Ad Widget

தமிழ் தேசிய கூட்டமைப்பின் மீது விநாயகமூர்த்தி கடும் அதிருப்தி

எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அப்பாத்துரை விநாயகமூர்த்தியை அவரது ஆதரவாளர்கள் தொடர்ந்தும் வற்புறுத்தி வந்தபோதும் அவரது உடல் நிலையை காரணம் காட்டி அவரிற்கு இம்முறை தேர்தலில் போட்டியிடுவதற்கு சந்தர்ப்பம் அளிக்கப்படவில்லை

அதனால் தனது சார்பாக இன்னும் ஒரு  சட்டத்தரணிக்கு வேட்பாளர் நியமனம் வழங்குமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமைத்துவத்திடம் கேட்டிருந்தார். எனினும் குறித்த வேட்பாளர் நியமனம் வழங்கப்படவில்லை. இதனால் அவர் தமிழ் தேசிய கூட்டமைப்பின் மீது கடும் அதிருப்தியடைந்துள்ளதாக தெரியவருகிறது.

இந்நிலையில் நிலைமையை சமாளிக்குமுகமாக தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா விநாயகமூர்த்தியை நேரில் சந்தித்து எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு ஆதரவு வழங்குமாறு கேட்டுக்கொண்ட போதிலும் விநாயகமூர்த்தி அதற்கு மறுத்துவிட்டதாகவும் தெரியவருகிறது.

இதனையடுத்து எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் தேசிய முன்னணிக்கு ஆதரவு வழங்குமாறு விநாயகமூர்த்தியை அவரது ஆதரவாளர்கள் வற்புறுத்தி வருவதாகவும் அறியவருகிறது.

இதேவேளை சுமந்திரன் தனக்கு அரச தரப்பால் வழங்கப்பட்ட வாகனத்தினை விநாயகமூர்த்திக்கு வழங்கியதாக் சிறீதரன் பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது

Related Posts