Ad Widget

மகனை வாஷிங் மெஷினில் அடைத்து பேஸ்புக்கில் போட்டோ போட்ட அம்மா

டவுண் சிண்ட்ரோமால் பாதிக்கப்பட்ட தனது இரண்டரை வயது மகனை வாஷிங் மெஷினுக்குள் திணித்து, அதைப் புகைப்படமாக எடுத்து பேஸ்புக்கில் வெளியிட்டு சர்ச்சையில் சிக்கியுள்ளார் தாய் ஒருவர்.

mum-posts-photo-of-down-syndrome-boy-in-washing-machine-on-facebook-600

கர்ட்னி ஸ்டீவர்ட் (21) என்ற பெண்மணி தான் இவ்வாறு பிரச்சினையில் சிக்கியவர்.

இவருக்கு இரண்டரை வயதில் டவுண் சின்ட்ரோம் பாதிக்கப்பட்ட மகன் ஒருவர் உள்ளார்.

சமீபத்தில் தனது மகனை வாஷிங்மெஷினுக்குள் திணித்து, அதனைப் புகைப்படமாக எடுத்து பேஸ்புக்கில் பதிவு செய்தார் கர்ட்னி.

இந்தப் படத்தைப் பார்த்து அதிர்ச்சியடைந்த சிலர், கர்ட்னியை கோபமாகத் திட்டி பதிவிட்டிருந்தனர்.

இது குறித்து சமூக ஆர்வலர்கள் அளித்த புகாரின் பேரில் போலீசார் கர்ட்னியிடம் விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் அவர் விளையாட்டுக்காக மகனை வாஷிங் மெஷினுக்குள் போட்டு புகைப்படம் எடுத்ததாகத் தெரிவித்தார்.

இது தொடர்பாக கர்ட்னி கூறும் போது, “அவன் வாஷிங் மெஷினை மிகவும் விரும்புவான் அந்த படம் ஒரு நகைசுவைக்காக எடுக்கபட்டது. இந்த விவகாரம் குறித்து 2 போலீஸ் அதிகாரிகள் ஒரு மணி நேரத்திற்கும் அதிகமாக விசாரணை நடத்தினர்” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், அது பழைய வாஷிங்மெஷின் என்றும், சிறுவன் அதற்குள் இருந்த போது அதன் பிளக்குகள் பிடுங்கப் பட்டிருந்ததாகவும் கர்ட்னி தெரிவித்துள்ளார்.

இச்செயலுக்காக அவர் மன்னிப்பும் கோரியுள்ளார். ஆனபோதும், இரண்டரை வயது குழந்தையை இவ்வாறு வாஷிங் மெஷினிற்குள் திணித்து தாய் விளையாடிய சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Posts