Ad Widget

தேர்தல் பிரசாரங்களில் ஈடுபட்டால் வேலைவாய்ப்பு?

வேலைவாய்ப்பைப் பெற்றுக்கொள்வதற்காக நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் கட்சிகளின் தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் யாழ்ப்பாண இளைஞர், யுவதிகள் பணியாற்றி வருகின்றனர்.

யாழ். மாவட்டத்தில் சுமார் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட பட்டதாரிகளும் ஆயிரக்கணக்கான இளைஞர், யுவதிகளும் வேலைவாய்ப்பின்றி இருக்கின்றனர்.

இவர்கள் தங்களுக்கான வேலைவாய்ப்பைப் பெற்றுக்கொள்வதற்காக தற்போது கட்சி அலுவலகங்களை நோக்கிச் செல்கின்றனர். வேலைவாய்ப்பு தேவையை நாடி வரும் இவர்களை அந்தக் கட்சிகள் தங்களின் தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்கு ஈடுபடுத்தி வருகின்றன.

குறிப்பாக வேலைவாய்ப்பை பெற்றுத்தருவதாக தேர்தல் பிரசாரம் செய்து வரும் கட்சிகள், இவ்வாறு வேலைவாய்ப்பைப் தேடி வருபவர்களைப் பயன்படுத்துகின்றன.

வீடு வீடாகச் சென்று தேர்தல் பிரசாரம் செய்தல், தேர்தல் பிரசார கூட்டங்களை ஒழுங்கு செய்தல் உள்ளிட்ட விடயங்களுக்கு இவர்களை ஈடுபடுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related Posts