- Wednesday
- December 24th, 2025
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட பொங்குதமிழ் பிரகடன நினைவுத் தூபி இன்று (17) திங்கட்கிழமை காலை திரைநீக்கம் செய்யப்பட்டது. யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் அனைத்துப் பல்கலைக்கழக தமிழ் மாணவர்களையும் ஒன்றினைத்து நடத்தும் “தமிழமுதம்” மாபெரும் தமிழ் விழாவின் ஒரு அங்கமாகவே “பொங்குதமிழ்” தமிழரின் வரலாற்று பதிவு நிகழ்வின் நினைவுத் தூபி திரைநீக்கம் செய்யப்பட்டது. ஈழத்தமிழர்...
வடமாகாண சபை உறுப்பினர் ஒருவரின் ஊடக இணைப்பாளர் என அறிமுகப்படுத்திய ஒருவர் தொலைபேசி ஊடாக தன்னை அச்சுறுத்தினார் என யாழில் உள்ள பெண் ஊடகவியலாளர் ஒருவர் யாழ். காவல்நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார். அதேவேளை எதிர்வரும் 30ஆம் திகதி தமிழ் மக்கள் அதிரும் படியான செய்தி வரும் , அதை பிரசுரிக்க தயாராக இருங்கள் எனவும்...
போர்க்குற்றச்சாட்டுகளிலிருந்து இராணுவத்தை மீட்கும் வகையிலான கோரிக்கையை ஐக்கிய நாடுகள் சபையில் வாய்மூலம் முன்வைக்கவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். எதிர்வரும் 25ஆம் திகதி இந்த கோரிக்கையை ஐ.நா.வில் முன்வைக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். ஊடக பிரதானிகளுடன் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இறுதி யுத்தத்தின்போது போர்க்குற்றங்களில் ஈடுபட்டதாக இராணுவம் மீது குற்றம்...
மகாவலி திட்டம் என்ற பெயரில், வடக்கு, கிழக்கில் அத்துமீறிய குடியேற்றங்களை ஏற்றுக் கொள்ளப்போவதில்லை என்று எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். திருகோணமலையில் நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற திரியாய் அருள்மிகு வரத விக்னேஸ்வரர் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேக பெருவிழாவில் கலந்து கொண்டபின்னர் செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் வழங்கிய போதே, அவர் இவ்வாறு...
தமிழ் மக்கள் பிரதிநிதிகளை நம்பி அரசியல் அநாதைகள் ஆக்கப்பட்டுள்ளோம் என தெரிவித்துள்ள தமிழ் அரசியல் கைதிகள், வாக்கு தேவைக்கு மட்டுமே தங்களை வைத்து பிழைப்பு நடத்துகிறார்கள் எனவும் குற்றம் சுமத்தியுள்ளனர். தேசிய சிறைக்கைதிகள் தினம் நேற்று(புதன்கிழமை) அனுஸ்டிக்கப்பட்டது. இந்த நிலையில் தமிழ் அரசியல் கைதிகள் தமது ஆதங்கத்தினை தம் உறவுகளிடம் இவ்வாறு பகிர்ந்துள்ளனர். அவர்கள் தமது...
விடுதலை புலிகளின் தலைவரை சந்திப்பதற்கு தான் தயாராக இருந்த போதிலும் அதற்கு அவர் இணக்கம் தெரிவிக்கவில்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இந்தியாவிற்கு விஜயம் செய்துள்ள அவர், அந்நாட்டு ஊடகம் ஒன்றுக்கு வழங்கியுள்ள விசேட செவ்வி ஒன்றிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். நான் ஆட்சிக்கு வந்த காலத்தில் விடுதலை புலிகளின் தலைவர் வேலுபிள்ளை...
வடக்கு – கிழக்கு மற்றும் மலையகத்தில் வாழும் பெண்களே தரகர்களால் ஏமாற்றப்பட்டு, வெளிநாடுகளுக்கு வேலைக்காக அனுப்பி வைக்கப்படுகின்றனர் என வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட...
காங்கேசன்துறை பகுதியிலிருந்து மனித எலும்புக்கூடு ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. காங்கேசன்துறை பகுதியில் உள்ள ரயில் தண்டவாளத்திலிருந்து சுமார் 50 மீற்றர் தூரத்தில் குறித்த எழும்புக்கூடு இன்று (புதன்கிழமை) கண்டெடுக்கப்பட்டுள்ளது. குறித்த எலும்புக் கூடு ஆணினுடையது என்றும் தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பாக காங்கேசன்துறை பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டு மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
வலி.தெற்கு பிரதேச சபை உறுப்பினர் ஜீ.பிரகாசை உள்ளூராட்சி உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கியமைக்கு யாழ்.மாவட்ட நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. வலி.தெற்கு பிரதேச சபை உறுப்பினர் ஜீ.பிரகாஸ் கட்சியின் கட்டுப்பாடுகளை மீறி நடந்து கொண்டார் எனவும், கட்சியின் அறிவுறுத்தலை மீறி தவிசாளர் பதவிக்கு போட்டியிட்டார் எனவும் கூறி அவரிடம் தமிழரசு கட்சியினால் விளக்கம் கோரப்பட்டது. கட்சி...
கிளிநொச்சி, தர்மபுரம் பகுதியில் நிலத்தடியில் புதைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், தமிழீழ விடுதலை புலிகளின் சீருடைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. கிளிநொச்சி வைத்தியாலைக்கு சொந்தமான காணியிலிருந்தே குறித்த சீருடைகள் இன்று (புதன்கிழமை) கண்டெடுக்கப்பட்டுள்ளன. குறித்த காணியில் புதிய கட்டடமொன்றை அமைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையிலேயே இவை கண்டெடுக்கப்பட்டுள்ளன. இதற்கு முன்னர் முல்லைத்தீவு – ஒட்டுச்சுட்டான் பிரதேசத்தில் விடுதலைப் புலிகள்...
சம்பூர் மின் உற்பத்தி நிலையம் மற்றும் அம்பாந்தோட்டை துறைமுகம் போன்ற பிரம்மாண்ட உட்கட்டமைப்பு திட்டங்களை முன்னெடுப்பதற்கு முன்னதாக, மனித உரிமை மீறல் தொடர்பில் விரிவான மதிப்பீடுகளை மேற்கொள்ள இலங்கை ஒரு வலுவான சட்ட கட்டமைப்பை அமுல்படுத்துவது அவசியமென ஐ.நா. நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார். ஒன்பது நாட்கள் விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்திருந்த ஐ.நா.வின் சுயாதீன நிபுணர்...
மக்களின் தேவைகள், அபிலாசைகளைப் புரிந்து கொள்ளத் தவறிய ஒரு சிலரைக் கொண்ட குழுவே தமிழ்த் தேசிய கூட்டமைப்பை வழிநடத்துகின்றது எனச் சாடியிருக்கும் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் சுயநலம் கொண்ட சுமந்திரனும் அவரின் அடியாட்களும் குறித்த குழுவில் அங்கம் வகிக்கின்றனர் என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குறிப்பிட்ட கொள்கைகள் கொண்ட அமைப்பல்ல. அது பதிவு செய்யப்பட்ட...
தமிழ் மக்களுக்கு பணியாற்ற தம்முடன் இணைந்து கொள்ளுமாறு வட மாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரனுக்கு, லங்கா சமசமாஜ கட்சி அழைப்பு விடுத்துள்ளது. கொழும்பில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே லங்கா சமசமாஜ கட்சியின் தலைவர் திஸ்ஸ விதாரண இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட...
வவுனியா – கனகராயன்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சிவில் உடையில் தம்மை தாக்கியதாக தெரிவித்து 14 வயது மாணவி உள்பட ஓரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் மாங்குளம் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர் இந்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றது. வவுனியா, கனகராயன்குளம், பெரியகுளம் பகுதியில் வசித்து வரும் குடும்பம், தமக்குச் சொந்தமான காணியின் ஒரு துண்டை, ஹோட்டல் அமைத்து...
அரசியலமைப்பில் இலங்கையானது ஜனநாயக சோசலிச குடியரசு என்றே எழுதப்பட்டுள்ள போதிலும் ஜனநாயக குடியரசு என்றோ அல்லது சோசலிச குடியரசு என்றோ யாராலும் சான்றிதழ் வழங்க முடியான தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். இதனைக் கருதும்போது புதிய அரசமைப்பில் எங்களுக்குப் பெயர்ப்பலகைகள் தேவையில்லை. மாறாக அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வு இருக்கும்...
மன்னாரில் தொடர்ந்து 66ஆவது நாளாக மனித எச்சங்களின் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில், அங்கிருந்து வெட்டு தழுப்புகளுடனான மண்டை ஓடொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. குறித்த மனித புதைக்குழி பல்வேறு சந்தேகங்களை தோற்றுவித்துள்ள நிலையில், தற்போது கண்டெடுக்கப்பட்டுள்ள மனித எச்சமானது இச்சந்தேகங்களை மேலும் வலுப்படுத்துவதாக அமைந்துள்ளன. குறித்த மண்டையோட்டில் காணப்படும் வெட்டு தழும்பானது பிரோத பரிசோதனையின் போது...
வலி.வடக்கு தெல்லிப்பழை பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் இராணுவ உயர்பாதுகாப்பு வலயத்திலிருந்து ஜனாதிபதியால் விடுவிக்குமாறு உத்தரவிட்ட மயிலிட்டி- கலைமகள் வித்தியாலயமும் அதனைச் சூழவுள்ள 3 ஏக்கர் காணியும் அத்துடன் குரும்பசிட்டியில் கிராம அபிவிருத்திச் சங்கம், தெல்லிப்பழை பல நோக்கு கூட்டுறவுச் சங்கம் அதனை சூழவுள்ள 12 ஏக்கர் காணியும் இன்று 28 வருடங்களின் பின்னர் விடுவிக்கப்பட்டுளதுடன்,...
காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை அமைந்துள்ள 100 ஏக்கர் காணியை பயன்படுத்தி அந்த பிரதேசத்தில் சிறிய கைத்தொழிற்சாலைகளை அபிவிருத்தி செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. குறித்த பகுதியில் சிறிய அளவிலான தொழில் முயற்சியாளர்களுக்கான கைத்தொழில் வலயமாக மேம்படுத்துவதற்கு சுமார் 998 மில்லியன் ரூபா முதலீடு செய்யப்படவுள்ளது. இதன்கீழ் தொழிற்சாலைக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளைக் கொண்டதாக அபிவிருத்தி செய்வதற்கு...
யாழ். மக்களை மிக நீண்டகாலமாக அச்சுறுத்திவந்த சட்டவிரோத வாள்வெட்டுக் கும்பலாக ஆவாக் குழுவின் முக்கிய உறுப்பினர் மானிப்பாய் பொலிசாரால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று (செவ்வாய்க்கிழமை) குறித்த கைது இடம்பெற்றிருந்த நிலையில், சந்தேகநபர் இன்று யாழ். மல்லாகம் நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளார். கொக்குவில் பகுதியை சேர்ந்த 23 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த...
முல்லைத்தீவு தண்ணிமுறிப்பு – குருந்தூர் மலையில் பௌத்த விகாரை அமைக்கும் நோக்கில் வந்த பௌத்த பிக்குகள் உட்பட 12 பேர் பொதுமக்களால் மடக்கி பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம் நேற்று(செவ்வாய்க்கிழமை) மாலை இடம்பெற்றுள்ளது. இது குறித்து மாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன் ஊடகங்களுக்கு தகவல் தருகையில், முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லைப்பகுதிதயில் உள்ள தண்ணிமுறிப்பு கிராமத்தில் தமிழ்...
Loading posts...
All posts loaded
No more posts
