- Wednesday
- December 24th, 2025
கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஊரெழு அம்மன் கோவிலடியில் வீடு புகுந்த கொள்ளைக் கும்பல், வயோதிபத் தம்பதியரை கடுமையாகத் தாக்கிவிட்டு நகை மற்றும் பெறுமதியான பொருள்களைக் கொள்ளையிட்டுச் சென்றுள்ளது. கொள்ளைக் கும்பலின் தாக்குதலால் காயங்களுக்குள்ளான வயோதிபத் தம்பதியர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் இன்று சனிக்கிழமை (18) அதிகாலை 4 மணியளவில் இடம்பெற்றது என்று...
அரச மருந்தகக் கூட்டுதாபனத்தின் புதிய விற்பனை கிளை யாழ். போதனா வைத்தியசாலையில் இன்று (வியாழக்கிழமை) திறந்து வைக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ள சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவினால் புதிய விற்பனை கிளை திறந்து வைக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து புனர்வாழ்வு நிலையத்துக்கான புதிய கட்டடத்திற்கான நிர்மாணப் பணிகளை ஆரம்பித்து வைத்த அமைச்சர், வைத்தியசாலையின் நோயாளர் விடுதி போன்றவற்றை...
இராணுவ கனரக வாகனம் மோதுண்டதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த பொதுமகன் ஒருவர் உயிரிழந்தார் என்று பொலிஸார் தெரிவித்தனர். கிளிநொச்சி 155ஆம் கட்டைப் பகுதியில் நேற்று புதன்கிழமை (15) மாலை 4.30 மணியளவில் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றது. கிளிநொச்சியிலிருந்து இரணமடு நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்த குடும்பத் தலைவரை அதே திசையில் பயணித்த இராணுவ வாகனம்...
தமிழ் தலைவர்களின் தூரநோக்கற்ற சிந்தனைகளும், இறுமாப்புத் தன்மையும், அகந்தையுமே தொடர்ச்சியாக அரசியல் பின்னடைவுகளை சந்திக்க காரணம் என வட மாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் – வல்வெட்டித்துறையில் நேற்று(செவ்வாய்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “30...
முல்லைத்தீவு நாயாறு பகுதியில் உள்ளூர் மீனவர்களுக்குச் சொந்தமான 8 வாடிகள் உட்பட மீன்பிடி உபகரணங்கள் யாவும் தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளன. சம்பவத்தையடுத்து அப்பகுதியில் பெருமளவு பொலிஸாரும் இராணுவமும் குவிக்கப்பட்டுள்ளதால் பிரதேசத்தில் பதற்றம் நிலவுவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். தென்னிலங்கை மீனவர்கள் சிலர் முல்லைத்தீவில் சட்டவிரோதமான முறையில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக அங்குள்ள மீனவர்கள் குறிப்பிடுகின்றனர்....
எம்மை அடக்கி ஆள வேண்டும் என எண்ணுகின்ற பெரும்பான்மைச் சமூகத்தினரும் மிக விரைவில் எம்முடன் சேர்ந்து போராட வேண்டிய தேவை ஏற்படும் என வட.மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார். முல்லைத்தீவில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற பால் பதனிடும் தொழிற்சாலையின் திறப்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும்...
தமிழரின் பூர்விக பிரதேசமான வெடுக்குநாரி மலையிலுள்ள ஆதி லிங்கேஸ்வரர் ஆலயத்திற்கு பொதுமக்கள் சென்று பூசை வழிபாடுகளில் ஈடுபட தொல்பொருள் திணைக்களத்தால் விதிக்கப்பட்டுள்ள தடைக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் கடும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளார். வவுனியா வடக்கு பிரதேசத்தின் ஒலுமடு கிராமத்தில் இருந்து சற்றுதொலைவில் அமைந்துள்ளது வெடுக்ககுநாரி மலை. குறித்த மலைப்பகுதியில் ஆதி...
எரிபொருள் விலை சூத்திரத்திற்கு அமைவாக நேற்று தொடக்கம் இரண்டு வகை எரிபொருளின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. நேற்று பிற்பகல் நிதி அமைச்சில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட நிதி அமைச்சர் மங்கள சமரவீர இதனை தெரிவித்தார். அதன்படி, ஒக்டேன் 95 ரக பெட்ரோல் லீற்றரின் விலை 2 ரூபாவாலும் , சூப்பர் டீசல் லீற்றரின் விலை...
முகமாலை தெற்கு கோவானம் காட்டுப்பகுதியில் மர்ம பொருள் ஒன்று வெடித்ததில் மாணவன் ஒருவன் கையை இழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது. காட்டுப்பகுதிக்குள் வேலி அமைப்பதற்காக கட்டை தறிக்கச் சென்ற எழுதுமட்டுவாளை சேர்ந்த ஜெயபாலன் நிதர்சன் 18 வயது மாணவனே இதன்போது படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்போது குறித்த மாணவனின் இடது கை மணிக்கட்டுடன் துண்டிக்கப்பட்டுள்ளதாக...
யாழ்ப்பாணம் – குருநகர் பகுதியில் விசாரணை என்ற பெயரில் ஒருவரை அழைத்துச்சென்று, கொலை செய்த குற்றத்திற்காக இரண்டு இராணுவத்தினருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு நேற்று(புதன்கிழமை) திருகோணமலை மேல்நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் – கோப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட திருநெல்வேலியில் கடந்த...
எதிர்வரும் காலங்களில் எரிபொருள் விலை அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று (புதன்கிழமை) பிரதமர் மீதான கேள்வி நேரத்தின் போது கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ‘ஈரானின் மீதான...
யாழ்ப்பாணத்தில் அண்மைய காலமாக அதிகரித்து வரும் குள்ள மனிதர்களின் அச்சுறுத்தலை கட்டுப்படுத்தும் வகையில், இளைஞர்கள் பத்து பேர் வீதம் உள்ளடக்கி அவர்களோடு மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்களையும் இணைத்து குழுக்களை அமைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. குறித்த குழுக்கள் இரவு நேர ரோந்து நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக யாழ்.பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் குறிப்பிட்டுள்ளார். இராணுவ உயரதிகாரிகள், பொலிஸ் உயரதிகாரிகள், அரச...
யாழ்ப்பாணம் சுழிபுரம், காட்டுப்புலத்தில் படுகொலை செய்யப்பட்ட சிறுமி றெஜினாவின் வழக்குநேற்று மல்லாகம் நீதிமன்றில் விசாரணைக்கு எடுக்கப்பட்டது. சிறுமியின் உறவினரான பெண் ஒருவரும், றெஜினாவுடன் சம்பவ தினத்தன்று பாடசாலையில் இருந்து சேர்ந்து வந்த நண்பியிடமும் சாட்சியங்கள் பெறப்பட்டன. வழக்கு விசாரணைகள் எதிர்வரும் 21ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. கடந்த ஜூன் மாதம் 25ஆம் திகதி சிறுமி றெஜினா கிணறு...
வடக்கு மாகாணத்தின் அடுத்த முதலமைச்சர் வேட்பாளர் தொடர்பாக இன்னும் எவ்வித தீர்மானமும் எடுக்கவில்லையென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் அதன் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். அடுத்த மாகாண சபைத் தேர்தலில் வடக்கு மாகாண சபையின் முதலமைச்சர் வேட்பாளராக மீளவும் சி.வி.விக்னேஸ்வரனையே முன்னிறுத்த தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து வினவியபோது அடுத்த...
வவுனியா பகுதியில் தரம் பத்தில் கல்வி பயிலும் மாணவிகள் இருவர் கடத்தப்பட்டதாக தாய் ஒருவர், வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். குறித்த முறைப்பாட்டில் அத்தாய் குறிப்பிட்டுள்ளதாவது, “நேற்று (வியாழக்கிழமை) காலை தனது மகளும், பெறாமகளும் நகர்ப்பகுதியிலுள்ள பாடசாலைக்கு சென்று மாலை 1.30 மணியளவில் பாடசாலை முடிந்ததும் நண்பியின் வீட்டிற்கு செல்ல முற்பட்டுள்ளனர். இதன்போது பெரியார்குளம்...
யாழ்ப்பாணம்- அராலி மேற்குப் பகுதியிலுள்ள வீடொன்றின் வேலிக்கு தீ மூட்டப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுடன் இதனை குள்ள மனிதர்களே மேற்கொண்டிருப்பார்களென அப்பிரதேச மக்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். நேற்று (வியாழக்கிழமை) நள்ளிரவு இடம்பெற்ற இச்சம்பவத்தில் பாலசிங்கம் ஜெயதாஸ் என்பவரின் வீட்டு வேலிக்கே தீ மூட்டப்பட்டதுடன் அவரது தம்பியின் வீட்டு யன்னல்களும் தட்டப்பட்டதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். மேலும்...
கூரை மேல் ஏறி குறை கூறிப் பிழை பிடிப்பவர் எப்பொழுதும் குதர்க்கமாகவே பேசுவார். நாம் எதுவும் செய்ய முடியாது. அவரது கட்சி அவரை எதிர்க் கட்சிப் பதவியில் இருந்து நீக்கும் அவர் தொடர்ந்தும் அந்தப் பதவியில் இருக்கின்றாரே அதைப் போன்றுதான் முடியாதது என்று எதுவும் இல்லை. இவ்வாறு வடக்கு மாகாண எதிர்க்கட்சித் தலைவரின் கருத்துக்குப் பதிலடி...
புத்தரும் விஷ்ணுவின் அவதாரம் தான், எனவே வடக்கில் பௌத்த விகாரைகள் கட்டப்படுவதால், தமிழர்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என பணகல உபதிஸ்ஸ தேரர் தெரிவித்துள்ளார். நல்லெண்ண விஜயம் மேற்கொண்டு நேற்று (வியாழக்கிழமை) யாழ்ப்பாணத்திற்கு வந்த அவர், ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், வடக்கு மாகாணத்தில் யார் பெரும்பான்மையாக இருக்கிறார்கள், இந்துக்களா? கிறீஸ்தவர்களா? பௌத்தர்களா?...
முல்லைத்தீவு மல்லாவி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தென்னியன்குளத்தை அண்மித்த காட்டுப் பகுதியில் தொல்லியல் திணைக்களத்தினால் அடையாளம் இடப்பட்ட இடத்தில் புதையல் தோண்டியமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அப்பகுதியிலிருந்து சிறுவனொருவரின் பாடசாலை பாதணி ஜோடியொன்றும் கண்டெடுக்கப்பட்ட நிலையில், புதையல் தோண்டுவதற்காக சிறுவன் நரபலி கொடுக்கப்பட்டிருக்கலாம் என கிராம மக்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். குறித்த காட்டுப் பகுதியில் 8 அடி ஆழமான குழியொன்று...
வாள்வெட்டுக் கும்பல்களின் அட்டகாசத்திற்கு மத்தியில், தற்போது அரங்கேறிவரும் குள்ள மனிதர்களின் அச்சுறுத்தல்களால் யாழ். மக்கள் பெரிதும் அச்சமடைந்துள்ளனர். யாழ். அராலி பகுதியில் பொதுமக்களை அச்சுறுத்திய குள்ள மனிதர்கள் நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு வட்டுக்கோட்டையிலும் பொதுமக்களை அச்சுறுத்தி பெரும் அட்டகாசம் புரிந்துள்ளனர். இதனால் வட்டுக்கோட்டை பிரதேசத்தில் நேற்று கடும் பதற்றம் நிலவியதுடன், மக்கள் பீதியில் உறைந்து போயுள்ளதாக...
Loading posts...
All posts loaded
No more posts
