Ad Widget

றெஜினா கொலை வழக்­கில் சாட்­சி­யங்­கள் பதிவு!!

யாழ்ப்பாணம் சுழி­பு­ரம், காட்­டுப்­பு­லத்­தில் படு­கொலை செய்­யப்­பட்ட சிறுமி றெஜி­னா­வின் வழக்குநேற்று மல்­லா­கம் நீதி­மன்­றில் விசா­ர­ணைக்கு எடுக்­கப்­பட்­டது. சிறு­மி­யின் உற­வி­ன­ரான பெண் ஒரு­வ­ரும், றெஜி­னா­வு­டன் சம்­பவ தினத்­தன்று பாட­சா­லை­யில் இருந்து சேர்ந்து வந்த நண்­பி­யி­ட­மும் சாட்­சி­யங்­கள் பெறப்­பட்­டன. வழக்கு விசா­ர­ணை­கள் எதிர்­வ­ரும் 21ஆம் திக­திக்கு ஒத்­தி­வைக்­கப்­பட்­டது.

கடந்த ஜூன் மாதம் 25ஆம் திகதி சிறுமி றெஜினா கிணறு ஒன்­றில் இருந்து சட­ல­மாக மீட்­கப்­பட்­டார். சிறு­மி­யின் கழுத்­தில் கயிற்­றால் இறுக்­கப்­பட்­டது போன்ற அடை­யா­ள­மும் காணப்­பட்­டது.

சிறு­மி­யின் உடற்­கூற்­றுச் சோத­னை­யில் கயிற்­றால் இறுக்­கப்­பட்­ட­தால் இறப்பு ஏற்­பட்­டது என்­றும், சிறுமி பாலி­யல் துன்­பு­றுத்­தல்­க­ளுக்கு உட்­ப­டுத்­தப்­பட்­ட­மைக்­கான தட­யங்­கள் உள்­ளன என்­றும் தெரி­விக்­கப்­பட்­டது.

இந்­தச் சம்­ப­வம் தொடர்­பில் பொலி­ஸார் முத­லில் 5 பேரைக் கைது செய்­த­னர். அவர்­க­ளில் ஒரு­வர் தானே கொலை செய்­தேன் என்று ஒப்­புக் கொண்­டுள்­ளார் என்று தெரி­வித்த பொலி­ஸார் ஏனை­யோரை விடு­வித்­த­னர். அதற்கு மக்­கள் மத்­தி­யில் பெரும் எதிர்ப்­புக் கிளம்­பி­யது. மக்­கள் பர­வ­லா­கப் போராட்­டங்­களை நடத்­தி­னார்­கள்.

பின்­னர் இரு­வர் கொலை­யு­டன் சம்­பந்­தப்­பட்­டுள்­ள­னர் என்ற சந்­தே­கத்­தில் கைது செய்­யப்­பட்­ட­னர். அவர்­கள் நீதி­மன்­றில் முற்­ப­டுத்­தப்­பட்டு விளக்­க­ம­றி­ய­லில் வைக்­கப்­பட்­ட­னர்.

இது தொடர்­பான வழக்கு நேற்று மல்­லா­கம் நீதி­வான் மன்­றில் மேல­திக நீதி­வான் ஏ.ஏ.ஆனந்­த­ராஜா முன்­னி­லை­யில் விளக்­கத்­துக்­காக எடுக்­கப்­பட்­டது.

சிறு­மி­யின் உற­வி­ன­ரான பெண் முத­லில் வாக்­கு­மூ­லம் வழங்­கி­னார்.

சிறுமி இறந்த நிலை­யில் மீட்­கப்­பட்ட கிணற்­றில் உடுப்­புத் தோய்த்­துக் கொண்­டி­ருந்­தேன். அந்த வழி­யால் 4 பேர் சென்­ற­னர். அவர்­க­ளைக் கண்­டால் அடை­யா­ளம் காட்ட முடி­யும். அவர்­கள் 3 பேரின் பெயர்­கள் தெரி­யும் (பெயர்­க­ளைக் குறிப்­பிட்­டார்). அவர்­க­ளில் இரு­வரே கைது செய்­யப்­பட்­டுள்­ள­னர் என்று வாக்­கு­மூ­ல­ம­ளித்­த­து­டன் அவர்­கள் இரு­வ­ரை­யும் சுட்­டிக்­காட்­டி­னார்.

அதன்­பின்­னர் உயி­ரி­ழந்த சிறு­மி­யின் நண்­பி­யி­டம் வாக்­கு­மூ­லம் பெறப்­பட்­டது.

பாட­சாலை முடிந்து தன்­னு­டனே றெஜினா வீடு திரும்­பி­னார் என்­றும், அப்­போது அவர் கையில் தேக்­கம்­காய்­களை எடுத்து வந்­தார் என்­றும் சிறுமி கூறி­னார்.

வாக்­கு­மூ­லங்­கள் பெறப்­பட்ட பின்­னர் வழக்கு எதிர்­வ­ரும் 21ஆம் திக­திக்கு ஒத்­தி­வைக்­கப்­பட்­டது. சந்­தே­க­ந­பர்­கள் 3 பேரின் விளக்­க­ம­றி­ய­லை­யும் நீதி­மன்று நீடித்­தது.

Related Posts