளை, சிறுபான்மை மக்கள் சுவீகரித்து...

வடமாகாண சபை தகவல் அறியும் சட்டமூலத்தை சபை ஏற்றுக்கொண்டது

தகவல் அறியும் சட்டமூலம் பிரிவு பிரிவாக விவாதித்து பரிந்துரைகள் வழங்கப்பட வேண்டும் எனக்கூறப்பட்டபோதும், முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் உறுப்பினர்கள் சிலரின் பரிந்துரைகளுடன் தகவல் அறியும் சட்டமூலத்தை வடமாகாண சபை ஏற்றுக்கொண்டது. தேநீர் இடைவேளை வரை, தகவல் அறியும் சட்டமூலத்தைப் பற்றி தனித்தனியாக விவாதித்து முடிவெடுக்க வேண்டும். இதற்கு இரண்டு அல்லது மூன்று நாட்கள் அமர்வுகள் தேவைப்படும்...

இராணுவத்தினரின் குற்றங்களை மறைப்பது தேசிய பாதுகாப்பா?

மைதானங்களில் வைத்து பலர் பிடிக்கப்பட்டு, கடத்தப்பட்டு காணாமற்போனமை தொடர்பில் தகவல் இல்லை. கேட்டால் தேசிய பாதுகாப்பு என்கின்றனர். இராணுவத்தினரின் குற்றங்களை மறைப்பது தேசிய பாதுகாப்பா?' என ஆளுங்கட்சி உறுப்பினர் கந்தையா சர்வேஸ்வரன் கேள்வி எழுப்பினார். வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு, வடமாகாண சபையில் இன்று வியாழக்கிழமை (10) நடைபெற்றபோதே அவர் இவ்வாறு கேள்வி எழுப்பினர். இங்கு...

 ‘நிரந்தர நியமனம் வழங்கப்படும்’ என கடிதம் வேண்டும்

நிரந்தர நியமனம் வழங்கப்படும்” என எங்களை ஏமாற்றிக்கொண்டு இருக்கின்றார்கள். “விரைவில் எங்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கப்படும்” என வடமாகாண சுகாதார அமைச்சு உறுதிக் கடிதத்தை வழங்கவேண்டும் என தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் 34 சுகாதாரத் தொண்டர்களும் தெரிவித்தனர். தங்களுக்கான நிரந்தர நியமனம் வழங்கப்பட வேண்டும் எனக்கோரி மேற்படி தொண்டர்கள், பண்ணையில் அமைந்துள்ள...

கூட்டுறவாளர் வீரசிங்கம் நினைவாக விரைவில் அஞ்சல் தலை வெளியீடு

கூட்டுறவு இயக்கத்தின் முன்னோடிகளில் ஒருவரான அமரர் வி.வீரசிங்கம் அவர்களின் நினைவாக மே மாதத்தில் அஞ்சல் தலை வெளியிடப்பட இருப்பதாகக் கூட்டுறவுத்துறை அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார். கூட்டுறவு அமைச்சர் பொ.ஐங்கரநேசனுக்கும் பனை தென்னைவளக் கூட்டுறவுச் சங்கங்களின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான கலந்துரையாடல் அண்மையில் யாழ். பொதுநூலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. அந்த கலந்துரையாடலிலேயே இவ்வாறு தீர்மானித்துள்ளனர். கூட்டுறவு அமைச்சால்...

காரைநகரில் இராணுவ சிப்பாய் தற்கொலை

காரைநகர் பிரதேசத்தில் இராணுவ சிப்பாய் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். ஊர்காவற்துறை ஏலாரை இராணுவ முகாமில் பணியாற்றிய 26 வயதான இராணுவ சிபாயே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக ஊர்காவற்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த இராணுவ சிப்பாய் கொகரெல்ல-கொட்டுஹேன பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்றும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். தற்சமயம் இவரது சடலம் யாழ்ப்பாணம் வைத்தியசாலையில்...

‘வடக்கின் சமர்’ ஐ ஆரம்பித்து வைத்தார் அர்ஜீன ரணதுங்க!

யாழ். புனித சென். ஜோன்ஸ் கல்லூரி அணி மற்றும் யாழ். மத்திய கல்லூரி அணிகளுக்கு இடையிலான ‘வடக்கின் சமர்’ என்றழைக்கப்படும் வருடாந்த மாபெரும் கிரிக்கெட் போட்டியின் 110ஆவது அத்தியாயம் இன்று யாழ். மத்திய கல்லூரி மைதானத்தில் ஆரம்பமானது. குறித்த சமரை இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும், தற்போதைய கப்பல்கள் மற்றும் துறைமுக அமைச்சரான அர்ஜீன...
Loading posts...

All posts loaded

No more posts