Ad Widget

இலங்கை படைகளின் பாலியல் குற்றங்களையும் அம்பலப்படுத்துகிறது #MeToo!

இறுதிக்கட்ட போரின்போது இராணுவத்திடம் சரணடைந்த பெண் விடுதலை புலி உறுப்பினர்கள் பலர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டமையை உறுதிப்படுத்தும் இன்னொரு சான்றாக #MeToo பரப்புரையில் தகவல் ஒன்று வெளிவந்துள்ளது.

இந்தியா, இலங்கை உட்பட உலகம் முழுவதும் தற்போது பெரும் பூதாகரமான பிரச்சினையாக #MeToo விவகாரம் காணப்படுகின்றது. குறிப்பாக பெண்கள் சமூகத்தில் எதிர்நோக்கிய பிரச்சினைகளை வெளிக்கொண்டுவரும் முகமாக #MeToo பதிவு பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

அதன் அடிப்படையில் கடந்த 2009 ஆம் ஆண்டு இறுதி யுத்தத்தின் போது சரணடைந்த பாடசாலை மாணவி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக புதிய சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், 2009 ஆம் ஆண்டு இறுதி யுத்தத்தில் விடுதலை புலிகள் வலுக்கட்டாய ஆட்சேர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அந்தவகையில் விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைக்கபட்டடிருந்த A. உஜாலினி என்ற பாடசாலை மாணவி, யுத்தம் நிறைவடைந்த இறுதித் தருணங்களில் பொதுமக்களுடன் சேர்ந்து இராணுவத்தினரிடம் சரணடைந்திருந்தார்.

இவ்வாறு சரணடைந்த குறித்த மாணவி அன்று பாதுகாப்பு செயலராக இருந்த கோட்டபாயவின் உத்தரவின் பேரில் 58 ஆவது பிரிவினரால் பாலியல் வன்புணர்விற்கு உற்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார் என டிவிட்டரில் அம்சவள்ளி என்ற பெண் ஒருவர் #MeToo பரப்பு்ரையில் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே இராணுவத்தினர் மீது பல குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ள நிலையில், மேலும் நெருக்கடி குடுக்கும் வகையில் இந்த புதிய சர்ச்சை தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவ ஆரம்பித்திருக்கின்றது.

எனவே, இதுவரை பெண்களுக்கு எதிரான பாலியல் தொந்தரவுகளை வெளிப்படுத்த பயன்படுத்தப்பட்டு வந்த #MeToo பரப்புரையில் இலங்கை படையினரால் பாதிக்கப்பட்டு பல்வேறு நாடுகளிலும் வாழ்ந்து வருகின்ற ஆயிரக்கணக்கானவர்கள் தங்களுக்கு ஏற்பட்ட அவலங்களை வெளிப்படுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

விடுதலை புலிகளுடனான இறுதி போரின் போது பல பெண்கள் பாலியல் வன்புணர்வுக்கு உற்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டதாக தற்போது வரை பல குற்றச்சாட்டுக்கள் காணப்படுகின்ற போதும் அதற்கான நீதி இன்னமும் நிலைநாட்டப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts