முன்பள்ளி கல்வி ஆசிரியர்களுக்கான நான்காவது டிப்ளோமா பட்டமளிப்பு விழா இன்று யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்றது.
ஆறுதல்’ நிறுவனத்தின் ஏற்பாட்டில், நிறுவன இணைப்பாளர் சுந்தரம் திவகலால் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக வடமாகாண முதலமைச்சர் சி.வி விக்கினேஸ்வரன், கல்வி அமைச்சர் குருகுலராஜா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
இதன்போது, 515 முன்பள்ளி ஆசிரியர்களுக்கு பட்டமளிப்பு சான்றிதழ் வழங்கப்பட்டதுடன் விசேட சித்திபெற்ற முன்பள்ளி ஆசிரியர்களுக்கு பதக்கங்களும் அணிவிக்கப்பட்டது.