கே.எப்.சி.யில் பொரித்த கோழிக்கு பதில் பொரித்த எலி கொடுத்ததாக பரபரப்பு

கே.எப்.சி.யில் பொரித்த கோழிக்கு பதில் பொரித்த எலி கொடுத்ததாக முகப் புத்தகத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட படமொன்றால் மிகுந்த பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் வோட்ஸ் என்ற இடத்தைச் சேர்ந்தவர் டிவோரைஸ் டிக்சன். இவர் அங்குள்ள கே. எப். சி . உணவகத்துக்குச் சென்று பொரித்த கோழி ஒன்றை கேட்டுள்ளார். எனினும் தனக்கு கோழிக்குப் பதில்...

அமானுஷ்ய உருவங்களால் பீதியில் ஒரு கிராமம்

தம்புத்தேகம ராஜபக்ஸகம கிராமத்தில் அமானுஷ்ய உருவங்கள் தமக்கு தொடர்ச்சியாக தென்படுவதாக கிராமவாசிகள் தெரிவித்துள்ளனர். பெண், ஆண் மற்றும் சிறு பிள்ளையொன்றின் உருவங்களே தமக்கு தென்படுவதாகவும் பின்னர் உடனே அவை மறைந்து செல்வதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இதன்காரணமாக ஏற்பட்ட பீதியில் பலர் கிராமத்தை விட்டு வெளியேறியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. பகல் மற்றும் இரவு நேரங்களில் இவற்றைக் கண்டுள்ளதாக கூறும்...
Ad Widget

வன்புணர்வுக்கு உட்படுத்த முயன்றவரின் நாக்கை கடித்து துப்பிய மாணவி

பாடசாலை முடிந்து தனியாக வீடு திரும்பிக்கொண்டிருந்த 18 வயது மாணவியொருவரை வன்புணர்வுக்கு உட்படுத்த முயன்ற பஸ் சாரதியொருவருக்கு, வாழ்க்கையில் மறக்க முடியாத தண்டனையொன்றை குறித்த மாணவி வழங்கிய சம்பவமொன்று அக்குரஸ்ஸ பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. இம்முறை க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு தயாராகிக் கொண்டிருக்கும் மேற்படி மாணவி, பாடசாலை முடிந்து தனிமையில் வந்துகொண்டிருந்த போது, மேற்படி சாரதியும் மோட்டார்...

கொடுத்த மொய்ப்பணத்தை திரும்ப தருமாறு கோரி முரண்பாட்டில் ஈடுபட்ட பெண்

அயல் வீட்டு புதுமனைப்புகு விழாவுக்கு வழங்கிய 1,000 ரூபாய் மொய்ப்பணத்தை திரும்பத் தருமாறு கோரி அயல் வீட்டுப் பெண்ணை தாக்கிய, மற்றொரு பெண் தொடர்பில் செவ்வாய்க்கிழமை (09) பொலிஸ் நிலைத்தில முறைப்பாடொன்று பதிவு செய்யப்பட்டுள்ளதாக அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, அச்சுவேலி பத்தமேனி பாரதி வீதியைச் சேர்ந்த பெண்ணொருவர் அயல் வீட்டில்...

மதியபோசனத்தையடுத்து காலியான வடமாகாண சபை ஆசனங்கள்

வடமாகாண சபையில் முன்பள்ளி நியதிச் சட்டம் வடமாகாண சபையில் நேற்று செவ்வாய்க்கிழமை (09) விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, மதிய போசனத்தின் பின்னர் சபை உறுப்பினர்களில் சிலர் சபைக்குச் சமூகமளிக்கவில்லை. அத்துடன், அமைச்சுக்களின் செயலாளர்கள் மதிய போசன இடைவேளை வரையில் சபையில் இருந்தததுடன் அதன்பின்னர் அவர்களின் இருக்கைகள் காலியாகவிருந்தன. வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு கைதடியில் அமைந்துள்ள...

ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டவரிடம் கப்பம் கோரியவர்களுக்கு விளக்கமறியல்

குருநகர் பகுதியைச் சேர்ந்த பெண் சாயலை ஒத்த ஆணுடன் ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்ட இளைஞர் ஒருவரையும் அவர்கள் இருவரும் ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டதை வீடியோப் பதிவு செய்து, அதனை அவர்களிடம் காண்பித்து கப்பம் கோரி மிரட்டிய பிறிதொரு இளைஞரையும் யாழ். நீதவான் 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைத்துள்ளதாக யாழ்ப்பாணப் பொலிஸார் கூறினர். குருநகர் பகுதியைச் சேர்ந்த...

பெற்ற குழந்தையை ஏற்க மறுத்த தாய்

தனக்கு பிறந்த குழந்தையை ஏற்க மறுத்த 30 வயதுடைய பெண்ணொருவரை, மானிப்பாயிலுள்ள காப்பகம் ஒன்றில் தடுத்து வைக்குமாறு யாழ். சிறுவர் நீதவான் நீதிமன்ற நீதவான் பொ.சிவகுமார் வியாழக்கிழமை (03) உத்தரவிட்டார். யாழ். போதனா வைத்தியசாலையில் நிறைமாதக் கர்ப்பிணியாக அனுமதிக்கப்பட்ட பெண்ணொருவர், கடந்த முதலாம் திகதி ஆண் குழந்தையொன்றை பிரசவித்தார். திருமணமாகாத நிலையில் தான் அந்த குழந்தையை...

சரணடையும் புலிகளிற்கு மகிந்த என்னிடம் உயிருத்தரவாதம் தந்தார்- அம்பலப்படுத்துகிறார் சந்திரகாந்தன் சந்திரநேரு!

யுத்தத்தின் இறுதியில் சரணடைந்த விடுதலைப்புலிகளின் போராளிகளை, அரசாங்கம் சுட்டுக் கொன்ற விடயம் பற்றிய பல அதிர்ச்சி தகவல்களை அம்பலப்படுத்தியுள்ளார் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரகாந்தன் சந்திரநேரு. விடுதலைப்புலிகளின் அரசியல்த்துறை பொறுப்பாளர் நடேசன், புலித்தேவன் உள்ளிட்டவர்களின் சரணடைவிற்கு, இலங்கை அரசுடன் இடைத்தரகராக பணியாற்றிய சந்திரநேரு, அது பற்றிய பல அதிர்ச்சி தகவல்களை அம்பலப்படுத்தியுள்ளார். முன்னாள் ஜனாதிபதி மகிந்த...

தமிழ் படிக்க ஆசைப்படுகிறார் பிரதமர் ரணில்!

தமிழ் மொழியை படிக்க பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆசைப்படுகின்றார் என்று அலரி மாளிகைச் செய்திகள் தெரிவிக்கின்றன. கொழும்பில் சில வாரங்களுக்கு முன்னர் கம்பன் விழா இடம்பெற்றது. இதில் சிறப்பு நிகழ்வுகளில் ஒன்றாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நகர அபிவிருத்தி மற்றும் நீர்ப் பாசனம், நீர் விநியோக அமைச்சருமான  ரவூப் ஹக்கீம் தலைமையில் கவியரங்கம் இடம்பெற்றது....

இப்படியும் இங்கே ! நேற்று நடந்த கூத்து

இவர் வித்தியாவிற்கான போராட்டம் என்ற பெயரில் சுழிபுரம் அஞ்சல் அலுவலகத்துக்கு முன் பிரதான வீதியில் மதுபோதையில் நின்று அட்டகாசம் செய்த நபர். கஸிப்பு குடித்துவிட்டு இரவு 11 மணி வரை போராட்டம் செய்யப் போகிறாராம். வீதியால் எவரும் போக விட மாட்டாராம். வீதிக்கு குறுக்கே கயிறு கட்டி போக்குவரத்துக்களை தடை செய்திருந்தார். விக்டோரியா கல்லூரி ஆசிரியர்களைக்...

இளையவர் போராட்டத்தினை நக்கல் செய்யும் கனடா நக்கீரன்!

சில தினங்களுக்கு முன்பாக    புங்குடுதீவில்  பாடசாலை மாணவி ஒருவர் ஊரில் உள்ள காமுகர்களால் கூட்டு வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டு கொலைசெய்யப்படட சம்பவத்திற்கு கண்டணம் செலுத்தும் முகமாக சமூகவலைத்தளம் ஊடாக ஒழுங்குபடுத்தப்பட்ட  வன்புணர்வுகளுக்கெதிராக இளையவர்கள் போராட்டம்  17.5.2015 காலை 11 மணியளவில் நல்லுார் கந்தசுவாமி கோவில் முன்பாக நடைபெற்றிருந்தது. இது தொடர்பாக பங்குகொண்டிருந்த ஒருவர் தனது படம்  உள்ள பகுதியினை முகப்புத்தகத்தில் பகிர்ந்திருந்தார்.அந்தப்பதிவுக்கு கனடா...

நித்திரை கொண்டதற்காக வடகொரியாவின் பாதுகாப்பு அமைச்சருக்கு, நாட்டின் தலைவரால் மரண தண்டனை

வடகொரிய தலைவருக்கு விசுவாசமாக நடந்து கொள்ளவில்லை என்பதற்காக அந்த நாட்டின் பாதுகாப்பு அமைச்சருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வடகொரிய பாதுகாப்பு அமைச்சர் யொன்- சொல், கடந்த ஏப்ரல் 30ஆம் திகதியன்று நாட்டின் தலைவர் கிம் ஜொங்-உன்னால் விமான எதிர்ப்பு துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டார். நாட்டில் மரண தண்டனைக்கு விமான எதிர்ப்பு துப்பாக்கி பயன்படுத்தப்பட்டமை இதுவே முதல்தடவையாகும்....

வீமன்காமத்தில் காணாமற்போன பிள்ளையார் கோவில்!

இராணுவ உயர் பாதுகாப்பு வலயமாக இருந்த வீமன்காமம் பகுதியில் மக்கள் மீள்குடியேற்றத்திற்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். இந் நிலையில் அங்கு தமது காணிகளை துப்புரவு செய்யச் சென்ற மக்கள் தாங்கள் காலம் காலமாக வணங்கிவந்த பிள்ளையார் ஆலயத்தை காணாது பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளார்கள். குறிப்பாக குறிப்பிட்ட பிள்ளையார் ஆலயம் இருந்த பகுதி இராணுவ உயர் பாதுகாப்பு வலயத்தில் தற்போதும்...

யாழ்.பல்கலையில் பகிடிவதை : மாணவன் தலை உடைப்பு

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் பரீட்சை எழுதுவதற்காக சென்றிருந்த மாணவனை 3ஆம் வருட முகாமைத்துவபீட பல்கலைக்கழக மாணவர்கள் பகிடிவதை முறையில் தலைக்கவசத்தால் பின்தலையில் அடித்து உடைத்த சம்பவம் நேற்று மாலை 3மணியளவில் நடைபெற்றுள்ளது. குறித்த சம்பவத்தால் ஏனைய பல்கலை மாணவர்களும் பயத்தின் நிமித்தம் பல்கலைக்கழகத்திற்குச் செல்வதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

சுனாமியிலேயே பிரபாகரன் மரணித்தார்

தன்னை மஹா பராக்கிரமபாகு மன்னன் என்று கூறிகொள்ளும் நபரொருவர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்கு அனுமதி பெற்றுதருமாறு கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளார். கொழும்பு, கோட்டை ரயில் நிலையத்துக்கு முன்பாகவே அவர், ஆர்ப்பாட்டத்தில் இன்று திங்கட்கிழமை ஈடுபட்டுள்ளார். தான் மீண்டும் பிறந்து, நாட்டை பயங்கரவாதிகளிடமிருந்து மீட்டெடுப்பதற்காக செயற்பட்டதாக கூறுகின்றார். பிங்கிரிய தளுபனயை வசிப்பிடமாக கொண்ட...

நாயை கட்டி வளர்க்காத உரிமையாளருக்கு எதிராக முறைப்பாடு

யாழ். தம்பானை நாச்சிமார் கோவில் வீதியிலுள்ள வீட்டுக்காரருக்கு எதிராக 75 வயது மூதாட்டியொருவர் ஞாயிற்றுக்கிழமை (05) விசித்திர முறைப்பாடு ஒன்றை செய்துள்ளதாக அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர். வீதியில் சென்ற தன்னை மேற்படி பகுதியிலுள்ள வீட்டில் வளர்க்கப்படும் நாய் கடித்து விட்டதாகவும், அது தொடர்பில் நாய் வளர்க்கும் உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்குமாறு கூறி முறைப்பாட்டை பதிவு...

விமானிக்கு பயணி எழுதிய உருக்கமான கடிதம்

இங்கிலாந்தில் இருந்து ஸ்பெயினுக்கு விமானத்தில் சென்ற பெண் ஒருவர் தன்னை பத்திரமாக அழைத்துச் சென்றதற்கு நன்றி தெரிவித்து விமானிக்கு எழுதிய கடிதம் ட்விட்டரில் தீயாக பரவியுள்ளது. பெத்தனி என்ற பெண் இங்கிலாந்தில் இருந்து ஸ்பெயினுக்கு விமானம் மூலம் சென்றுள்ளார். விமானம் ஸ்பெயினில் பத்திரமாக தரையிறங்கியதும் பெத்தனி ஒரு பேப்பரை எடுத்து விமானிக்கு நன்றி தெரிவித்து கடிதம்...

மகனைக் கற்க வைப்பதற்காக பரிதாபமாக உயிர் விட்ட தாய்

மகன் தனியார் கல்வி நிலையத்துக்குச் செல்லாததால் அவனை மிரட்ட முற்பட்ட தாய் ஒருவர் பரிதாபகரமாக தீயில் எரிந்து உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் சுன்னாகம், சூராவத்தையில் கடந்த செவ்வாய்க்கிழமை நடந்துள்ளது. அதே இடத்தைச் சேர்ந்த ந.சிவசோதி என்பவரே உயிரிழந்தவராவார். சிவசோதி மகனை தனியார் கல்வி நிலையத்துக்குச் செல்லுமாறு கூறியுள்ளார். மகனோ நகருவதாகத் தெரியவில்லை. சிவசோதி தனது உடலில்...

அரசியல் – முரண்பாடுகளுக்காக பாடசாலை தண்ணீர்த்தாங்கியில் விசக்கலப்பு

யாழ்.ஏழாலை ஸ்ரீ முருகன் வித்தியாலய தண்ணீர் தாங்கியில் விஷமிகள் விஷத்தினை கலந்ததால் அதனை பருகிய 27 மாணவர்கள் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விஷம் கலந்த நீரினை பருகிய மாணவர்கள் உடனடியாக தெல்லிப்பளை ஆதார வைத்திய சாலைக்கு கொண்டு செல்லபட்ட மாணவர்களில் 26 பேர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஒருவர் தொடர்ந்து தெல்லிப்பளை...

இலங்கை அணி தோல்வி : வாள்வெட்டில் இருவர் படுகாயம்!

இலங்கை அணியின் தோல்வியை அடுத்து கிளிநொச்சியின் முழங்காவில் பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் இருவர் படுகாயமடைந்தனர். நேற்றுப் புதன்கிழமை இரவு 9.30 மணியளவில் இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் படுகாயமடைந்த இருவரும் கிளிநொச்சி வைத்தியசாலையில் சேர்க்க்பட்டனர். இந்தச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது:- உலகக்கிண்ண காலிறுதிப் போட்டியில் நேற்று நடந்த இலங்கை, தென்னாபிரிக்கா ஆட்டத்தில் இலங்கை அணி...
Loading posts...

All posts loaded

No more posts