யாழ். பல்கலைக்கழகத்தில் மாணவிகள் மீது பேராசிரியர்களால் பாலியல் துன்புறுத்தல்

யாழ். பல்கலைக்கழக மாணவிகள் மீது இடம்பெறும் பாலியல் ரீதியான துன்புறுத்தல்கள் தொடர்பாக பல்கலைக்கழக நிர்வாகம் உரிய நடவடிக்கைகளை எடுக்க தவறிவருகின்றது என மாணவர் ஒன்றியம் கடும் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் இன்று நடாத்திய ஊடகவியியலாளர் சந்திப்பின் போதே மாணவர் ஒன்றியப் பிரதிநிதிகள் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர். இதன் போது தொடர்ந்தும் கருத்து தெரிவித்துள்ள...

தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஆதரவு தெரிவித்து யாழில் கவனயீர்ப்பு போராட்டம்

சிறையில் உண்ணாவிரதம் இருக்கும் தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் மூன்று அம்சக் கோரிக்கைகளை முன்வைத்தும் யாழில் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. சமூக நீதிக்கான வெகுஐன அமைப்பின் ஏற்பாட்டில் புத்தூரில் நேற்று (திங்கட்கிழமை) இப்போராட்டம் நடைபெற்றது. அனுராதபுரம் சிறையுள்ள தமிழ் அரசியல் கைதிகள் தம்மை விடுதலை செய்யுமாறு கோரி கடந்த பல நாட்களாக உண்ணாவிரதப் போராட்டத்தில்...
Ad Widget

திருமணமான காலம் முதல், கணவர் செந்தூரனின் கொடுமைகளுக்கு, போதநாயகி உட்பட்டிருந்தார்!

போதநாயகி திருமணமான காலம் முதல் அவர்களுடைய குடும்பத்தில் பல பிரச்சினைகள் இடம்பெற்று வந்தது அவருடைய கணவன் செந்தூரன் என்பவரால் பல கொடுமைகளுக்கு அவர் உட்பட்டிருந்தார் என போதநாயகியின் தாயார் திருமதி நடராஜா தெரிவித்துள்ளார். உயிரிழந்த கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளர் போதநாயகி நடராஜாவின், மரணம் தற்கொலையாயின் தற்கொலைக்கு தூண்டியவர்கள் கண்டுபிடிக்கப்பட்டு தண்டனை வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை...

இறுதி யுத்தத்திலும் விடுதலைப் புலிகள் பலமாகவே செயற்பட்டனர்: ஜனாதிபதி

இறுதி யுத்தத்தின் இறுதி இரு வாரங்களிலும் விடுதலைப் புலிகள் பலமான நிலையிலேயே போரிட்டு வந்ததாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார். ஐ.நா சபையில் பங்கேற்ற நியூயோர்க் சென்ற ஜனாதிபதி மைத்திரிபால அங்கு இலங்கைச் சமூகத்தினரைச் சந்தித்த போதே, இவ்வாறு தெரிவித்துள்ளார். இறுதி தருணத்திலும், அவர்கள் மீண்டெழுந்து விமானத்தில் வந்து கொழும்பு நகரைத் தாக்கி அழிக்காலம் என்ற...

வடக்கில் இருந்து ராணுவத்தை அகற்றக்கோருவது இன்னொரு யுத்தத்திற்காகவே : ராணுவத் தளபதி

வடக்கில் இருந்து ராணுவத்தை அகற்றுமாறு புலம்பெயர் மக்கள் கோருவது, நாட்டில் மீண்டும் ஒரு யுத்தத்தை ஏற்படுத்தவே என ராணுவத் தளபதி மகேஷ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார். கண்டி தலதா மாளிகைக்கு சென்று வழிபாடுகளில் ஈடுபட்ட இலங்கை ராணுவத் தளபதி இதனை கூறியுள்ளார். இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த மகேஷ் சேனாநாயக்க, “நாட்டில் தற்போது அமைதியான சூழ்நிலை நிலவுகின்றது....

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யாழில் நடைபெறவுள்ள போராட்டத்திற்கு த.தே.ம.முன்னணி பூரண ஆதரவு

அனுரதபுரம் சிறைச்சாலையில் அடைத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் கடந்த 14ஆம் திகதி தொடக்கம் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களது உடல்நிலை மிகவும் மோசமடைந்துள்ளது. எனினும் தமது கோரிக்கைகள் அரசினால் புறக்கணிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று முதல் தமக்கான மருத்துவ உதவிகளையும் புறக்கணிக்க ஆம்பித்துள்ளதாக அறிய முடிகின்றது. ஏற்கனவே பலதடவைன தமது விடுதலையை வலியுறுத்தி உண்ணாவிரதமிருந்து உடல்நிலை...

உண்ணாவிரத போராட்டத்தினால் அரசியல் கைதிகளுக்கு விடுதலை கிடைக்காது – அரசாங்கம்

உண்ணாவிரத போராட்டத்தினால் தமிழ் அரசியல் கைதிகளுக்கு விடுதலை கிடைக்காது என அரசாங்கம் தெரிவித்துள்ளது. அரசியல் கைதிகளின் போராட்டம் தொடர்பில் கருத்து வெளியிடும் போதே சிறைச்சாலை புனரமைப்பு மற்றும் நீதியமைச்சர் தலதா அதுகோரல மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். இதுதொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர், ‘பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பில் தற்போது வழக்கு...

உயிரிழந்த விரிவுரையாளரின் மரணத்திற்கு நீதி கோரி ஆர்ப்பாட்டம்!

திருகோணமலையில் உயிரிழந்த பெண் விரிவுரையாளரின் இறுதிச்சடங்குகள் நேற்று (திங்கட்கிழமை) வவுனியாவில் இடம்பெற்றதுடன், இதன்போது குறித்த பிரதேசவாசிகளால் ஆர்ப்பாட்டமொன்றும் மேற்கொள்ளப்பட்டது. வவுனியா, ஆசிகுளம் பகுதியில் வசிக்கும் 29 வயதான நடராசா போதநாயகி கிழக்குப் பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாகத்தில் விரிவுரையாளராக பணியாற்றி வந்தார். இவர் பல்கலைக்கழகத்தில் இருந்து வீடு சென்ற நிலையில் காணாமல் போயிருந்ததுடன் கடந்த வெள்ளிக்கிழமை மாலை...

யுத்தக் குற்றங்களை மறைப்பதற்கு ஜனாதிபதி நாடகம்: முதலமைச்சர் சி.வி. குற்றச்சாட்டு!

இலங்கை இராணுவத்தின் யுத்தக் குற்றங்களை மறைப்பதற்கே தமிழ் அரசியல் கைதிகளைப் பகடைக்காய்களாக பயன்படுத்துவதாக வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார். அரசியல் கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டம் தொடர்பாக வட.மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு அனுப்பியுள்ள கடிதத்திலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “இலங்கை இராணுவத்தினரை யுத்தக் குற்றங்களில் இருந்து பாதுகாப்பதற்காகவே...

இனப்பிரச்சினைத் தீர்விற்கு தமிழ்க் கட்சிகள் ஒத்துழைக்கவில்லை: பிரதமர் ரணில்

இனப்பிரச்சினைத் தீர்வு தொடர்பான யோசனைகளுக்கு தமிழ்க் கட்சிகளின் ஒத்துழைப்புக் கிடைக்கவில்லை என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) காலஞ்சென்ற முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள முனசிங்க தொடர்பான அனுதாபப் பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே பிரதமர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “எமது நல்லாட்சியில் மீண்டும்...

தமிழர்கள் மீதான படையினரின் பாலியல் சித்திரவதைகள் இலங்கையில் தொடர்கின்றன-ஜெனிவாவில் அறிக்கை

தமிழர்கள் அரச படையினரால் பாலியல் ரீதியிலான சித்திரவதைகளுக்கு உள்ளாவது இலங்கையில் தொடர்கின்றது என மனித உரிமை ஆர்வலர் யஸ்மின் சூக்காவின் அமைப்பான சர்வதேச உண்மை மற்றும் நீதி திட்டம் தனது புதிய அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. ஜெனீவாவில் இடம்பெற்றும்வரும் ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையின் அமர்வில் ஐடிஜேபீ அமைப்பு இந்த புதிய அறிக்கையை வெளியிட்டுள்ளது. A ground-breaking...

ஆவா குழுவை இரண்டு நாட்களுக்குள் அடக்குவோம் – யாழ்.மாவட்ட இராணுவ தளபதி

ஆவா குழுவை இரண்டு நாட்களுக்குள் அடக்குவோம். நாட்டின் சட்டம் ஒழுங்கு என்பவற்றை மதித்தே பொறுமையாக இருக்கின்றோம் என யாழ்.மாவட்ட இராணுவ தளபதி மேஜர் ஜெனரல் தர்சன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். பலாலி இராணுவ தலைமையகத்தில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் , நாட்டில் தற்போது சட்டம் ஒழுங்கு...

தீர்வின்றி தொடரும் தமிழ் அரசியல் கைதிகளின் உணவு தவிர்ப்பு போராட்டம்

அநுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் உணவு தவிர்ப்பு போராட்டம் இன்று (வியாழக்கிழமை) ஏழாவது நாளாக நீடித்து வருகிறது. தங்களை விடுவிக்குமாறு அல்லது புனர்வாழ்வளிப்புக்கு உட்படுத்துமாறு கோரி இவர்கள் கடந்த 14ஆம் திகதி முதல் உணவு தவிர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு 9 வருடங்களுக்கு...

பொலிஸ்மா அதிபரை பதவி விலகுமாறு ஜனாதிபதி பணிப்பு?

பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவை இரண்டு வாரங்களுக்கு பதவியிலிருந்து விலகுமாறு ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் அறிவுறுத்தியுள்ளதாக அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலதிக தகவல்கள் விரைவில்.....

அதிகாலையில் வீடு புகுந்து ஐவர் மீது வாள்வெட்டு!! – பெற்றோல் குண்டுத் தாக்குதல்!!

தென்மராட்சி கைதடிப் பகுதியிலுள்ள வீடொன்றுக்குள் புகுந்து கும்பல் ஒன்று நடத்திய தாக்குதலில் 5 பேர் படுகாயமடைந்த நிலையில் சாவகச்சேரி மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர். இந்தச் சம்பவம் இன்று அதிகாலை 4 மணியளவில் இடம்பெற்றது என்று பொலிஸார் தெரிவித்தனர். “கைதடி ஏ9 நெடுஞ்சாலையிலுள்ள வீடொன்றுக்குள் புகுந்த 15இற்கும் மேற்பட்ட நபர்கள், பெற்றோல் குண்டுத் தாக்குதலை மேற்கொண்டும் கூரிய...

கடலட்டை பிடித்தோரை மடக்கிப் பிடித்த வடமராட்சி மீனவர்களை மிரட்டிய பொலிஸ் அத்­தி­யட்­ச­கர்!!

வட­ம­ராட்சி கிழக்­குக் கட­லில் கட­லட்டை பிடித்த வெளி­மா­வட்ட மீன­வர்­கள் பிர­தேச மீன­வர்­க­ளால் திட்­ட­மிட்டு மடக்­கிப் பிடிக்­கப்­பட்­ட­னர். மடக்­கிப் பிடித்த மீன­வர்­களை வைத்து உரி­மை­யா­ளர்­களை இனங்­காண பிர­தேச மீன­வர்­கள் திட்­ட­மிட்­ட­போ­தும், பொலி­ஸார் அச்­சு­றுத்­தும் வகை­யில் செயற்­பட்டு பிடிக்­கப்­பட்ட மீன­வர்­களை மீட்­டுச் சென்­ற­னர். வட­ம­ராட்சி கிழக்­குக் கட­லில் வெளி­மா­வட்ட மீன­வர்­கள் கட­லட்­டைத் தொழி­லில் ஈடு­ப­டு­கின்­ற­மையை ஆதா­ர­பூர்­வ­மாக நிரூ­பிக்க முயன்ற...

வடமராட்சியில் மீனவர்கள் போராட்டத்தில் குதிப்பு!!!

வடமராட்சி கடற்பரப்பில் அத்துமீறி சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட எட்டு மீனவர்களை, அப்பகுதி மீனவர்கள் மடக்கிக் பிடித்து தடுத்து வைத்துள்ளனர். இச்சம்பவம் குறித்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதை தொடர்ந்து அங்கு பொலிஸ் அதிகாரிகள் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு தடுத்து வைக்கப்பட்ட தென்னிலங்கை மீனவர்களை, அங்கு வந்த பொலிஸார் கைது செய்து அழைத்து செல்ல...

தமிழ் அரசியல் கைதிகளின் போராட்டம் ஐந்தாவது நாளாகவும் தொடர்கிறது!

அநுராதபுரம் சிறையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசியல் கைதிகளின் போராட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) ஐந்தாவது நாளாகவும் தொடர்கிறது. தங்களை விடுவிக்குமாறு அல்லது புனர்வாழ்வளிப்புக்கு உட்படுத்துமாறு கோரி கடந்த 14ஆம் திகதி 8 தமிழ் அரசியல் கைதிகள் உண்ணாவிரதப் போராட்டத்தினை ஆரம்பித்தனர். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசியல் கைதிகளில் ஒருவர் சுகயீனம் காரணமாக சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது....

மன்னாரில் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட நிலையில் மேலும் சில எலும்புக்கூடுகள் மீட்பு!

மன்னார் ‘சதொச’ வளாகத்தில் முன்னெடுக்கப்பட்டுவரும் அகழ்வு நடவடிக்கைகளில் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கும் வகையில் எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளன. 72 ஆவது நாளாக நேற்று (திங்கட்கிழமை) மீண்டும் அகழ்வுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையிலேயே குறித்த எலும்புக்கூட்டு எச்சங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மீட்கப்படும் மனித எச்சங்கள் ஒவ்வொன்றும் அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் மிகவும் கொடூரமாக காணப்படுவதாகவும்,...

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையில் சதி!- கஜேந்திரகுமார்

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பு பல உண்மைகளை மறைத்து வருவதுடன் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் கூட்டமைப்பு சர்வதேசத்திடமிருந்து இலங்கை அரசாங்கத்தை பாதுகாத்து வருகின்றதெனவும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். இதன் காரணமாகவே பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கம் மற்றும் தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை ஆகியன காலதாமதமாகின்றதென...
Loading posts...

All posts loaded

No more posts