அபிவிருத்தியை கூட்டமைப்பினரே எதிர்த்தனர் – முதல்வர் விக்கி குற்றச்சாட்டு!

அரசாங்கம் தருவதை ஏற்று எங்கள் இடங்களை நாங்கள் அபிவிருத்தி செய்ய வேண்டுமென தமிழ்க் கட்சித் தலைவர்கள் சிலர் முன்னர் கூறிய போது அதனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தான் எதிர்த்தனர் என வடக்கு முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வாரந்தம் கேட்கப்படும் கேள்விகளுக்கு அவர், அனுப்பிவைத்திருந்த பதிலிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும் தெரிவித்ததாவது, “அரசாங்கம் தருவதை...

கிளிநொச்சியில் காவற்துறையின் இலஞ்ச ஊழலை எதிர்த்து மரத்தில் ஏறி முதியவர் போராட்டம்!!

கிளிநொச்சியில் முதியவர் ஒருவர் காவற்துறையினர் இலஞ்சம் பெறுவதற்கு எதிப்புத் தெரிவித்து பிரதம நீதியரசர் மற்றும் நீதி அமைச்சர் ஆகியோர் முன்னிலையில், இன்று மரத்தில் ஏறி போராட்டம் நடத்தியுள்ளார். கிளிநொச்சி மாவட்டத்தில் புதிய நீதிமன்றக் கட்டடத் தொகுதிக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று காலை 9.30ற்கு கிளிநொச்சி நீதிவான் நீதிமன்ற வளாகத்தில் இடம்பெற்றது. அதன் பின்னர் மேடை...
Ad Widget

மன்னாரில் ஆடைகள் அற்ற நிலையில் சடலங்கள் புதைக்கப்பட்டனவா?

மன்னார் சதோச வளாகத்தில் மனித எலும்புக்கூடுகளை கண்டெடுக்கும் அகழ்வு பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், சடலங்கள் ஆடைகள் அற்ற நிலையில் புதைக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. இன்று (திங்கட்கிழமை) 62ஆவது நாளாகவும் மன்னாரில் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. விசேட சட்ட வைத்திய அதிகாரி மற்றும் தொல்லியல்துறை பேராசிரியர் தலைமையில் அகழ்வு பணிகள் இடம்பெற்றுவரும்...

விக்கிக்கு உரிய நேரத்தில் தக்க பதிலடி கொடுப்பேன் – சம்பந்தன்

“வடக்கு மாகாண முதலமைச்சர் தனது பக்க நியாயங்களைப் பட்டியல்படுத்தியுள்ளார். மறுபக்க நியாயங்களை நாம் முன்வைக்கவேண்டும். அதனை அவசரப்பட்டுச் செய்ய முடியாது. விக்னேஸ்வரன் முன்வைத்த கருத்துக்களை அலசி ஆற அமர இருந்து ஆராய்ந்து உரிய நேரத்தில் பதில் வழங்குவேன்” என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்...

இலங்கை இராணுவம் தான்தோன்றித்தனமாகச் செயற்படுகின்றது: ஐ.நா.ஆணையாளர்!

இலங்கையின் வட.பகுதியில் இராணுவ மயமாக்கல் அதிகரித்து வருவதற்கு ஐ.நா.வின் மனித உரிமைகளுக்கான ஆணையாளர் செயிட் அல் ஹூசைன் தனது கடும் கண்டனத்தினை வெளியிட்டுள்ளார். ஐ.நா.வின் மனித உரிமைகளுக்கான ஆணையாளர் பதவியில் இருந்து விலகிச் செல்லும் அவர், இலங்கை தொடர்பாக அவர் நேற்று (வெள்ளிக்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார். மேலும் இலங்கை அரசாங்கம் காணிகளை விடுவிப்பதற்கு...

நித்தியகலாவை ஏன் கொலை செய்தேன்! சந்தேகநபரின் முழுமையான வாக்குமூலம்

கிளிநொச்சியில் படுகொலை செய்யப்பட்ட நித்தியகலாவினைக் கொலை செய்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர் வழங்கிய வாக்குமூலம் குறித்த முழுமையான தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி விநாயகபுரத்தை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், சந்தேகநபர் வழங்கிய வாக்குமூலம் தொடர்பான முழுமையான விபரங்கள் வெளியாகியுள்ளன. அவரது ஒப்புதல் வாக்கு...

கிளிநொச்சியில் சடலமாக மீட்கப்பட்டவர் அடையாளம் காணப்பட்டார்!

கிளிநொச்சியில் நேற்றையதினம் சடலமாக மீட்கப்பட்டவர் முல்லைத்தீவு முறுகண்டி வசந்தநகரைச் சேர்ந்த 32 வயதான கறுப்பையா நித்தியகலா என்று அடையாளம் காணப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் நடைபெற்ற பகுதியில் பாதுகாப்பு உத்தியோகதரின் இடுப்புப் பட்டி மற்றும் இரண்டு நீல மற்றும் சிவப்பு பேனாக்கள் காணப்பட்டுள்ளமயினால் இவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் என சந்தேகம் கொண்ட ஊடகவியலாளர் ஒருவரும் மற்றும் கிளிநொச்சி...

யாழ் மாவட்ட பாதிக்கப்பட்ட பட்டதாரிகளை மிரட்டும் அரச அதிகாரிகள்!!

மாவட்ட செயலகங்களில் கடந்த பட்டதாரி பயிலுனர் நேர்முகத்தேர்வில் தகவலறியும் சட்டமூலத்தின் ஊடாக தாம் பெற்ற புள்ளி பட்டியலை தத்தமது மாவட்ட செயலகத்தில் பாதிக்கப்பட்ட வேலையற்ற பட்டதாரிகள் பெற்று வரும் நிலையில் யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் குறித்த சட்டமூலத்தின் ஊடாக தத்தமது பெறுபேறுகளை அறிய முடியாது இருப்பதாகவும் அதற்கான பொறுப்பு வாய்ந்த அதிகாரி தமது விண்ணப்பத்தை ஏற்கமறுப்பதாகவும்...

கிளிநொச்சியில் வெடிமருந்துகளுடன் இருவர் கைது!

கிளிநொச்சி – பூநகரி பகுதியில் வெடிமருந்துகளுடன் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு பூநகரி சோதனை சாவடியில் சந்தேகத்தின் பேரில் வாகனமொன்றை சோதனையிட்ட போது குறித்த இருவரும் கைதுசெய்யப்பட்டதாக பூநகரி பொலிஸார் தெரிவிக்கின்றனர். குறித்த வாகனத்திலிருந்து 1 கிலோ 80 கிராம் வெடிமருந்து கைப்பற்றப்பட்டுள்ளது. சந்தேகநபர்கள் தேராவில் வலைப்பாடு பகுதிகளில் வசிப்பவர்கள் என தெரிவிக்கப்படுகிறது. பூநகரி...

முல்லைத்தீவில் மாபெரும் பேரணி! அலைகடலென திரண்ட மக்கள் கூட்டம்

தமிழர் தாயகத்தை துண்டாடும் வகையில் மகாவலி அபிவிருத்தி என்ற போர்வையில் மேற்கொள்ளப்படும் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களை கண்டித்து முல்லைத்தீவில் பாரிய கண்டனப் பேரணியும், போராட்டமும் முன்னெடுக்கப்பட்டுள்ளது. மகாவலிக்கு எதிரான தமிழர் மரபுரிமை பேரவையின் ஏற்பாட்டில் இன்று (செவ்வாய்க்கிழமை) இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. மகாவலி அதிகாரசபையினால் முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லை கிராமங்களான கொக்கிளாய், கொக்குதொடுவாய், கருணாட்டுக்கேணி ஆகிய...

வடக்கு, கிழக்கு அபிவிருத்தி செயலணியில் ஜனாதிபதியினால் பல்வேறு திட்டங்கள் ஆராய்வு.

வடக்கு, கிழக்கு அபிவிருத்தி தொடர்பான ஜனாதிபதி செயலணியின் இரண்டாவது கூட்டம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று (27) பிற்பகல் ஜனாதிபதி அலுவலக்தில் இடம்பெற்றது. இதன்போது வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பாதுகாப்பு படைகளின் கட்டுப்பாட்டிலிருக்கும் காணிகள், பாடசாலைகள் விடுவிக்கப்பட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவுறுத்தியுள்ளார். அத்துடன் கைத்தொழிற்சாலைகளை மீள...

பிரபாகரனின் உடலில் இருந்து சீருடையை அகற்ற உத்தரவிட்டார் சரத் பொன்சேகா!

மிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் சடலத்தில் இருந்து, புலிகளின் சீருடையை அகற்றுமாறு, இராணுவத் தளபதியாக இருந்த பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவே உத்தரவிட்டார் என்று மேஜர் ஜெனரல் சாஜி கல்லகே தெரிவித்துள்ளார். இறுதிக்கட்டப் போரில் இராணுவ அணிகளை வழிநடத்திய தளபதிகளில் ஒருவரான மேஜர் ஜெனரல் சாஜி கல்லகே, இராணுவத்தில் இருந்து அண்மையில் ஓய்வு...

தமிழ் மக்கள் மீதான இன அழிப்பு வேறு வடிவில் தோற்றம்: வரதராஜன் பார்த்திபன்

முள்ளிவாய்க்காலுடன் தமிழ்மக்கள் மீதான இன அழிப்பு முடிவடையவில்லை. இன்றும் அது வேறு வடிவில் தொடருகின்றதென தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் யாழ்.மாநகர சபை உறுப்பினர் வரதராஜன் பார்த்திபன் தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு அனுப்பிய கண்டன அறிக்கையிலையே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அவ்வறிக்கையில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, “இரத்தம் இன்றி சத்தம் இன்றி மதத்தின் பெயராலும் மகாவலி அதிகாரசபை...

முல்லைத்தீவில் மாணவியை துஷ்பிரயோகம் செய்த பாராளுமன்ற உறுப்பினருக்கு விளக்கமறியல்!!

உடையார் கட்டில் பாடசாலை மாணவியை கடத்தி சென்று விருப்பத்திற்கு மாறாக பாலியல் துஷ்பிரயோகம் செய்த கிளிநொச்சி இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் அவரது நண்பர் ஆகிய இருவரையும் எதிர்வரும் 4 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க முல்லைத்தீவு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முல்லைத்தீவு உடையார் கட்டு மகா வித்தியாலத்தில் உயர்தர பரீட்சை எழுதி வரும் லூத்மாத...

முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரனின் கோரிக்கையை நிராகரித்தது கூட்டமைப்பு!

வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கான அபிவிருத்தி செயலணியில் கலந்து கொள்ளவேண்டாம் என வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரன், தமிழ்தேசிய கூட்டமைப்பிடம் விடுத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது. வடக்கு, கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்திக்கான ஜனாதிபதி செயலணி அடுத்த வாரம் கூடவுள்ளது. இந்நிலையில் அரசியல் தீர்வு ஒன்று எட்டப்படும் வரை அபிவிருத்தி செயலணியில் தாம் கலந்து கொள்ளப் போவதில்லை எனவும், தமிழ் தேசிய...

போதனா வைத்தியசாலையின் ஆபத்தான கழிவுகள் குடாக் கடலில் கொட்டப்படுவதை உறுதி செய்தார் பணிப்பாளர்

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் ஆபத்தான கழிவுகள் சுத்திகரிக்கப்படாமல் நேரடியாக குடாக்கடலுக்குள் கொட்டப்படும் விவகாரம் யாழ்ப்பாண மாநகர சபை அமர்வில் வெளிச்சத்துக்கு வந்தது. அதுதொடர்பில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் மருத்துவர் த.சத்தியமூர்த்தி நேற்று நேரில் ஆராய்ந்தார். ஆபத்தான கழிவுகள் சுத்திகரிக்கப்படாமல் நேரடியாக குடாக்கடலுக்குள் கொட்டப்படுவதை அவர் உறுதி செய்தார். யாழ் மாநகரசபையின் அமர்வு நேற்றுமுன்தினம் மாநகர...

வடக்கில் 88 சதவீதமான காணிகளை இராணுவம் விடுவித்துள்ளது – யாழில் ஜனாதிபதி

“வடக்கு மாகாணத்தில் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டிலிருந்த காணிகளில் 88 சதவீதமான காணிகள் தற்போது அதன் உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன. எஞ்சியுள்ள 12 சதவீதமும் வெகுவிரைவில் மக்களிடம் கையளிக்கப்பட வேண்டுமென்ற தெளிவான கொள்கையை அரசு கொண்டிருக்கின்றது” என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன யாழ்ப்பாணத்தில் தெரிவித்தார். இராணுவத்தினரின் கட்டுப்பாட்டிலிருக்கும் மயிலிட்டி பாடசாலை மற்றும் அதனையண்டிய காணிகளை எதிர்வரும் இரண்டு வாரத்துக்குள் விடுவிக்க...

யாழில் ஆவா குழுவிற்கு சவால் விடும் புதிய குழு?

கொக்குவில், இணுவில் மற்றும் தாவடி ஆகிய பகுதிகளிலுள்ள மூன்று வீடுகள், தேனீர் கடை, வாகனத்தரிப்பு நிலையங்கள் உள்ளிட்ட பகுதிகளில் அத்துமீறி நுழைந்த 9 பேர் கொண்ட கும்பலொன்று அட்டூழியத்தில் ஈடுபட்டுள்ளது. ஆவா கும்பலுக்கு அச்சுறுத்தும் வகையில் துண்டறிக்கையை வழங்கிய கும்பல், தமது அட்டூழியங்களை வீடியோ அழைப்பில் நேரலையாக ஒருவருக்கு காண்பித்துள்ளது. இந்தச் சம்பவங்கள் நேற்று(புதன்கிழமை) மாலை...

இராணுவ சின்னங்களை பார்க்கும் போது தமிழ் மக்களுக்கு ஆத்திரம் வருகின்றது: முதலமைச்சர்

வடக்கில் உள்ள இராணுவ சின்னங்களை பார்க்கும் போது தமிழ் மக்களுக்கு ஆத்திரம் வருவதன் காரணமாகவே அவற்றை அகற்றுமாறு கோரிக்கை விடுத்தாக முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் இதனை கூறியுள்ளார். போர் நினைவு சின்னங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்...

தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்க்கும் எண்ணம் அரசுக்கு இல்லை – முதலமைச்சர்

இலங்கை அரசாங்கம் தமிழ் மக்களுடைய பிரச்சினைகளை தீர்க்க வேண்டும் என நினைத்தால் தீர்க்கலாம். ஆனால் அந்த எண்ணம் அரசுக்கு அறவே இல்லை என்று வடமாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஷ்வரன் கூறியுள்ளார். அடுத்த வருடம் மார்ச் மாதத்திற்கு முன்னர் தமிழ் மக்களுடைய பிரச்சனைகளுக்குத் தீர்வு காண வேண்டிய கடப்பாடு அரசாங்கத்திற்கு இருப்பதால் அவர்கள் எதையாவது செய்தே தீர...
Loading posts...

All posts loaded

No more posts