முகமாலையில் வெடிப்புச் சம்பவம்! : மாணவனின் கை துண்டிப்பு!!!

முகமாலை தெற்கு கோவானம் காட்டுப்பகுதியில் மர்ம பொருள் ஒன்று வெடித்ததில் மாணவன் ஒருவன் கையை இழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.

காட்டுப்பகுதிக்குள் வேலி அமைப்பதற்காக கட்டை தறிக்கச் சென்ற எழுதுமட்டுவாளை சேர்ந்த ஜெயபாலன் நிதர்சன் 18 வயது மாணவனே இதன்போது படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது குறித்த மாணவனின் இடது கை மணிக்கட்டுடன் துண்டிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

காயமடைந்த மாணவன் சிகிச்சைகளுக்காக பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளர்.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Related Posts