Ad Widget

நித்திரை கொண்டதற்காக வடகொரியாவின் பாதுகாப்பு அமைச்சருக்கு, நாட்டின் தலைவரால் மரண தண்டனை

வடகொரிய தலைவருக்கு விசுவாசமாக நடந்து கொள்ளவில்லை என்பதற்காக அந்த நாட்டின் பாதுகாப்பு அமைச்சருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

koreaவடகொரிய பாதுகாப்பு அமைச்சர் யொன்- சொல், கடந்த ஏப்ரல் 30ஆம் திகதியன்று நாட்டின் தலைவர் கிம் ஜொங்-உன்னால் விமான எதிர்ப்பு துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

நாட்டில் மரண தண்டனைக்கு விமான எதிர்ப்பு துப்பாக்கி பயன்படுத்தப்பட்டமை இதுவே முதல்தடவையாகும்.

நூற்றுக்கணக்கானோர் முன்னிலையிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

வடகொரிய தலைவர் பங்கேற்ற நிகழ்வு ஒன்றின்போது யொன் நித்திரை கொண்டமை மற்றும் அவரின் பணிப்புரைகளை ஏற்று நடக்காமை என்று சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களே இந்த மரண தண்டனைக்கு காரணமாக அமைந்திருந்தது.

இதன்போது வடகொரியாவின் சிரேஸ்ட இராணுவ அதிகாரி ஒருவரும் கொல்லப்பட்டார்.

ஏற்கனவே 15 இராணுவ அதிகாரிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக வெளியான செய்திகளின் பின்னரே தற்போதைய செய்திகளும் வெளியாகியுள்ளன.

தமது ஆட்சிக்கு எதிராக செயற்பட்டமை காரணமாக வடகொரிய தலைவர் தமது மாமனார் உட்பட்ட சுமார் 70 பேருக்கு 2011 ஆம் ஆண்டில் இருந்து மரண தண்டனையை நிறைவேற்றியுள்ளார் என்று தென்கொரிய உளவுச்சேவை தெரிவித்துள்ளது.

Related Posts