- Thursday
- December 25th, 2025
யாழ். ஒல்லாந்தர் கோட்டை இராணுவத்திற்கு சொந்தமானது. கோட்டைக்குள் இருந்து இராணுவத்தை எவராலும் வெளியேற்ற முடியாது என இராணுவ கட்டளை தளபதி மகேஸ் சேனநாயக்க தெரிவித்துள்ளார். யாழ். மாவட்டத்திற்கு இன்று (புதன்கிழமை) விஜயம் செய்த இராணுவத் தளபதி, யாழ் கோட்டையை நேரில் சென்று பார்வையிட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது, கோட்டைப் பகுதியில்...
யாழ். அராலி குள்ள மனிதர்கள் சம்பவத்திற்கும், இலங்கைப் பாதுகாப்புத் தரப்பினருக்கும் தொடர்புள்ளதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளரும், யாழ் மாநகரசபை உறுப்பினருமான வி. மணிவண்ணன் குறிப்பிட்டுள்ளார். எனவே, இந்த சம்பவங்களைக் கட்டுப்படுத்த வேண்டிய கட்டாயம் இந்த அரசாங்கத்திற்கு இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். யாழில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், அராலி குள்ள...
முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் கோட்டைக் கேணிக்கு அப்பால் உள்ள தமிழர்களின் பூர்வீக காணிகளை அபகரிக்கும் பெரும்பான்மை இனத்தவரின் முயற்சி தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. சிவந்தா முறிப்புக்குளம் பகுதி மற்றும் அதனை அண்மித்த வயல் நிலங்களையே பெரும்பான்மையினர் கையகப்படுத்த முயற்சித்துள்ளனர். இது தொடர்பாக கொக்குத்தொடுவாய் விவசாய அமைப்பினர், உடனடியாக வட மாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் மற்றும் முல்லைத்தீவு...
யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணை கிழக்கு கிராம அலுவலகர் வாள் முனையில் அச்சுறுத்தப்பட்டதுடன், அவரது அலுவலகம் அடித்து சேதப்படுத்தப்பட்டுள்ளது. வாள்கள் கம்பிகளுடன் பட்டப்பகலில் நுழைந்த 8 பேர் கொண்ட கும்பல் இந்த அட்டூழியத்தை அரங்கேற்றி தப்பிச்சென்றது. வண்ணார்பண்ணை கிழக்கு ஜே 100 கிராம அலுவலகரின் அலுவலகத்தில் இன்று நண்பகல் 12.20 மணியளவில் இந்த அடாவடிச் சம்பவம் இடம்பெற்றது. அலுவலகத்துக்குள்...
யாழ்ப்பாணம் நகரை அண்மித்த பகுதிகளிலுள்ள மூன்று வீடுகளில் வாள்வெட்டுக் குழுவினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்தச் சம்பவம் ஆறுகால்மடம் பொன்னையவீதி, கொக்குவில் பிரம்படி வீதி, ஆறுகால்மடம் புதுவீதி ஆகிய பகுதிகளில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை இடம்பெற்றுள்ளது. மேலும் குறித்த பகுதிகளிலுள்ள வீடுகளுக்குள் வாள்களுடன் புகுந்த குழுவினர், வீட்டை அடித்து நொருக்கி, வீட்டிலிருந்த பொருட்களையும் சேதப்படுத்தியுள்ளதுடன் வீட்டொன்றில் நிறுத்தி...
யாழ்ப்பாணம் அரியாலை – நெடுங்குளம் சந்தியில் தொடருந்துடன் மோதுண்டு சம்பவ இடத்திலேயே இருவர் உயிரிழந்தனர். மற்றொருவர் படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் இன்று பிற்பகல் 12.30 மணியளவில் இடம்பெற்றது. கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்தோக்குப் பயணித்த நகரங்களுக்கு இடையிலான (இன்ரசிற்றி) தொடருந்துடனேயே மோட்டார் சைக்கிளில் பயணித்த மூவர்...
அராலி பகுதியில் குள்ள மனிதர்கள் மக்கள் மீது தாக்குதல் நடத்துவதனால் மக்கள் பீதியில் உறைந்துள்ளனர். இங்குள்ள மனிதர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளை இலக்கு வைத்து தாக்குதல் நடத்துவதுடன், வீடுகள் மீதும் கல் வீச்சிலும் ஈடுபடுவதாக அப்பகுதி மக்கள் குறிப்பிடுகின்றனர். மேலும் இவர்கள் வீட்டு கூரைகள் மீது தாவி திரியும்போது மக்கள் அவல குரல் எழுப்பியதும், கூரையில்...
நாட்டின் பல்வேறு பாகங்களில் மதிய நேரத்தின்போது வெப்பநிலை அதிகரித்துள்ளது. இதற்கமைய, இன்று காலை 08.30 மணியுடன் , 24 மணித்தியாலத்திற்குள் யாழ்ப்பாணம் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களின் வெப்பநிலை வழமையைவிட 4 பாகை செல்ஸியஸ் அளவில் பதிவாகியுள்ளது. இதேநேரம் நுவரெலியா, வவுனியா மற்றும் குருநாகல் மாவட்டங்களில் வழமையை விடவும் 2 பாகை செல்ஸியஸினால் வெப்பநிலை அதிகரித்திருந்ததாக காலநிலை...
சண்டிலிப்பாயில் நேற்று இரவு வாள்களுடன் நின்ற கும்பல் ஒன்று பெரும் அட்டகாசத்தில் ஈடுபட்டது. வீதியில் போவோர் வருவோரை மடக்கி, மிரட்டியது, முகத்தை மூடி துணிகட்டி வாள்களுடன் நின்றவாறு இந்தக் குழு அட்டகாசம் செய்தது. வீதியில் சென்ற வாகனங்களை இந்தக் குழு அடித்து நொருக்கியது. ஒருவருடைய மோட்டார் சைக்கிளையும் பறித்துச் சென்றது. ‘‘உயிர் வேண்டுமா, பைக் வேண்டுமா’’...
நல்லிணக்கம் மற்றும் நம்பிக்கையை கட்டியெழுப்புவதற்கான அடையாளமாக வட மாகாணம் மாற்றியமைக்கப்பட வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கையாளர் பென் எமர்சன் தெரிவித்துள்ளார். 2017ஆம் ஆண்டு ஜுலை மாதம் 10 முதல் 14ஆம் திகதிவரை இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், யுத்தத்தின் போது இடம்பெற்ற போர்க் குற்றங்களுக்கு...
வவுனியா – பூனாவை பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் 20 பேர் படுகாயமடைந்துள்ளனர். கொழும்பிலிருந்து புதுக்குடியிருப்பு நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தே மரமொன்றுடன் மோதி விபத்திற்கு உள்ளாகியுள்ளது. இதன்போது இதில் பயணித்த 20 பேர் வரை காயமடைந்த நிலையில் வவுனியா மருத்துவ மனை கொண்டுசென்று சிகிச்சை பெற்று வருவதாக அங்கிருந்து...
தென்மராட்சியில் இடம்பெற்று வந்த வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சாவகச்சேரி பகுதியை சேர்ந்த சில இளைஞர்கள் தம்மை ‘ஐ’ குழு எனவும் ‘சவா’ குழு எனவும் அடையாளப்படுத்தி கொண்டு வாள் வெட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில் குறித்த குழுவினர் நேற்று(செவ்வாய்க்கிழமை) மாலை 4 மணியளவில் எழுதுமட்டுவாள் பகுதியில் கோஸ்டி மோதல்...
யாழ் மற்றும் புறநகர் பகுதிகளில் மோட்டார் சைக்கிளில் நடமாடிய கொள்ளையர்கள் பெருமளவான பணம் மற்றும் நகைகளை கொள்ளையடித்து தப்பிச்சென்றுள்ளனர். யாழ் மற்றும் நல்லூர் பகுதிகளில் உள்ள வர்த்தக நிறுவனங்களுக்குள் நேற்று (திங்கட்கிழமை) இரவு 8 மணியளவில் புகுந்த கொள்ளையர்கள் உரிமையாளர்களுக்கு வாள்களை காட்டி மிரட்டி பணங்களை கொள்ளையடித்து சென்றுள்ளனர். இலக்கத்தகடுகள் அற்ற மூன்று மோட்டார் சைக்கிள்களில்...
செம்மணியில் எலும்புக்கூட்டு எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்ட பிரதேசத்தில் பரிசோதனைகள் மேற்கொள்வதற்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவ மனையின் சட்ட மருத்துவ அதிகாரி நேற்றுப் பிரசன்னமானார். பொலிஸ் குற்றத் தடுப்புப் பிரிவின் பொறுப் பதிகாரி சம்பவ இடத்துக்கு வருகை தரவில்லை. மேலதிகஅகழ்வுப் பணிகளும் பரிசோதனைகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. நீர்த்தாங்கி அமைப்பதற்காக செம்மணியில் கடந்த வெள்ளிக் கிழமை நிலம் அகழப்பட்டது. மனித எலும்புக்கூட்டு...
45 நாட்களில் இராணுவ முகாம்களை அகற்றுமாறும் யாரும், எவருக்கும் உத்தரவிடவில்லை என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். வடக்கு மாகாணத்தில் நீண்டகாலமாக தொண்டராசிரியர்களாக கடமையாற்றும் 457 பேருக்கு நிரந்தர நியமனம் வழங்கும் நிகழ்வு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. இந்தநிகழ்வில் உரையாற்றிய போதே பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த பிரதமர்,...
செம்மணிப் பகுதியில் நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை மனித எலும்புக்கூடொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த பிரதேசத்தில் புதிதாக அமைக்கப்பட்டுவரும் நீர்த்தாங்கியின் நிர்மாணப் பணிகள் இடம்பெறும் பகுதியிலேயே இந்த எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இச்சம்பவத்தினையடுத்து யாழ்ப்பாணப் பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்டதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் மற்றும் தடயவியல் பொலிஸார் ஆகியோர் விசாரணைகளை மேற்கொண்டனர். இந்நிலையில் குறித்த பகுதியில்...
நல்லாட்சியுடன் இணக்க அரசியல் நடத்தும் தமிழ் தேசிய கூட்டமைப்பு, தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக அரசாங்கத்திற்கு தீர்க்கமான அழுத்தம் கொடுக்க வேண்டும் என, அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பு வலியுறுத்தியுள்ளது. கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தனின் அழைப்பின் பேரில் எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்திற்கு சென்ற அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான...
தமிழ் மக்களுக்கும் இராணுவத்தினரும் நெருக்கமாக இருப்பதை தான் விரும்பவில்லை எனத் தெரிவித்த வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், இந்த நெருக்கம் தமிழினத்தை பாதிக்கும் எனக் குறிப்பிட்டுள்ளார். வடக்கில் சாதாரண மக்களையும் இராணுவத்தினரையும் பிரிக்க முதலமைச்சர் எத்தனிப்பதாக இராணுவத் தளபதி மகேஸ் சேனாநாயக்க குற்றம் சாட்டியிருந்த நிலையில் இது குறித்து இன்று (செவ்வாய்க்கிழமை) ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே...
எதிர்க்கட்சித் தலைவர் பதவியிலிருந்து இரா.சம்பந்தனை நீக்கிவிட்டு, தினேஸ் குணவர்த்தனவை நியமிக்க வேண்டும் என பொதுஜன பெரமுன கட்சித் தலைவரான ஜி.எல்.பீரிஸ் வலியுறுத்தியுள்ளார். கொழும்பில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற பொதுஜன பெரமுனவின் செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டிருந்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “நாடாளுமன்றிலுள்ள 92 மொத்த எதிரணி உறுப்பினர்களில் 70...
இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு பின்னர் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பிலான ஆட்கொணர்வு வழக்கில் உதவிய பெண் ஒருவர் மீதும் அவரது மகன் மீதும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்திற்கு அருகில் வைத்து கடந்த சனிக்கிழமை முற்பகல் குறித்த தாக்குதல் சம்பவம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. வட்டுக்கோட்டை சங்கரத்தை பகுதியை சேர்ந்த 36 வயதுடைய பெண்ணும், அவரது ஆறு வயது...
Loading posts...
All posts loaded
No more posts
