- Sunday
- November 23rd, 2025
இன்று வேட்பு மனு பரிசீலனை யாழ் மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற வேளை ஈபிடிபி கட்சியின் தவராஜாவினால் ஆட்சேபனை ஒன்று தெரிவிக்கப்பட்டது. இலங்கை தமிழரசுக்கட்சி என்ற பெயரை திருத்தி எழுதி அதன் மீது விண்ணப்பித்த கட்சியின் செயலாளருக்கு பதில் கட்சியின் தலைவர் கையாப்பமிட்டிருந்தார் என்பதே அது. இருப்பினும் பின்னர் வேட்பு மனு ஏற்கப்பட்டது. குழுத்தலைவரால் மாற்றம் செய்வதில் தவறில்லை...
திருமணம் என்பது பெரும் பணச்செலவில் ஆடம்பரமாக இடம்பெறுவது மாத்திரமே என்பதற்கு அப்பால் நலிவுற்ற குடும்பங்களுக்கு வாழ்வாதாரத்தை மேம்படுத்த முடியும் என்பதை வவுனியாவில் திருமண பந்தத்தில் இணைந்து கொண்ட தம்பதியினர் செய்து காட்டியுள்ளனர். வவுனியா நகரசபை கலாசார மண்டபத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற மதிசூதனன் இரமீலா ஆகியோரின் திருமணத்தின்போதே இந் நிகழ்வு இடம்பெற்றது. திருமணங்களை பெரும் பண...
சுன்னாகம், புஸ்பமணியம் வீதியில் கஞ்சா நுகர்ந்த பூசகர் ஒருவரை, நேற்று வியாழக்கிழமை (09) காலை கைது செய்ததாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்டவரிடமிருந்து 5 கிராம் கஞ்சா மீட்கப்பட்டுள்ளது. பிரதேசத்தில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்ட இரகசியப் பொலிஸார், பூசகர் மீது சந்தேகம் கொண்டு விசாரணை செய்த போதே, பூசகர் கஞ்சா நுகர்ந்தமை தெரியவந்தது. பூசகரை...
தற்கொலை முயற்சி செய்த நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் கடந்த 4 தினங்களாக சிகிச்சை பெற்றுவந்த யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவி இன்று அதிகாலை உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் 3 வருடத்தில் கல்வி கற்ற மாணவி இவ்வாறு உயிரிழந்தவராவார். இம்மாணவி அதே பல்கலைக்கழகத்தில் மருத்துவ பீட ஆசிரியர்...
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் போராளி என்றும் அவ்வியக்கத்தை மீள உருவாக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டிலும் யாழ்ப்பாணம், அளவெட்டி தெற்கு பகுதியில் வைத்து கைது செய்யப்பட்ட நபர், முன்னாள் போராளி இல்லை என தெல்லிப்பளை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஐ.என்.எஸ்.கஸ்தூரியாரச்சி, தெரிவித்தார். மேற்படி நபர், மல்லாகம் மாவமட்ட நீதிமன்றத்தினால் செவ்வாய்க்கிழமை (07) பிணையில்...
பெங்களூரு நகர ஷாப்பிங் மாலில் நடைபெற்றதாக பேஸ்புக்கில் பகிரப்பட்ட ஒரு வீடியோவால், தொழிலதிபர் கைது செய்யப்பட்டுள்ளார். மைசூர் நகரின் கே.ஆர்.மொகல்லா பகுதியை சேர்ந்தவர் 32 வயதான தொழிலதிபர் தீபக் குல்கர்ணி. இவர் கடந்த மாதம் 29ம் தேதி தனது பேஸ்புக்கில் கொலை தொடர்பான ஒரு வீடியோவை பதிவு செய்து, இந்த படு பயங்கர கொலை பெங்களூரின்...
கடந்த சனிக்கிழமை(04) திருட்டு போன சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:- பருத்துறைய பகுதியில் வீட்டுக்குள் சனிக்கிழமை இரவு உள் நுழைந்த திருடர்கள் அலுமாரியில் இருந்து 35 பவுண் நகையினை திருடி சென்றிருந்தனர். சம்பவம் தொடர்பில் வீட்டின் உரிமையாளர் பருத்தித்துறை பொலிஸில் செய்த முறைப்பாட்டினை அடுத்து மோப்ப நாயின் உதவியுடன் பொலிஸ் ஆரம்ப கட்ட விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன....
முல்லைத்தீவின் துணுக்காயில் 56 பெண்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததுடன், ஆபாசப்படங்கள் எடுத்த ஒருவர் தொடர்பாகத் தமக்கு முறைப்பாடு கிடைத்துள்ளதாக முல்லைத்தீவுப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்தால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் அண்மையில் தற்கொலை செய்து கொண்டார் என்றும் தமக்குத் தகவல் கிடைத்துள்ளதாக முல்லைத்தீவுப் பொலிஸார் தெரிவித்தனர். பெண்களை துஷ்பிரயோகம் செய்த குறித்த நபர் அரசியல் கட்சி...
நேற்று (5) வடமாகாணசபை உறுப்பினரான அனந்தி எழிழன் அவர்கள் சக்தி தொலைக்காட்சியின் அரசியல் நிகழ்ச்சியான மின்னல் நிகழ்சியில் பங்கேற்பதை தடுக்க மாவையும் இந்தியாவும் முயற்சி செய்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. முன்னதாக அனந்தி எழிழன் அவர்கள் தனக்கு பாராளுமன்ற தேர்தலில் கூட்டமைபின் சார்பில் போட்டியிட வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார். அது குறித்து தமிழரசுக்கட்சி மௌனம் சாதித்திருந்ததன் பின்னணியில்...
உரும்பிராய் பகுதியில் இளம் ஜோடி தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர். உரும்பிராய் கிழக்கு ஊரெழு பகுதியினை சேர்ந்த யுவதியும், மல்லாகம் பகுதியினை சேர்ந்த இளைஞனும் ஐந்து வருடம் காதலித்துள்ளனர். இந்நிலையில், குறித்த யுவதிக்கு தெரியாமல், யுவதியின் வீட்டார் வெளிநாட்டு இளைஞனுக்கு நிச்சயதார்த்தம் செய்துள்ளனர். இதனால் மனவிரக்தி அடைந்த யுவதி, காதலன் பணிபுரியும் இடத்திற்கு...
தமிழீழ விடுதலைப் புலிகளின் இராணுவச் சீருடை அணிந்து புகைப்படம் பிடித்த மற்றும் அதனைத் தம்வசம் வைத்திருந்த இருவரை இரகசிய புலனாய்வுப் பிரிவினர் கைதுசெய்துள்ளனர். கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலையடுத்து நேற்றைய தினம் யாழ். கைதடி மற்றும் புதுக்குடியிருப்பு ஆகிய பகுதிகளில் வைத்து இவர்கள் இருவரையும் கைதுசெய்துள்ளதாக தெரியவந்துள்ளது. சோதனையின்போது, இராணுவச் சீருடை ஒன்று, ஆயுத உறை ஒன்று,...
மிருசுவிலில் 2000ஆம் ஆண்டு இடம்பெற்ற எண்மர் கொலைகளுடன் தொடர்புடைய இராணுவத்தினர் ஒருவருக்கு மரணதண்டனை வழங்கி கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதன் அடிப்படையில் இலங்கையின் உள்நாட்டுப் பொறிமுறை எங்ஙனம் சிறப்பாக இயங்குகின்றதென்பதற்கு இது சான்று பகர்கின்றதென இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ஜெயநாத் ஜெயவீர நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவித்திருந்தார். இராணுவத்தினருக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு இதேவிதத்தில்...
தந்தையைக் கொலை செய்வேன் எனக்கூறி 20 வயதுடைய யுவதியை பக்கத்து வீட்டைச் சேர்ந்த ஒருவர் வன்புணர்வுக்கு உட்படுத்திய சம்பவமொன்று யாழ். பருத்தித்துறை, குடத்தனை மேற்குப் பகுதியில் இடம்பெற்றுள்ளது. இவ்விடயம் தொடர்பில் நேற்று வியாழக்கிழமை (25) முறைப்பாடொன்று கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் சந்தேகநபர் தலைமறைவாகி உள்ளதாகவும் பருத்தித்துறை பொலிஸார் தெரிவித்தனர். யுவதியின் அத்தானுடைய நண்பரான சந்தேநபர், மேற்படி யுவதியை அச்சுறுத்தி...
பற்றைகளால் சூழப்பட்ட பூட்டப்பட்ட வீடு ஒன்றின் முற்றத்தில் தனிமையில் படுத்திருந்த இரண்டு சிறுமிகள் வவுனியா ஊடகவியலாளர்களால் மீட்கப்பட்டு வவுனியா வடக்கு சிறுவர் மேம்பாட்டு உத்தியோகத்தரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். இந்த அதிர்ச்சி சம்பவம்நேற்று நடந்துள்ளது. வவுனியா, கனகராயன்குளம், பெரியகுளம் பகுதிக்கு வவுனியா ஊடகவியலாளர்கள் மூவர் நேற்று மதியம் சென்றிருந்தனர்.அப்போது, பூட்டப்பட்ட வீடு ஒன்றின் வெளி முற்றப் பகுதியில் தனிமையில்...
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் புனர்வாழ்வுபெற்ற முன்னாள் போராளிகளுக்கு திருமணம் செய்து வைத்து பரிசளிக்கப்பட்ட தங்க நகைகள் கறுத்துவிட்டதாக, வட மாகாண அமைச்சரொருவருக்கு முன்னாள் போராளியொருவர் கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார். வடமாகாண சபையும் முல்லைத்தீவு மாவட்ட செயலகமும் இணைந்து மாந்தை கிழக்கு மற்றும் துணுக்காய் பிரதேச செயலர் பிரிவுகளை உள்ளடக்கிய வகையில் நடத்தும்...
கே.எப்.சி.யில் பொரித்த கோழிக்கு பதில் பொரித்த எலி கொடுத்ததாக முகப் புத்தகத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட படமொன்றால் மிகுந்த பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் வோட்ஸ் என்ற இடத்தைச் சேர்ந்தவர் டிவோரைஸ் டிக்சன். இவர் அங்குள்ள கே. எப். சி . உணவகத்துக்குச் சென்று பொரித்த கோழி ஒன்றை கேட்டுள்ளார். எனினும் தனக்கு கோழிக்குப் பதில்...
தம்புத்தேகம ராஜபக்ஸகம கிராமத்தில் அமானுஷ்ய உருவங்கள் தமக்கு தொடர்ச்சியாக தென்படுவதாக கிராமவாசிகள் தெரிவித்துள்ளனர். பெண், ஆண் மற்றும் சிறு பிள்ளையொன்றின் உருவங்களே தமக்கு தென்படுவதாகவும் பின்னர் உடனே அவை மறைந்து செல்வதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இதன்காரணமாக ஏற்பட்ட பீதியில் பலர் கிராமத்தை விட்டு வெளியேறியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. பகல் மற்றும் இரவு நேரங்களில் இவற்றைக் கண்டுள்ளதாக கூறும்...
பாடசாலை முடிந்து தனியாக வீடு திரும்பிக்கொண்டிருந்த 18 வயது மாணவியொருவரை வன்புணர்வுக்கு உட்படுத்த முயன்ற பஸ் சாரதியொருவருக்கு, வாழ்க்கையில் மறக்க முடியாத தண்டனையொன்றை குறித்த மாணவி வழங்கிய சம்பவமொன்று அக்குரஸ்ஸ பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. இம்முறை க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு தயாராகிக் கொண்டிருக்கும் மேற்படி மாணவி, பாடசாலை முடிந்து தனிமையில் வந்துகொண்டிருந்த போது, மேற்படி சாரதியும் மோட்டார்...
அயல் வீட்டு புதுமனைப்புகு விழாவுக்கு வழங்கிய 1,000 ரூபாய் மொய்ப்பணத்தை திரும்பத் தருமாறு கோரி அயல் வீட்டுப் பெண்ணை தாக்கிய, மற்றொரு பெண் தொடர்பில் செவ்வாய்க்கிழமை (09) பொலிஸ் நிலைத்தில முறைப்பாடொன்று பதிவு செய்யப்பட்டுள்ளதாக அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, அச்சுவேலி பத்தமேனி பாரதி வீதியைச் சேர்ந்த பெண்ணொருவர் அயல் வீட்டில்...
வடமாகாண சபையில் முன்பள்ளி நியதிச் சட்டம் வடமாகாண சபையில் நேற்று செவ்வாய்க்கிழமை (09) விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, மதிய போசனத்தின் பின்னர் சபை உறுப்பினர்களில் சிலர் சபைக்குச் சமூகமளிக்கவில்லை. அத்துடன், அமைச்சுக்களின் செயலாளர்கள் மதிய போசன இடைவேளை வரையில் சபையில் இருந்தததுடன் அதன்பின்னர் அவர்களின் இருக்கைகள் காலியாகவிருந்தன. வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு கைதடியில் அமைந்துள்ள...
Loading posts...
All posts loaded
No more posts
