Ad Widget

தாதியர்களின் போராட்டம் கைவிடப்பட்டுள்ளது

யாழ் போதனா வைத்தியசாலை தாதியர்கள் மேற்கொண்ட போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.

கடந்த இரு நாட்களுக்கு முன்னர் பார்வையாளர் நேரம் முடிந்ததன் பின்னர் நபர் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த தனது உறவினரை பார்க்க சென்ற போது கடமையிலிருந்த ஆண் தாதியர், உங்களது நேரம் முடிந்து விட்டது நீங்கள் சென்றுவிட்டு மாலை வந்து பார்க்குமாறு கூறியுள்ளார்.

இந்நிலையில் தாதியது பேச்சை குறித்த நபர் கவனத்தில் எடுக்காமையை தொடர்ந்து இருவருக்குமிடையில் வாய்தர்க்கம் ஏற்பட்டதுடன் நோயாளரை பார்வையிட வந்த நபரால் யாழ் பொலிஸ் நிலையத்தில் தாதியருக்கு எதிராக முறைப்பாடு செய்யப்பட்டது.

இதனையடுத்து குறித்த தாதியரை பொலிஸார் விசாரனைக்கு என அழைத்து சென்று கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியமைக்கு எதிராக தாதியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் சம்பவத்துடன் தொடர்புடைய நபர், சட்ட வைத்திய அதிகாரி, யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர், மற்றும் ஊழியர்களிடம் நேற்று சனிக்கிழமை பிற்பகல் பகிரங்க மன்னிப்பு கோரியதை தொடர்ந்து யாழ் போதனா வைத்தியசாலை தாதியர்கள் மேற்கொண்ட போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.

அத்துடன் யாழ் போதனா வைத்தியசாலை தாதியர்கள் மேற்கொண்ட போராட்டத்தினால் ஏற்பட்ட அசௌகரியங்களுக்கு தாம் மன்னிப்புக் கோருவதாகவும் குறித்த நபர் தெரிவித்துள்ளார்.

Related Posts