- Saturday
- November 22nd, 2025
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் கொல்லப்பட்டார் எனக்கூறும் அரசாங்கம், அவர் எப்போது கொல்லப்பட்டார் மற்றும் அவரது சடலத்துக்கு என்ன ஆனது என்பது தொடர்பில் எந்தத் தகவலையும் இதுவரையும் வெளியிடவில்லை' என வட மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார். வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு, வடமாகாண சபையில் இன்று வியாழக்கிழமை (10) நடைபெற்றது....
சட்டமும் ஒழுங்கும் மாகாண சபையின் கட்டுப்பாட்டுக்குள் இருப்பதாக அரசியல் யாப்பு கூறினாலும் எமது கட்டுப்பாட்டுக்குள் அவை இல்லை என்பதே உண்மை. பல சட்ட, ஒழுங்கு சம்பந்தமான நடவடிக்கைகள் பற்றிய எமது கோரிக்கைகள் புறக்கணிக்கப்படுகின்றன என்பதே உண்மையாகும் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். 2016ஆம் ஆண்டிற்கான சர்வதேச மகளிர் தின நிகழ்வுகள் வடமாகாண சுகாதார அமைச்சின்...
தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்குமாறும், அவர்களது உண்ணாவிரதப் பேராட்டத்திற்கு ஆதரவளிக்கும் நோக்கிலும் கிளிநொச்சியில் சங்கிலிப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்தப் போராட்டம் இன்று வியாழக்கிழமை காலை 8.10 அளவில் ஆரம்பமாகியுள்ளது. கிளிநொச்சி மாவட்ட பொது அமைப்புகள் இணைந்து இதனை ஏற்பாடு செய்துள்ன. இதற்கமைய கிளிநொச்சி திரேசம்மா தேவாலயத்தில் இந்த கவனயீர்ப்பு பேரணி ஆரம்பமாகி, நகர் பிள்ளையார் கோவில்...
இலங்கை அரச போக்குவரத்துச் சேவைக்குச் சொந்தமான பேரூந்து சாரதி ஒருவர் குறித்த பேரூந்தில் பயணித்த மாணவிகளை தகாத வார்த்தையினால் திட்டியதுடன், மாணவி ஒருவரை தாக்க முற்பட்டதாக தெரியவருகின்றது. வவுனியாவில் இருந்து நேற்று புதன் கிழமை மதியம் 1.30 மணியளவில் மன்னார் நேக்கி பயணித்த குறித்த பேரூந்தில் இந்த சம்பவம் இடம்பெற்றது. குறித்த மாணவி தனது பயணத்தை...
ஸ்ரீலங்கா கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இந்திய மீனவர்கள் நால்வர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் – காரைநகர் கடற்பரப்பின் வடமேற்குப் பகுதியில் வைத்து இவர்கள் நேற்று புதன்கிழமை இரவு கைதுசெய்யப்பட்டுள்ளதாக கடற்படைப் பேச்சாளர் அக்ரம் அலவி தெரிவித்தார். தமிழகம் - புதுக்கோட்டையைச் சேர்ந்த இந்த மீனவர்கள் மீன்பிடி நடவடிக்கைக்குப் பயன்படுத்திய ரோலர் படகொன்றையும் கடற்படையினர்...
கீரிமலை பகுதியில் காணி சுவீகரிப்பிற்காக முன்னெடுக்கப்பட்ட முயற்சி பொதுமக்களின் எதிர்ப்பை அடுத்து கைவிடப்பட்ட நிலையில் யாழ். திருவடிநிலை பகுதியில் காணி அளவீடுகள் மேற்கொள்ளப்படவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிலையில் நல்லாட்சி அரசாங்கத்தின் ஆட்சியிலும் காணி சுவீகரிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர். இதனடிப்படையில் இன்று வியாழக்கிழமை யாழ்ப்பாணம் – திருவடிநிலை பகுதியில் இந்த நடவடிக்கை...
யாழ். பல்கலைக்கழகத்தின் கல்விசாரா ஊழியர் வெற்றிடங்களை உயர்கல்வி அமைச்சால் அனுப்பப்பட்டுள்ள பட்டியலிலிருந்து நிரப்ப நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதையிட்டு யாழ். பல்கலைக்கழக ஊழியர் சங்கம் அதிருப்தி அடைந்துள்ளது. ப.மா.ஆ.சுற்றுநிருபம் 876 (06.06.2006) இன் பிரகாரம் தமது செயல் ஏற்புடையதேயென யாழ்.பல்கலைக்கழக நிர்வாகம் காரணம் கூறுகின்ற போதிலும் இப்பட்டியல் நியமனம் நல்லாட்சி அரசாங்கமும் உயர்கல்வி அமைச்சை முன்னைய அரசாங்கம்...
'வடக்கு, கிழக்கு ஆகிய இரு மாகாணங்களிலும் உள்ள முப்படைகளினதும் முகாம்களை 2016ஆம் ஆண்டில் அகற்றுவது தொடர்பில் சரியான பதிலொன்றை வழங்க முடியாது' என்று பாதுகாப்பு அமைச்சு, நாடாளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை (09) அறிவித்தது. நாடாளுமன்றத்தில் வாய்மூல விடைக்கான வினாக்கள் நேரத்தின் போது, 'வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள முகாம்களை இவ்வாண்டில் அகற்றுவது தொடர்பில் முடிவேதும் இருக்கின்றதா?'...
"வடக்கில் இடம்பெற்றுவரும் கொலை, கொள்ளைகள், மதுபோதை பாவனை, பாலியல் துஷ்பிரயோகம் முதலான குற்றச் செயல்களைத் தடுப்பதற்காக பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது'' என்று சட்டம் ஒழுங்கு மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இதற்கமைய காலை, மாலை, இரவு பொலிஸ் ரோந்து சேவைகள், உடனடி வீதித் தடைகள், உடனடி சுற்றிவளைப்புகள் என்பன ஏற்படுத்தப்பட்டு வடக்கின் அனைத்துப்...
யாழ் காக்கைதீவு கடற்கரைப்பகுதியில் கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக யாழ் விசேட பொஸிசார் தெரிவிக்கின்றனர். கடற்கரைப் பகுதியில் மீனவர்கள் தொழிலுக்கு சென்று கொண்டிருந்து போது நேற்று மாலை 04.00 மணியளவில் இக் கைக்குண்டு மீட்கப்பட்டுள்ளதாக பொஸிசார் தெரிவிக்கின்றனர். இது தொடர்பில் மேலதிக விசாரணையினை பொஸிசார் மேற்கொண்டு வருகின்றனர். இக் கைக்குண்டு வெடிக்கப்படாத நிலையில் காணப்பட்டுள்ளது என்பது குறிப்பிடதக்கது.
யாழ் மாவட்டத்தில் பாடசாலை சேவையில் ஈடுபடும் வாகனங்களின் தரம் பரீட்சிக்கும் நிகழ்வு மாநகர சபை மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதன் போது இச்சேவையில் ஈடுபடும் முச்சக்கர வண்டிகள், வேன்கள், பஸ் வண்டிகள் மோட்டார் திணைக்கள அதிகாரிகளினால் பரிசோதனை செய்யப்பட்டன. இப்பரிசோதனையின் போது யாழ் போக்குவரத்து பொலிசாரும் கண்காணிப்பில் ஈடுபட்டனர். அத்துடன் பரிசோதனை செய்யப்பட்ட வாகனங்கள் உரிய...
இலங்கையில் நடந்த போரின் போது, புலிகளிடமிருந்து மீட்கப்பட்ட தங்க நகைகளில் பொதுமக்களுக்கு உரியதை, அவர்களிடமே கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். போரின்போது, போர் வலயப் பகுதிகளிலிருந்து இராணுவத்தினரால் மீட்கப்பட்ட நகைகள் குறித்து, மக்கள் விடுதலை முன்னணி உறுப்பினர் நலிந்த ஜயதிஸ்ஸ பாராளுமன்றத்தில் எழுப்பி கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு...
வல்வெட்டித்துறையைச் சேர்ந்த பாடசாலை மாணவி ஒருவரைக் கடத்திச் சென்று பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில், குடும்பஸ்தர் ஒருவருக்கு யாழ்ப்பாண மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் 15 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து, தீர்ப்பளித்துள்ளார். அத்துடன் 30,000 ரூபா அபராதமும், பாதிக்கப்பட்ட நபருக்கு இரண்டு இலட்சம் ரூபா நஸ்டயீட்டை செலுத்த வேண்டும் எனவும் இதன்போது...
அரசியலமைப்பு பேரவை அமைப்பது சம்பந்தமான யோசனை வாக்கெடுப்பின்றி பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்டுள்ளது. அரசியலமைப்பு பேரவை அமைப்பது சம்பந்தமான யோசனை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் பாராளுமன்றில் முன்மொழியப்பட்டிருந்ததுடன் அதன் மீதான விவதம் இடம்பெற்று வந்த நிலையில் குறித்த யோசனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
இலங்கைத் தமிழ் அரசியலில் பெரும்பங்காற்றிய தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் அப்பாபிள்ளை அமிர்தலிங்கத்தின் மனைவி மங்கையர்க்கரசி அமிர்தலிங்கம் லண்டனில் காலமானார். அவருக்கு வயது 82, அமிர்தலிங்கம் கொழும்பில் படுகொலை செய்யப்பட்டதிலிருந்து லண்டனில் வசித்து வந்த அவரது மனைவி, மங்கையர்க்கரசி நேற்று முன்தினம் கணையச் சுரப்பி வீக்கம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்தநிலையில், புதன்கிழமை மாலை அவர்...
அஸ்கிரி பீட மகாநாயக்க தேரர் வணக்கத்துக்குரிய கலகம ஶ்ரீ அத்ததஸ்ஸி தேரர், நேற்று காலமானார். கண்டி போதனா வைத்தியசாலையில் நேற்றுமாலை அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். கீழே விழுந்து சுகயீனமுற்று சுயநினைவு அற்றநிலையில் நேற்று மாலை அவர் கண்டி போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக வைத்தியசாலை பணிப்பாளர் சமன் ரத்நாயக்க தெரிவித்திருந்தார்.
உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடும் 14 அரசியல் கைதிகளையும் தொடர்ந்து எதிர்வரும் 11ஆம் திகதி வரை விளக்கமறியல் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விடுதலை செய்யப்படுவீர்கள் என வடமாகாண ஆளுநா் ரெஜினோல்ட் கூரே, அமைச்சா் டி.எம் சுவாமிநாதன் ஆகியோர் சிறைச்சாலைக்கு நேரில் சென்று உறுதியளித்த நிலையிலும் நீதிமன்றம் இன்று புதன்கிழமை இவ்வாறு உத்தரவிட்டுள்ளது. நீண்டகாலமாக தடுத்து...
போதைப் பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்ட இலங்கைப் பெண் உள்ளிட்ட நால்வருக்கு குவைத் நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக, வௌிநாட்டு ஊடகச் செய்திகள் குறிப்பிடுகின்றன. இலங்கைப் பெண் ஒருவர் மற்றும் மூன்று இந்தியர்களுக்கு, எதிராக நேற்று இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. 2015ம் ஆண்டு ஏப்ரல் மாதம் குவைட் சர்வதேச விமான நிலையத்தில் வைத்து இவர்கள்...
சட்டவிரோதமாக கடல் வழியாக அவுஸ்திரேலியாவிற்கு சென்று நாடு கடத்தப்பட்ட நபரொருவர் நேற்று கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். குற்ற புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ள 31 வயதான குறித்த நபர், வல்வெட்டித்துறை பிரதேசத்தை சேர்ந்தவர் ஆவார். சந்தேக நபர் இன்று நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
தமிழ் அரசியல் கைதிகளின் உண்ணாவிரதத்தை கைவிடுமாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவருமான ஆர்.சம்பந்தன் விடுத்த கோரிக்கையை கைதிகள் ஏற்றுக் கொள்ளவில்லை என, பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார். கைதிகளின் விடுதலை தொடர்பில் கூட்டமைப்பு முன்னெடுத்த கலந்துரையாடலில் மேற்கொண்ட தீர்மானங்களை அறிவிக்க மகஸீன் சிறைச்சாலைக்கு சென்றிருந்த போதே, அவர்கள் இவ்வாறு கூறியதாக...
Loading posts...
All posts loaded
No more posts
