- Wednesday
- May 7th, 2025

நாளை(8) நடைபெறவிருக்கும் கல்வி பொதுத்தராதர உயர் தரப்பரீட்சை பொறியியல் தொழில்நுட்ப பகுதி 2 க்கான வினாத்தான் கம்பகா மாவட்டத்தில் இன்று மாலை வெளியாகியுள்ளது .அதை வெளியிட்டவர் சம்பந்தமான விபரங்கள் இல்லை ஆனால் 5 லட்சம் ரூபாய்க்கு விட்கப்பட்டதாக உறுதிப்படுத்த முடியாத தகவல்கள் தெரிவிக்கின்றன. கம்பகா மாவட்டத்தில் உள்ள ரத்னவலி பாலிக வித்தியாலய மாணவர்களிடமே இந்த வினாத்தாள்...

தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கான அனுமதிப் பத்திரத்தை பாடசாலை அதிபர் வழங்காததால், மாணவியொருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவமொன்று வவுனியாவில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது. வவுனியா, பண்டாரிக்குளம், விபுலானந்தா வித்தியாலயத்தைச் சேர்ந்த 19 வயது மாணவியொருவரே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளார். தனது தற்கொலைக்கான காரணத்தை கடிதமொன்றில் எழுதிவைத்துவிட்டே அம்மாணவி தற்கொலை செய்துகொண்டுள்ளார் என...

முல்லைத்தீவு மாவட்டத்தில் இருந்து பொறியியல் – மருத்துவ பீடங்களுக்கு தெரிவாகின்ற மாணவர்களின் எண்ணிக்கையைக் குறைக்கும் வகையில், நடைபெற்றுவருகின்ற உயர்தரம் விஞ்ஞானப் பரீட்சையில் சிங்கள மாணவிகள் இருவர் தோற்றிவருகின்றமை மாவட்ட மாணவர்கள் மத்தியில் அதிருப்தியைத் தோற்றுவித்துள்ளது. முல்லைத்தீவு மல்லாவி மத்திய கல்லூரியில் நடைபெறுகின்ற பரீட்சையில் அவர்கள் இருவரும் தனிப்பட்ட பரீட்சார்த்திகளாகத் தோற்றிவருகின்றனர். மாங்குளம் மகாவித்தியாலய அதிபர் மற்றும்...

சாவகச்சேரி தபால் நிலையத்திலிருந்து தனக்கிளப்பு தபால் நிலையத்துக்கு நேற்று புதன்கிழமை (05) கொண்டு செல்லப்பட்ட போது பறித்துச்செல்லப்பட்ட தபால் பொதிகள் சிலவற்றை, தனக்கிளப்பு பகுதியிலிருந்து மீட்டதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்தனர். தபால் ஊழியர்களால் கொண்டுசெல்லப்பட்ட இந்தப் பொதிகளை மோட்டார் சைக்கிளில் சென்ற இரண்டு நபர்கள் பறித்துச் சென்றுள்ளனர். இது தொடர்பில் தபால் ஊழியர்களால் சாவகச்சேரி பொலிஸ்...

வேலைவாய்ப்பைப் பெற்றுக்கொள்வதற்காக நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் கட்சிகளின் தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் யாழ்ப்பாண இளைஞர், யுவதிகள் பணியாற்றி வருகின்றனர். யாழ். மாவட்டத்தில் சுமார் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட பட்டதாரிகளும் ஆயிரக்கணக்கான இளைஞர், யுவதிகளும் வேலைவாய்ப்பின்றி இருக்கின்றனர். இவர்கள் தங்களுக்கான வேலைவாய்ப்பைப் பெற்றுக்கொள்வதற்காக தற்போது கட்சி அலுவலகங்களை நோக்கிச் செல்கின்றனர். வேலைவாய்ப்பு தேவையை நாடி வரும் இவர்களை அந்தக்...

யாழ். மருத்துவ சங்கத்தின் உதவியுடன் மேற்க்கொள்ளப்பட்டு வந்த மருத்துவ முகாம்கள் நிர்வாக குளறுபடிகள் காரணமாக இடைநிறுத்தம் செய்யப்படகின்றன என யாழ்ப்பாணம் மருத்துவ சங்கத் தலைவரும் சமுதாய மருத்துவ நிபுணருமான முரளி வல்லிபுரநாதன் அறிவித்துள்ளார். இந்த விடயம் குறித்து அவர் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்ட விடயங்கள் வருமாறு: யாழ். மருத்துவ சங்கம் வடக்கு...

மகளிர் விவகார அமைச்சினால் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு வழங்கப்படும் நிவாரணப் பெருட்கள் உரிய முறையில் சுன்னாகம் பலநோக்கக் கூட்டுறவுச் சங்கத்தினால் வழங்கப்படுவதில்லையென நிவாரணத்தைப் பெறும் பொது மக்கள் குற்றம் சாட்டுகின்றார்கள். கர்ப்பிணித் தாய்மார்களுக்கு போசாக்கை ஏற்படுத்தும் வகையில் பொருட்களை வழங்க வேண்டும் என்பது மகளிர் விவகார அமைச்சின் கட்டளையாகும். இதன் கீழ் நெத்தலிக் கருவாடு மற்றும் ரின்...

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கான தேர்தல் பிரச்சாரங்களை நடத்தும் கட்சிகள் இந்தியாவின் தேர்தல் பிரசாரங்களைப் பின்பற்றி, இசைக் கச்சேரிகள் நடத்தி தேர்தல் பிரசார நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றன. கடந்த 31ஆம் திகதி பிரதமர் ரணில் விக்கிரமசிங்க யாழ்;ப்பாணம் வருகை தந்த போது, ஐக்கிய தேசியக் கட்சியால் ஒழுங்கு செய்யப்பட்ட தேர்தல் பிரசார நிகழ்வில், இந்தியாவில் பிரசித்திபெற்ற சுப்பர்...

யாழ்ப்பாணம் மாவட்ட நீதிமன்றத்தில் விவாகரத்துக்கு அளிக்கப்பட்ட தீர்ப்பு ஒன்றுக்கு எதிராக சிவில் மேன்முறையீட்டு மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை நடைபெற்றது. அப்போது, அம்மி மிதித்து, அருந்ததி காட்டி, மந்திரம் ஓதி பெரியோர் முன்னிலையில் கட்டப்பட்ட தாலி, விவாகரத்தின் பின்னர் யாருக்கு சொந்தம்? – என்ற கேள்வி எழுந்தது. அதனைத் தொடர்ந்து அங்கு...

இறுதி யுத்தம் நடைபெற்ற போது சம்பந்தன் தலைமையிலான கூட்டமைப்பினர் திட்டமிட்டே இந்தியா சென்றிருந்ததாகவும் அதனை தடுக்கும்படி புலிகளின் சமாதான செயலகப் பணிப்பாளர் புலித்தேவன் என்னிடம் தொலைபேசியில் தெரிவித்தார் என கூட்டமைப்பின் முன்னாள் எம்.பி சிவநாதன் கிசோர் தெரிவித்துள்ளார். வவுனியாவில் அவரது அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது, ஊடகவியலாளர் இறுதி யுத்தம் நடைபெற்ற போது கூட்டமைப்பின்...

கதறி அழுத தாயைப் பொருட்படுத்தாமல் காதல் கணவனுடன் சென்ற 17 வயது சிறுமியைப் பார்த்து நீதிமன்றமே நிசப்தமாகிப் போன சம்பவம் ஒன்று கடந்த புதன்கிழமை இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் இடம்பெற்ற இந்த சம்பவத்தைப் பார்த்த மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் "பெருமைக்குரிய யாழ் மண்ணின் கலாசாரம் சீரழிந்து செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது." என்று...

யாழ் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீட2ஆம் ஆண்டில் கற்கும் மாணவர்கள் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு கேவலமான ராகிங் ஒன்று அரங்கேறியுள்ளது. இந்த சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது, யாழ் பல்கலைக்கழகத்தின் 2ஆம் வருட விஞ்ஞான பீட மாணவர்கள் கேவலமான பகிடிவதை ஒன்றை மேற்கொள்வதற்காக 1ஆம் வருட மாணவர்களை வெட்டாந்தரையில் முழங்காலில் மண்டியிட்டு இருக்குமாறு செய்துள்ளனர். இதன் பின்னர்...

பெண் குரலில் காதல் வார்த்தைகளை பேசி, அலைபேசிக்கான மீள்நிரப்பு பணத்தை (ரீலோட்) சக மாணவர்களிடமிருந்து பெற்றுகொண்டு மாணவனுக்கு தர்மஅடி விழுந்த சம்பவம் கண்டியில் இடம்பெற்றுள்ளது. மாணவனொருவன் தனது பாடசாலையில் கல்வி பயின்றுவரும் சக மாணவர்களுக்கு அழைப்பை ஏற்படுத்தி, பெண் குரலில் காதல் வார்த்தைகளை பேசியுள்ளார். மாணவர்கள் காதல் வலையில் வீழ்ந்ததும் அவர்களிடமிருந்து 1,000 ரூபாய்க்கும் மேலதிகாமான...

டவுண் சிண்ட்ரோமால் பாதிக்கப்பட்ட தனது இரண்டரை வயது மகனை வாஷிங் மெஷினுக்குள் திணித்து, அதைப் புகைப்படமாக எடுத்து பேஸ்புக்கில் வெளியிட்டு சர்ச்சையில் சிக்கியுள்ளார் தாய் ஒருவர். கர்ட்னி ஸ்டீவர்ட் (21) என்ற பெண்மணி தான் இவ்வாறு பிரச்சினையில் சிக்கியவர். இவருக்கு இரண்டரை வயதில் டவுண் சின்ட்ரோம் பாதிக்கப்பட்ட மகன் ஒருவர் உள்ளார். சமீபத்தில் தனது மகனை...

நிர்வாகச் சீர்கேடுகளால் வெகுவாகப் பாதிக்கப்பட்ட மாணவர்கள் தொடர்ச்சியாக அதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்து வந்தனர். அதனைத் தொடர்ந்து யாழ்ப்பாணம் கொக்குவில் தொழிநுட்பக் கல்லூரி மாணவர்களால் உள்ளிருப்புப் போராட்டம் ஒன்று இன்றையதினம் (21.07.2015) மேற்கொள்ளப்பட்டது. இதையறிந்து சம்பவ இடத்துக்கு வந்த பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் சுத்தமில்லாமல் காணப்பட்ட சிற்றுண்டிச்சாலையில் உணவுப் பதார்த்தங்களை சோதனைக்காக எடுத்துச் சென்றனர். சம்பவம்...

நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் ஜனநாயகப் போராளிகள் கட்சி புலிமுகச் சிலந்தியைத் தமது சின்னமாகத் தெரிவு செய்திருப்பதாக, அதன் தலைமை வேட்பாளர் ந.வித்தியாதரன் தெரிவித்துள்ளார். ஜனநாயகப் போராளிகள் கட்சி யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் 10 வேட்பாளர்களை இந்த தேர்தலில் சுயேச்சைக் குழுவொன்றில் நிறுத்தியிருக்கிறது. யாழ். மாவட்டச் செயலகத்தில் சுயேச்சைக் குழுக்களுக்கு பல்வேறு சின்னங்கள் ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், இந்த...

எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அப்பாத்துரை விநாயகமூர்த்தியை அவரது ஆதரவாளர்கள் தொடர்ந்தும் வற்புறுத்தி வந்தபோதும் அவரது உடல் நிலையை காரணம் காட்டி அவரிற்கு இம்முறை தேர்தலில் போட்டியிடுவதற்கு சந்தர்ப்பம் அளிக்கப்படவில்லை அதனால் தனது சார்பாக இன்னும் ஒரு சட்டத்தரணிக்கு வேட்பாளர் நியமனம் வழங்குமாறு தமிழ் தேசிய...

இன்று வேட்பு மனு பரிசீலனை யாழ் மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற வேளை ஈபிடிபி கட்சியின் தவராஜாவினால் ஆட்சேபனை ஒன்று தெரிவிக்கப்பட்டது. இலங்கை தமிழரசுக்கட்சி என்ற பெயரை திருத்தி எழுதி அதன் மீது விண்ணப்பித்த கட்சியின் செயலாளருக்கு பதில் கட்சியின் தலைவர் கையாப்பமிட்டிருந்தார் என்பதே அது. இருப்பினும் பின்னர் வேட்பு மனு ஏற்கப்பட்டது. குழுத்தலைவரால் மாற்றம் செய்வதில் தவறில்லை...

திருமணம் என்பது பெரும் பணச்செலவில் ஆடம்பரமாக இடம்பெறுவது மாத்திரமே என்பதற்கு அப்பால் நலிவுற்ற குடும்பங்களுக்கு வாழ்வாதாரத்தை மேம்படுத்த முடியும் என்பதை வவுனியாவில் திருமண பந்தத்தில் இணைந்து கொண்ட தம்பதியினர் செய்து காட்டியுள்ளனர். வவுனியா நகரசபை கலாசார மண்டபத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற மதிசூதனன் இரமீலா ஆகியோரின் திருமணத்தின்போதே இந் நிகழ்வு இடம்பெற்றது. திருமணங்களை பெரும் பண...

சுன்னாகம், புஸ்பமணியம் வீதியில் கஞ்சா நுகர்ந்த பூசகர் ஒருவரை, நேற்று வியாழக்கிழமை (09) காலை கைது செய்ததாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்டவரிடமிருந்து 5 கிராம் கஞ்சா மீட்கப்பட்டுள்ளது. பிரதேசத்தில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்ட இரகசியப் பொலிஸார், பூசகர் மீது சந்தேகம் கொண்டு விசாரணை செய்த போதே, பூசகர் கஞ்சா நுகர்ந்தமை தெரியவந்தது. பூசகரை...

All posts loaded
No more posts