Ad Widget

வீடமைப்பு உதவி – விண்ணப்பங்களைக் கோருகிறது புனர்வாழ்வு அமைச்சு!

யுத்தத்தால் உடல்ரீதியாக பாதிக்கப்பட்டவர்களுக்கும், வீடுகளை இழந்தவர்களுக்கும் 65,000 வீடுகள் அமைத்துக் கொடுக்கும் திட்டத்தின் கீழ் வீடுகளைப் பெற்றுக் கொள்ள புனர்வாழ்வு மீள் குடியேற்ற அமைச்சு விண்ணப்பங்களை கோரியுள்ளது.

காணி உறுதிப்பத்திரம், அரசாங்க காணி அனுமதிப்பத்திரம் இல்லாமல் பத்து வருடங்களுக்கு மேல் ஒரு காணியில் வசிப்பவர்களும் இந்த வீட்டுத்திட்டத்தின் கீழ் வீடுகளைப் பெற்றுக்கொள்ள விண்ணப்பிக்க முடியும் என புனர்வாழ்வு மீள்குடியேற்ற, சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் இந்து சமய விவகார அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.

விண்ணப்பங்களை இம்மாதம் 30ஆம் திகதிக்கு முன்னர் அனுப்பி வைக்க வேண்டுமென்றும் அவர் தெரிவித்தார். மேலும் விண்ணப்பப்படிவங்கள் சம்பந்தப்பட்ட மாவட்ட அரசாங்க அதிபர்கள் மூலம் பிரதேச செயலகங்களுக்கு ஏற்கனவே அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related Posts