- Wednesday
- December 24th, 2025
இந்தியாவின் ‘றோ’ புலனாய்வு அமைப்பு தன்னைப் படுகொலைசெய்வதற்கு சதிசெய்துவருவதாக இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குற்றஞ்சாட்டியுள்ளார். இந்தியா- இலங்கை இராஜதந்திர உறவில் பெரும் விரிசலை தோற்றுவிக்கக்கூடியதாக இந்தக் குற்றச்சாட்டு அமைந்துள்ளது என இந்தியாவின் ஹிந்துப் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற வாராந்த அமைச்சரவைக் கூட்டத்தில் அமைச்சர்கள் மத்தியில் உரையாற்றிய ஜனாதிபதி சிறிசேன தன்னை...
மகனைத் தாக்க வந்தவர்களைத் தடுக்க முற்பட்ட தாயை பொல்லு, கம்பியால் அடித்து துடிதுடிக்க கொலை செய்த கொடூரச் சம்பவம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஊரெழு மேற்கு சரஸ்வதி சனசமூக நிலைய பகுதியில் நேற்று இரவு 8 மணியளவில் இந்தக் கொடூரச் சம்பவம் இடம்பெற்றது. வீட்டுக்குள் புகுந்த 8 பேர் கொண்ட கும்பல் ஒன்று...
`இலங்கையில் தமிழர்கள் சந்தித்து வரும் பிரச்சினைகள் தொடர்ந்து வருகின்றன. எனவே அங்கு மீண்டும் தமிழீழம் கோரும் போராட்டம் வெடிக்கும். அதற்கு பிரபாகரன் தலைமை ஏற்பார்’ என்று பழ. நெடுமாறன் தெரிவித்துள்ளார். தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன் இராமநாதபுரத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது, ”இலங்கைக் கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட தமிழக மீனவர்களின் படகுகளில் சுமார் 150 படகுகள் மீண்டும்...
உண்ணாவிரதமிருக்கும் அரசியல் கைதிகளை விடுதலை செய்யத்தவறின் வரவு செலவு திட்டத்தை நிராகரிப்போம் என்ற அழுத்தத்தினை தமிழ் தலைமைகள் அரசாங்கத்திற்கு வலியுறுத்த வேண்டுமென்ற கோரிக்கை முன்வைத்துள்ளதுடன், உண்ணாவிரதமிருக்கும் அரசியல் கைதிகளின் உடல் நிலையை கருத்திற்கொண்டு, உண்ணாவிரதத்தினை கைவிடுமாறும் சிவில் அமைப்புக்கள் கோரிக்கை விடுத்துள்ளதாக வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். அனுராதபுரம் சிறையில் கடந்த 29 நாட்களாக தமிழ்...
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை குறித்த, ஜனாதிபதியுடனான பேச்சுவார்ததையில் தீர்மானம் எதுவும், எட்டப்பட வில்லை என, தமிழ் தேசிய கூட்டமைப்பு அறிவித்துள்ளது. கூட்டமைப்பின் தலைவர், சம்பந்தர் மற்றும் சுமந்திரன் ஆகியோர் நேற்று (வெள்ளிக்கிழமை) ஜனாதிபதியை, நாடாளுமன்ற கட்டிடத் தொகுதியில் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். இந்தநிலையில் குறித்த இந்த சந்திப்பு தொடர்பில் கருத்து வெளியிடும் போதே கூட்டமைப்பின் பேச்சாளர்...
யாழ்ப்பாணம், அச்சுவேலி பகுதியில் மின்சார கம்பம் நாட்டுவதற்காக நிலத்தை தோண்டிய போது மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அச்சுவேலி பத்தமேனி சூசையப்பர் வீதியில் நேற்று வியாழக்கிழமை காலை இலங்கை மின்சார சபையினர் மின் கம்பத்தை நாட்டுவதற்கு நிலத்தை தோண்டியுள்ளனர். அதன்போது, கை, கால், மண்டையோடு உள்ளிட்ட மனித எலும்புகள் கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்டன. எலும்புக்கூட்டு எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டமை...
அரசியல் கைதிகளின் விடுதலையும், அவர்களுடைய உயிர்களும் இன்று தமிழ் மக்களின் கைகளில் இருக்கின்றது என அரசியல் கைதிகளின் விடுதலைக்கான தேசிய அமைப்பின் ஏற்பாட்டாளர் அருட்தந்தை எம். சக்திவேல் கூறியுள்ளார். தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் நேற்று (வியாழக்கிழமை) வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனை சந்தித்த பின்னர் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே...
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை, எதிர்வரும் வரவுசெலவுத் திட்ட வாக்கெடுப்பின்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பு முக்கிய விடயமாக முன்வைக்குமானால் போராட்டத்தை கைவிட தயாரென தமிழ் அரசியல் கைதிகள் குறிப்பிட்டுள்ளனர். அரசாங்கத்திடம் இவ்விடயத்தை இப்போதே தெரிவித்து, அது தொடர்பில் தமக்கு வாக்குறுதி வழங்கவேண்டுமென அவர்கள் தெரிவித்ததாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார்....
வடக்கில் திட்டமிட்ட அடிப்படையில் தொல்பொருள் அழிப்பு இடம்பெறவில்லை என்று உயர் கல்வி மற்றும் காலசார அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று (புதன்கிழமை) அமைச்சரவை விளக்க நேரத்தின்போது கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “வடக்கு கிழக்கில் தொல்பொருட்கள் அழிக்கப்படுகின்றன என்று கூறி இனவாதத்தை தூண்டுவதற்கு சிலர்...
ஒதிய மலைக் கிராமத்தை ஒருநாள் விடியற்காலைநேரம் சுற்றிவளைத்த இராணுவத்தினர் அக் கிராமத்தில் வசித்து வந்த வயது வந்த ஆண்கள் அனைவரையும் ஒதியமலைச் சனசமூக நிலையத்திற்கு அழைத்துச் சென்று படுகொலை செய்துள்ளனர் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கேஸ்வரன் தெரிவித்துள்ளார். வாரத்துக்கொரு கேள்விக்கு பதில் வழங்குகையிலேயே வடக்கு முதல்வர் அவ்வாறு தெரிவித்துள்ளார். கேள்வி–மணலாற்றில் தொடங்கியசிங்களக் குடியேற்றம் மகாவலிஅதிகாரசபையால் தொடர்ந்துநடைமுறைப்படுத்தப்பட்டுவருவதாகக்...
யாழ்ப்பாணம் கோண்டாவில் ஞானவீர சனசமூக நிலையத்திற்கு அருகாமையில் உள்ள பலசரக்கு கடை மீது வாள்வெட்டுக் கும்பல் ஒன்று தாக்குதல் நடத்தியுள்ளது. இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்தவர்கள், நேற்று (செவ்வாய்க்கிழமை) மாலை இத்தாக்குதலை நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். தாக்குதலில் எவருக்கும் காயம் ஏற்படாதபோதும், கடைக்கு பாரிய சேதம் விளைவிக்கப்பட்டுள்ளது. கடையிலுள்ள பொருட்களை கொத்தி நாசமாக்கி, சேதப்படுத்திச் சென்றுள்ளனர்....
அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யாழ்.பல்கலைகழக மாணவர்கள் அனுராதபுர சிறைச்சாலையை நோக்கி நடைபவணியை ஆரம்பித்து உள்ளனர். யாழ்.பல்கலைகழக வளாகத்தினுள் உள்ள பரமேஸ்வரன் ஆலய முன்றலில் இருந்து இன்று செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணியளவில் இந்த நடைபயணத்தை ஆரம்பித்துள்ளனர். “அரசியல் கைதிகளை நிபந்தனையின்றி விடுதலை செய், அரசியல் கைதிகளின் விவகாரம் ஓர் சட்ட விவகாரம் அல்ல –...
யாழ்ப்பாணத்தில் இடம்பெறும், பிரச்சினையான நிலமைகளை கட்டுபடுத்த, எந்த சந்தர்ப்பத்திலும் உதவிகளை வழங்க இராணுவம் தயாராக இருப்பதாக தளபதி மேஜர் ஜெனரல் மகேஸ் சேனாநாயக்க தெரிவித்தார். கதிர்காமத்தில் இடம்பெற்ற சமய வழிப்பாடுகளில் கலந்துக் கொண்ட தளபதி லெப்டினல் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க, அங்கு ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட போது இதனைத் தெரிவித்துள்ளார். வடக்கில் இடம்பெற்றுவரும் வாள் வெட்டு...
விடுதலை புலிகள் மீண்டும் வரவேண்டும் என பகிரங்க மேடையில் பேசியதால் இன்று விஜயகலா எம்பி சிக்கலில் இருக்கிறார். ஆனால், நீதிமன்றத்துக்கு போய், புலிகளின் மீதான தடையை நீக்க சொல்லி எவரும் வழக்கு தொடரலாம். வாதங்களை முன் வைக்கலாம். அதற்கு அனைவருக்கும் உரிமை உண்டு. நீதிமன்றத்தில் போய், நீதியின் பாதுகாப்பில் இருந்தபடி, இன்று புலிகள் ஆயுத போரில்...
தமிழீழ விடுதலைப் புலிகளின் தளபதிகளான குமரப்பா புலேந்திரனின் நினைவுத் தூபியை அமைப்பதற்கு பொலிஸாரால் தடை விதிக்கப்பட்டுள்ளது. வல்வெட்டித்துறை, தீருவில் பகுதியில் குமரப்பா புலேந்திரனின் நினைவுத் தூபியை அமைக்க அடிக்கல் நாட்டுவதற்கு இன்று (வெள்ளிக்கிழமை) காலை ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. இதனை எதிர்த்து போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் அப்பகுதியில் பெரும் குழப்பம் ஏற்பட்டிருந்தது. இதன்போது புலிகளுக்கு தூபி அமைக்கப்படுவதாக...
தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனா அல்லது வேறு யாருமா? என வட. மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் கேள்வியெழுப்பியுள்ளார். சம்பந்தன் மௌனம் காப்பதனால் தனக்கு நன்மை எதுவும் ஏற்படப்போவதில்லை என்றும் அவர் கூறியுள்ளார். அமெரிக்காவின் இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான பதில் தூதுவர் ரொபேட் ஹில்டன் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை நேற்று (வியாழக்கிழமை) மாலை சந்தித்தார்....
வடக்கு கிழக்கு பிரதேசங்களில் மக்களுக்கு சட்டரீதியாக உரிமையுள்ள காணிகளை எதிர்வரும் டிசம்பர் மாதம் 31ம் திகதிக்கு முன்னர் விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு துறைசார்ந்த அதிகாரிகளுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பணித்துள்ளார். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்திக்காக நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி செயற்குழுவின் கூட்டம் நேற்று மூன்றாவது முறையாக இடம்பெற்ற போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதனை...
யாழ்ப்பாணத்தில் சட்டவிரோதமாக கட்டப்படும் கட்டடங்கள் காரணமாக நிலத்தடி நீர் இல்லாமல் போகும் அபாயம் காணப்படுவதாக சிரேஷ்ட பொறியிலாளர் ம.இராமதாசன் குறிப்பிட்டுள்ளார். அதுமட்டுமன்றி யாழ். குடாநாடு முழுவதும் நீரில் மூழ்கும் அபாயம் காணப்படுவதாகவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். யாழ். ஊடக அமையத்தில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார். சட்டவிரோத கட்டடங்களால்...
இலங்கையில் இடம்பெற்ற இறுதி கட்ட போர் தொடர்பான உண்மைகள் தமக்கு தான் தெரியும் என ஜனாதிபதி மைத்திரபால சிறிசேன தெரிவித்திருந்தார். அவ்வாறாயின் உண்மை கண்டறியப்பட வேண்டிய பொறிமுறையில் முதலாவதாக ஜனாதிபதியே சாட்சியமளிக்க வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். இலங்கையில் இடம்பெற்ற போர் குற்றங்கள் தொடர்பாக உண்மை கண்டறியப்படல் மற்றும்...
வவுனியா நகரின் பல பிரதேசங்களில் ஆவா குழுவின் பெயரில் துண்டுப் பிரசுரங்கள் கண்டெடுக்கப்பட்டதாக வவுனியா பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்துள்ளனர். வவுனியாவின் குருமங்காடு, வைரவபுலியியங்குளம், புகையிரத வீதி, கண்டி வீதி ஆகிய இடங்களில் இந்த கையேடுகள் பங்கிடப்பட்டுள்ளதாக வவுனியா பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்துள்ளனர். ´நாம் மக்களின் பிரச்சினைகளுக்கு எப்போதும் உடனிருப்போம், நாம் மக்களின் எதிரியல்ல, எந்தவொரு நேரத்திலும்...
Loading posts...
All posts loaded
No more posts
