வடமாகாணத்திலுள்ள இராணுவ முகாம்களை அகற்றமாட்டோம்: மகேஷ் சேனநாயக்க

வடமாகாணத்தில் அமைந்துள்ள இராணுவ முகாம்களை அகற்றமாட்டோமென இராணுவத்தளபதி மகேஷ் சேனநாயக்க நேற்று (ஞாயிற்றுக்கிழமை) தெரிவித்துள்ளார். நாட்டின் தேசிய பாதுகாப்பை கருத்திற்கொண்டு, இவ்வாறு செயற்படுவதாக அவர் அறிக்கையொன்றின் மூலம் குறிப்பிட்டுள்ளார். குறித்த அறிக்கையில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது- “சில ஊடகங்கள் மக்கள் மத்தியில் இராணுவத்தினர் தொடர்பில் தவறான கருத்துக்களை பரப்பிவருகின்றன. எனினும், இராணுவம் மீதான நம்பிக்கையினைக் கைவிடவேண்டாம்....

முப்படையினருக்கு பொலிஸ் அதிகாரம்!

பொலிஸ் அதிகாரங்கள் எதிர்வரும் இரண்டு ஆண்டுகளுக்கு சட்டபூர்வமாக முப்படையினருக்கு வழங்கப்பட்டுள்ளது. நாட்டில் பாரிய அச்சுறுத்தலாக உருப்பெற்றுள்ள போதைப்பொருள் பாவனைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையிலேயே இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. போதைப்பொருளை கட்டுப்படுத்த பொலிஸார் பாராட்டத்தக்க சேவையை ஆற்றிவருகின்ற போதிலும், நாட்டின் மோசமான நிலைமையை கருத்திற் கொண்டு முப்படையினரின் உதவியை நாட வேண்டியுள்ளதாக ஜனாதிபதி மற்றும் சட்டம் ஒழுங்கு அமைச்சர்...
Ad Widget

தமிழ் மக்களை எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் ஏமாற்றி வருகிறார் – நாமல் ராஜபக்ஷ

தமிழ் மக்களை எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் ஏமாற்றி வருவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகனும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ குற்றஞ்சாட்டியுள்ளார். யாழ்ப்பாணம் ஊடக அமையத்தில் நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் அவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “தமிழ் தேசிய கூட்டமைப்பு, எதிர்க்கட்சி...

சுழிபுரம் சிறுமி கொலையாளிகள் சுதந்திரமாக திரிவதாக குற்றச்சாட்டு!

சுழிபுரம் சிறுமி கொலை வழக்குடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் சிலர் இன்னமும் கைது செய்யப்படாமையால் சுதந்திரமாக நடமாடி திரிவாதாக சிறுமியின் உறவினர்கள் குற்றம் சாட்டுவதாக அவர்கள் சார்பில் நீதிமன்றத்தில் முன்னிலையான சட்டத்தரணி தெரிவித்தார். குறித்த வழக்கு விசாரணையானது மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் நேற்று (புதன்கிழமை) நீதவான் ஏ.ஆனந்தராஜா முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டது....

மரண தண்டனை கைதிகளின் விபரத்தை வழங்குமாறு ஜனாதிபதி பணிப்பு!

மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளின் விபரங்களை வழங்குமாறு, நீதிமன்றத்திடம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கோரிக்கை விடுத்துள்ளார். மரண தண்டனை நிறைவேற்றுவதற்கு முதற்கட்டமாக 19 பேர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், அவர்களது விபரமே கோரப்பட்டுள்ளது. அரசாங்க தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில், அமைச்சரவை இணைப் பேச்சாளரும்...

அதிகாரப் பகிர்வை உருவாக்க எம்மால் முடியாதுள்ளது: சம்பந்தன்

இதுவரை நம்பகரமான அதிகாரப்பகிர்வை உருவாக்க எங்களால் முடியாதுள்ளது என எதிர்க்கட்சித்தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். மாகாண சபைத் தேர்தல்கள் தொடர்பில் நாடாளுமன்றத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “நாட்டினைப் பிரிக்காது இணைந்து ஐக்கியமாக நாட்டினை வழிநடத்திச் செல்ல...

பிரபாகரன் காலத்தில் மக்கள் பாதுகாப்பாக இருந்தார்கள் என்பது உலகறிந்த உண்மைதானே – முதலமைச்சர்

பிரபாகரன் காலத்தில் எம் மக்கள் பாதுகாப்பாக இருந்தார்கள் என்ற உண்மையைக் கூறுவதால் நாங்கள் எவரும் பயங்கரவாதிகள் ஆகிவிட மாட்டோம் எனத் தெரிவித்திருக்கும் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் அந்த நாள் இன்று வந்திடாதோ என்று கௌரவ விஜயகலா கூறுவதால் அவர் தீவிரவாதி ஆகிவிட முடியாது. புலிகள் காலத்தில் எம் மக்கள் (யுத்தத்தில் ஏற்பட்ட பாதிப்புக்களை விட)...

தமிழ் மக்களுக்காக பதவியை தியாகம் செய்கிறேன்: விஜயகலா மகேஸ்வரன்

தமிழ் மக்களுக்காக தமது பதவியை தியாகம் செய்ய தீர்மானித்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்தார். வடக்கில் குற்றங்கள் அதிகரித்துள்ளதால் மீண்டும் விடுதலைப் புலிகள் உருவாகுவதை எதிர்பார்ப்பதாக விஜயகலா தெரிவித்த கருத்து, நாட்டில் பாரிய அதிர்வலைகளை தோற்றுவித்துள்ளது. இந்நிலையில், தமிழ் மக்களின் கௌரவத்திற்காகவும் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காகவுமே விடுதலைப் புலிகள் தொடர்பான கருத்தை வெளிப்படுத்தியதாக தெரிவித்த விஜயகலா,...

வேலையற்ற விரக்தி நிலையில் பட்டதாரி இளைஞன் தற்கொலை!

தென்மராட்சிப் பகுதியில் பட்டதாரி இளைஞன் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். பட்டதாரியான அவர் வேலையற்ற விரக்தி நிலையிலேயே உயிரை மாய்த்துக்கொண்டதாககத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் நேற்று முன்தினம் (02) பகல் வேளையில் கொடிகாமம் கச்சாய் துறைமுகச் சாலையில் நடைபெற்றுள்ளது. சம்பவத்தில் அதே இடத்தைச் சேர்ந்த கிருஸ்ணபிக்ளை சத்தியசீலன் வயது (29) என்பவரே உயிரிழந்துள்ளார். இழைஞனின் இறப்புத் தொடர்பாக விசாரணைகளை...

நான் பதற்றத்தில் அவ்வாறு கூறிவிட்டேன்! விடுதலைப் புலிகள் மீளவும் புத்துயிர் பெற முடியாது!! – அமைச்சர் விஜயகலா பல்டி

“நான் பதற்றத்தில் அவ்வாறு கூறிவிட்டேன். விடுதலைப் புலிகள் மீளவும் புத்துயிர் பெற முடியாது. போதைப்பொருளால் ஏற்படும் அச்சுறுத்தல்களை நிறுத்தவேண்டும் என்பதே எனது நோக்கம்” இவ்வாறு மகளிர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் இன்று பல்டி அடித்தார். பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவுடன் தொலைபேசியில் உரையாடிய போதே அவர் இன்று இதனைத் தெரிவித்தார். பிரதி அமைச்சர்...

மல்லாகத்தில் பொலிஸ் அதிகாரி துப்பாக்கிச்சூட்டில் சாவு!!

மல்லாகம் பகுதியில் பொலிஸ் அதிகாரி ஒருவர் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளார். அவரது துப்பாக்கியே தவறுதலாக வெடித்துள்ளது என்று தெரிவிக்கப்படுகின்றது. தெல்லிப்பழை பொலிஸ் நிலைய அதிகாரியே உயிரிழந்துள்ளார். அவர் கடமையிலிருந்தபோதே இந்தச் சம்பவம் நடந்துள்ளது என்று தெரியவருகின்றது. உயிரிழந்தவர் திருகோணமலை, கந்தளாய்ப் பகுதியைச் சேர்ந்த என்.நஷீர் (வயது-25) என்பவரே சாவடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

விடுவிக்கப்பட்ட காணிகளில் இராணுவத்தின் இருப்பு தொடர்கிறது: முதலமைச்சர்

உயர் பாதுகாப்பு வலயங்களாக காணப்பட்ட மக்கள் காணிகள் தற்போது விடுவிக்கப்பட்டுள்ள போதிலும், இராணுவத்தின் இருப்பு அங்கு தொடர்வதால் மக்கள் குடியேற முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். முதலமைச்சருக்கும், வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் திலக் மாரபன மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்த்தனவுடன் வடக்கில் நேற்று (திங்கட்கிழமை) விசேட சந்திப்பொன்று இடம்பெற்றிருந்தது. வெளிநாட்டலுவல்கள் அமைச்சரின்...

வடக்கு இளைஞர்களை அழித்தொழிக்கும் செயற்பாட்டில் ஒருசிலர்: முதலமைச்சர்

வடக்கு இளைஞர்களை சட்டத்திற்குப் புறம்பான நடவடிக்கைகளில் இட்டுச்சென்று அவர்களை அழித்தொழிக்கும் செயற்பாட்டில் குறிப்பிட்ட சிலர் ஈடுபட்டு வருவதாக வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் குற்றம் சாட்டியுள்ளார். குறித்த விடயம் தொடர்பில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) திக்கம் மத்திய சனசமூக நிலையத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வொன்றில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்....

ஆனைக்கோட்டை கண்ணகை அம்மன் தமிழீழ அலங்காரத்தில் வீதியுலா

ஆனைக்கோட்டை கண்ணகை அம்மன் ஆலயத்தில் மின்குமிழ்களால் அலங்கரிக்கப்பட்ட தமிழீழ வரைபட அலங்காரத்துடன் அம்பாள் உலா வந்துள்ளார். மேற்படி ஆலயத்தின் வருடார்ந்த திருவிழா கடந்த 14 ஆம் திகதி ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது. இந்த நிலையில் ஆலயத்தின் இந்து இளைஞர் மகளிர் மன்றத்தின் ஏற்பாட்டில் குறித்த பூங்காவன திருவிழா நேற்று (29) வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மேற்படி திருவிழாவின்...

சுழிபுரம் சிறுமி படுகொலை: மேலும் இருவர் சிக்கினர்!

மாணவி சிவனேஸ்வரன் றெஜினா படுகொலையிடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் மேலும் இருவர் நேற்று கைது செய்யப்பட்டனர் என பொலிஸ் தகவல்கள் தெரிவித்தன. சுழிபுரம் காட்டுபுலம் அ.த.க. பாடசாலையில் தரம் ஒன்றில் கல்வி பயிலும் சிவனேஸ்வரன் றெஜினா (வயது – 6 ) என்ற சிறுமி அப்பகுதி தோட்டக் கிணற்றிலிருந்து கடந்த 25ஆம் திகதி திங்கட்கிழமை மாலை சடலமாக...

மாண்புமிக்க இனமொன்றை இராணுவ இயந்திரத்தின் துணையோடு இலங்கையின் பேரினவாத அரசு மௌனமாகக் கொலைசெய்கின்றது

“நேற்று ஒரு தங்கைக்காக ,இன்று ஒரு சிறுமிக்காக, நாளை இன்னுமோர் உறவுக்காக எனப் பெயரளவில் கூடிநின்று ஆர்ப்பரித்துவிட்டு ஓய்ந்துவிடப்போகிறோமா? இன்று போதைப்பொருள் பாவனையும், பாலியல் குற்றங்களும், கொலை கொள்ளைகள், குழு மோதல்கள், சாதியின் பெயரால் கலவரங்கள் என்பன அதிகரித்த ஒரு வஞ்சிக்கப்பட்ட பூமியாகிவிட்டது எம் தாய்மண்” இவ்வாறு யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது. ஒட்டுமொத்தத்...

மானிப்பாயில் வாள்வெட்டுக் கும்பல் அட்டூழியம்!!

மானிப்பாய், லோட்டன் வீதி இந்துக் கல்லூரிக்கு முன்பாக உள்ள வீட்டுக்குள் இன்று காலை புகுந்த கும்பல், பெற்றோல் குண்டுத் தாக்குதல், வாள்வெட்டு என பெரும் அட்மூழியத்தில் ஈடுபட்டு தப்பித்துள்ளது. வாள்வெட்டுக் கும்பலால் அந்த வீட்டின் மீது நடத்தப்படும் இரண்டாவது பெரும் தாக்குதல் இதுவாகும். “10 பேர் கொண்ட கும்பல் வாள்களுடன் வந்தது. வீட்டுக்குள் புகுந்த கும்பல்,...

றெஜினாவுக்கு நீதிகேட்டு சுழிபுரத்தில் ஆர்ப்பாட்டம்

மாணவியின் படுகொலைக்கு நீதிகேட்டு சுழிபுரம் சந்தியில் நூற்றுக் கணக்கான மாணவர்களும் பொது மக்களும் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்தப் போராட்டம் இன்று காலை 7.15 மணிக்கு ஆரம்பமானது. மானிப்பாய் – பொன்னாலை வீதியை மறித்து போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது. சுழிபுரம் காட்டுபுலம் அ.த.க. பாடசாலையில் தரம் ஒன்றில் கல்வி பயிலும் சிவனேஸ்வரன் றெஜீனா (வயது – 6...

சிறுமியைக் கொலை செய்ததாக ஒருவர் ஒப்புதல்!!! மனநோயாளி போல் நடிக்கும் சந்தேகநபர்!!

“சிறுமியைக் கொலை செய்தது தான் மட்டுமே என ஒருவர் ஒப்புக்கொண்டுள்ளார். ஆனால் சரியான காரணத்தை கூறாமல் மாறுபட்ட தகவல்களை வழங்கி அவர் மன நோயாளி போல் நடிக்கிறார்” என்று வட்டுக்கோட்டைப் பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டில் இன்று செவ்வாய்க்கிழமை காலை வரை 6 பேர் பொலிஸ் தடுப்பில் வைத்து விசாரணைக்கு உள்படுத்தப்பட்டுள்ளனர் என்றும்...

சுழிபுரம் சிறுமி துன்புறுத்தலின் பின் கழுத்து நெரித்துக் கொலை!!

“சுழிபுரம் பாணவெட்டை பகுதியில் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட மாணவி துன்புறுத்தல்களின் பின் கழுத்து நெரித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார் என்பது உடலில் உள்ள அடையாளங்களை வைத்து நம்பப்படுகிறது. எனினும் உடற்கூற்று பரிசோதனையின் பின்பே உறுதி செய்ய முடியும்” இவ்வாறு தடயவியல் பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்தையடுத்து சந்தேகத்தின் அடிப்படையில் நான்கு பேர் விசாரணைக்கு உள்படுத்தப்பட்டுள்ளனர் என்று வட்டுக்கோட்டை பொலிஸார்...
Loading posts...

All posts loaded

No more posts