கொழும்புத்துறை காணிக்குள் மிதிவெடிகள்!

கொழும்புத்துறை- வசந்தபுரம் பகுதியில் தனியார் காணியொன்றில் இருந்து இரண்டு மீதிவெடிகள் மீட்கப்பட்டுள்ளன.

குறித்த பகுதியில் சில நாட்களுக்கு முன்னர் கைக்குண்டு ஒன்றும் மீட்கப்பட்டிருந்தது. கைக்குண்டு மீட்கப்பட்டு இரண்டு நாட்கள் கழித்து காணியை துப்பரவு செய்யும் போது மீதிவெடியொன்று வெடித்ததுடன் அதில் ஒருவர் காயமடைந்திருந்தார்.

இந்த நிலையிலேயே குறித்த பகுதியில் விசேட அதிரடி படையினர் மற்றும் குண்டு செயலிழக்க செய்யும் பிரிவினர் இணைந்து வெடி பொருட்களை மீட்க தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

தேடுதல் நடவடிக்கை பக்கோ இயந்திரங்கள் மூலம் மேற்கொள்ளப்பட்டிருந்தது. இதன்போது, பனை மரமொன்றின் வேர் பகுதியில் இருந்து இந்த குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன.

இப் பகுதியில் கடந்த காலங்களில் யுத்தம் நடைபெற்றிருந்ததால், மேலும் வெடி பொருட்கள் இருக்கலாம் என அப் பகுதி மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

Related Posts